நம்பமுடியாதது ஆனாலும் உண்மை Bakersfield, California, USA 64-0206B 1என் சகோதர சகோதரிகளே, உங்களுக்கு என் நன்றியைத் தெரி - வித்துக்கொள்கிறேன். என் உடன் ஊழியக்காரர்கள், மற்றும் இங்குள்ள கிறிஸ்துவின் ஊழியக்காரர்கள், சுவிசேஷத்தில் என் கூட்டாளிகள் ஆகிய உங்கள் எல்லோர் மத்தியிலும் இன்று காலை நான் பேசு வதை என்னுடைய மிகச் சிறந்த சிலாக்கியமாகக் கருதுகிறேன். எனக்கு பேச்சுத்திறன் இல்லாதபடியினால் என்னால் சிறந்த பிரசங்கத்தை நிகழ்த்த முடியாது. நான் மனிதர்களை ஒன்று கூட்ட விரும்புவேன். விசேஷமாக கூட்டங்களை பொறுப்பேற்று முன்னிலையில் நின்று நடத்தும் மனிதர் களை ஒன்று கூட்ட விரும்புவேன். (பாருங்கள்?) மேலும் நான் எந்த நம்பிக்கைக்காக போராடிக் கொண்டிருக் கிறேன் என்பதையும், இது ஒரு மூடநம்பிக்கையால் நிறைந்தது அல்ல என்பதையும், இது சுவிசேஷம் என்பதையும் சகோதரர்களாகிய நீங்கள் பார்க்க வேண்டுமென்று விரும்புகிறேன். 2அநேக ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய முதல் வருகையை போனிக்ஸ், அரிசோனாவிற்கு தந்தபோது.... அந்த மூலையில் அமர்ந்திருக்கும் எனது நல்ல நண்பர் காரல் வில்லியம்ஸ் அவர்களோடு நான் இன்று காலை ஆகாரத்தை மகிழ்ச்சியாக அனுபவித்தேன். சகோ. காரல் வில்லியம்ஸ் அவர்களோடு உங்கள் எல்லாருக்கும் பரிட்சியம் உண்டாயிருக்கும் என்று யூகிக்கிறேன். சகோதரனும், சகோதரி வில்லியம்ஸ் அவர்களை எழுந்து நிற்க கேட்கிறேன். போனிக்ஸில் உள்ள வர்த்தகர்களுக்கான முழு சுவிசேஷ அமைப்பில் அவர் தலைவராயிருக்கின்றார். ஆகவே, அவர் எனது விலையேறப்பெற்ற நண்பர் என்று நிரூபணமாகியுள்ளது. 3கடந்த வாரத்திற்கு முன், அல்லது அதற்கு முந்திய வாரத்தில் போனிக்ஸில் நடந்த கூட்டத்தில், நான் போனிக்ஸிற்கு முதன் முறை யாக வந்ததைக் குறித்து கூறினேன். நான் சிறுவனாக இருந்த காலத்தை நினைவு கூறுகிறேன். என் தகப்பனார் ஒரு குதிரை சவாரி செய்பவராக இருந்தார். ஆகவே நான் ஒரு பெரிய பண்ணை நிலத்தில் கால்நடைகளை மேய்க்கும் மனிதனாக (Cowboy) ஆக விரும்பினேன். அச்சமயத்தில் என்னால் முடிந்த அளவு குதிரை சவாரி செய்வோனைப் பற்றிய மேற் கத்திய பத்திரிகைகளைப் படித்து அதிக அளவில் படங்களைப் பார்த் தேன். என் தகப்பனார் ஒரு குதிரை சவாரி செய்பவராய் இருந்தார். அதைக் கண்ட நானும் அவ்விதமிருக்க எண்ணம் கொண்டேன். நிச்சய மாக என்னாலும் குதிரை சவாரி செய்ய முடியும் என்று நான் எண்ணி னேன். ஆகவே நான் மேற்கிற்கு வந்து ஒரு குதிரை சவாரி செய்பவனாக இருக்க வேண்டும் என்கின்ற குறிக்கோளை உடையவனாக இருந்தேன். மூடநம்பிக்கையின் மலையைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். ஹாலந்து தேசத்து மனிதனொருவனால் கைவிடப்பட்ட ஒரு சுரங்கம் அங்கு உண்டு என்றும், அது ஒரு கட்டுக்கதை என்றும் நான் நினைக் கின்றேன்... 4இது கால்நடைகளை வளைக்கும் (rodeo) காலம் போன்று ஆகிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொருவரும் சாய்வரி நெசவுடைய பருத்தித் துணியினாலான ஊதா நிறமுள்ள கால் சட்டைகளையும் (jeans - ஜீன்ஸ்) ஒரு பெரிய தொப்பியையும் அணிந்து கொண்டிருக்கின்றனர். பழைய காலத்தவரைப் போன்று வாழ அவர்கள் முயற்சிக்கின்றனர். வேறொரு காலத்தில் வாழ்ந்த வாழ்க்கையை இன்று வாழ்கின்றனர். பாருங்கள்? அவர்கள் ஏன் அவ்விதம் செய்கின்றனர் என்பதைக் குறித்து நான் அதிச யித்தேன். ஏதோ ஒன்று அவர்களுக்குள் இருந்து அவ்விதம் அவர்களை செய்ய வைக்கிறது. இங்குள்ள கிறிஸ்தவ சமுதாயத்தினரிடமும் அதே காரியம் இருக் கின்றது என்பதைக் கவனியுங்கள். கடந்து போன காலத்தில் உள்ள தைப் போலவும், கடந்த ஏதோ ஒரு காலத்தில் யாரோ ஒருவர் கூறின பிரகாரமாகவும் நாம் வாழ முயற்சிக்கின்றோம். அது இக்காலத்திற்குப் பொருந்தாது. ஆனால் பழைய காலத்து நாகரீக எண்ணம், ஏதோ ஒரு அமெரிக்க ஆடல் வகையைச் சார்ந்த நடனத்தையும் (barn dance) அல்லது, ஏதோ ஒரு கால்நடை மேய்க்கும் மனிதனாகவும் (cowboy) அல்லது அதைப் போன்ற ஏதோ ஒரு காரியத்தை அவர்கள் விரும்புவது ஓர் புதிரான காரியமாக இருக்கின்றது. ஆனால் உண்மையில் அவர்களினுள் இருக்கும் காரியம் பழைய சுவிசேஷத்திற்கு திரும்பிச் செல்ல விரும்புவதேயாகும். இக்காலத்திற்கு பொருந்தக்கூடிய புதிய அலங் கரிக்கப்பட்ட சுவிசேஷத்தையும் கலாச்சாரத்தையும் விரும்புகின்றனர். பழைய பாங்கு சுவிசேஷத்தை அவர்கள் விரும்புவதில்லை. ஆனாலும் அவர்களுக்குள் இருக்கின்ற உண்மையான காரியம் அவர்களை திரும்பவும் பழையதற்கு செல்ல அழைக்கின்றது. அங்குதான் அது செல்ல வேண்டும். அவ்விதம் செல்வதற்கு பதிலாக அவர்கள் வேறு ஏதோ ஒன் றிற்குச் செல்கின்றனர். பிறகு, தேவனிடத்திலிருந்து வருகின்ற ஏதோ ஒரு காரியமானது காட்சியில் கொண்டு வரப்படும்போது, அது அவர்களுக்கு மிகவுமாக அதிர்ச்சியூட்டுகின்ற ஒன்றாகவும், வினோதமான ஒன்றாகவும் அவர்களுடைய நன்னெறி நடைமுறைகளுக்கு ஏற்ப இருக்காத ஒன்றாகவும் அது உள்ளது. ஆகவே, அதை ஏற்க விரும்புகிற தில்லை . 5ஜான் வெஸ்லி, சாங்கி, பின்னி, நாக்ஸ், கால்வின் போன்ற தேவ மனிதர்களைப் பாராட்டும் தேவ ஊழியக்காரராகிய நம்மைப் போன்று வேறு ஒருவரும் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதில்லை. ஆனால் பாருங்கள், நாம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறோம். நாம் அந்த காலத்தில் இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு அளவின்படி ஊழியம் செய்தனர். இன்றைக்கு நாம் அவர்கள் கொண்டிருந்த அளவைக் காட்டிலும் ஒரு வித்தியாசப்பட்ட அளவின் படி தேவனுக்கு ஊழியம் செய்கின்றோம். நாளை என்று ஒன்று இருக்கு மானால் ஒரு காலம் அங்கே உண்டாகும். அந்த காலத்திற்கென்று ஒரு சுவிசேஷம் இருக்கும். அது பூரணப்பட்ட ஒன்றாக தேவனில் முடி வடையும் வரையில் இன்னுமாக அது தொடர்ந்து சென்று கொண் டிருக்கும். பிறகு தேவனும் நம்மில் ஒருவராகி விடுகின்றார். 6இப்பொழுது, ஒரு கைவிளக்கை எடுத்துக்கொண்டு மூடநம்பிக் கையின் மலைக்குச் சென்ற அந்த காலை வேளையை நான் நினைவுக் கூறு கிறேன். அதைப் பார்க்க என்னால் காத்திருக்க முடியாதிருந்தது. நான் அங்கு செல்ல வேண்டியதாயிருந்தது. என் கையிலிருந்த சிறிய கை விளக்கினால் ஓர் பிரயோஜனமும் இல்லை. ஏனெனில் அங்கு அதினால் நான் எதையும் பார்க்க முடியவில்லை. அங்கு மகத்தான பிசாசு போன்ற நிழல்கள் இருந்தன. தங்கத்தை தேடி சென்ற மனிதர்கள் அங்கு கொல் லப்பட்டனர் என்பது போன்ற மூடநம்பிக்கையான காரியங்களை உடை யதாயிருந்தது அந்த இடம். என் சிறிய கைவிளக்கின் மூலம் அங்கு சுற்றிப் பார்க்க முயற்சித்தேன். ஆனால் ஒன்றையும் பார்க்க முடிய வில்லை. அங்குள்ளயாவும் பயமுறுத்துவதாக இருந்தது. அப்பொழுது நான் என்ன செய்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா? சூரியன் கிளம்பி வரும்வரை நான் அங்கு அமைதியாக உட்கார்ந்து காத்திருந் தேன். எல்லா வெளிச்சத்திற்கும் ராஜாவாகிய அந்த சூரியன் மேலே எழும்பி வந்தபோது, என் கைவிளக்கு எந்த காரியத்தையும் செய்ய வில்லை. ஆனால் பிசாசு போன்ற அனைத்து நிழல்களும் மறைந்து போயின. அப்பொழுது அந்த மூடநம்பிக்கையின் மலை பிசாசு போன்ற தோற்றமுடையதாய் இல்லை என்பதை நான் கண்டேன். நான் இப் பொழுது அதற்குள் நடந்து சென்று நானே அதை கண்டுபிடிக்க ஆயத்த மானேன். ஏனெனில், அந்த மகத்தான வெளிச்சம், அந்த சூரியன், அது தேவனுடைய உரைக்கப்பட்ட வார்த்தையாய் இருந்தது. தேவன், ''வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்று கூறினார். அந்த தேவனுடைய வார்த்தையானது வெளிப்படையானது. அது தன்னை காண்பித்தபோது எல்லா பிசாசு போன்ற நிழல்களும் மறைந்துவிட்டன. 7ஆகவே இன்றைக்கும் அவ்வாறே உள்ளது என்று நான் எண்ணு கின்றேன். சகோதரர்கள் மத்தியில் மிகவும் நான் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் உள்ளேன். ஆகவே அந்த மகத்தான வெளிச்ச மானது, வெளிச்சத்திற்கெல்லாம் ராஜா... வேறு வெளிச்சம் கிடையாது. இன்று நம்மால் உண்டாக்கப்பட்ட வேறு எந்த வெளிச்சங்களும் அங்கே பிரகாசிக்காது. எத்தனை பீரங்கி குண்டுகளை நாம் வீசினாலும் அது ஒரு பொருட்டல்ல, உன்னால் ஒன்றையுமே காண இயலாது. ஒரு சிறு வெளிச் சம்கூட இருக்கின்றதா என்று நீங்கள் காண வேண்டுமென்றால் சரியாக அதன் முகப்பிற்குள் நீங்கள் உற்று நோக்க வேண்டும். இந்த சூரியன் எல்லாவற்றையும் ஒன்றுமில்லாமல் செய்துவிடும். அது வெளிப்படுத் தப்பட்ட தேவனுடைய வார்த்தையாய் இருக்கின்றது. ஆகவே, வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையானது நம்முடைய எல்லா மூட நம்பிக்கை, குருட்டு பழக்க வழக்கங்கள் மேல் எழும்பும்போது, அவை மறைந்துபோகும் என்று நான் எண்ணுகின்றேன். பாருங்கள்? சத்தியம் என்னவென்றும், நாம் எந்த மணி நேரத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்பதையும் நாம் அறிய விரும்புகிறோம். சகோதரர்களே, இக்காலை நேரத்தில் வித்தியாசமான ஸ்தாபனங் களாக, அவைகளைப் பிரதிநிதிப்படுத்தி இங்கு அமர்ந்திருக்கிறோம். அது ஒரு பொருட்டல்ல என்று நான் எண்ணுகிறேன். 8கொலரடோ பிரதேசத்தில் நான் மந்தை மேய்த்திருக்கிறேன். அந்த நேரத்தை நான் நினைவு கூறுகிறேன். வசந்த காலத்தில் நாங்கள் மந்தையை சுற்றி வளைத்து அரப்போ காட்டிற்குள் அனுப்புவோம். அங்கு அநேக நாட்கள் நான் என் கால்கள் சேணத்தின் மேல் தொங்க கவனிப்பதுண்டு. தனியார் நிலத்தினின்று வேலி வழியாக காட்டிற்குள் போகும் மந்தையை காட்டிலாக்கா அதிகாரி எண்ணுவதை, என் காலை சேணத்தின் மேல் தொங்கவிட்டு உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருப்பது உண்டு. 9ஒவ்வொரு அமெரிக்க கால் நடை வளர்ப்புப் பண்ணையும் (ranch) அங்கு வைக்கப்பட வேண்டிய ஒரு மாட்டிற்குத் தேவையான, ஒரு பெருங்கட்டிற்கு அளவு கால் நடை தீவனத்திற்காக அறுத்து உலர்த்தப் பட்ட புல்லை உற்பத்தி செய்தாக வேண்டும். நான் நம்புகிறேன்... ஒரு பெருங்கட்டு அளவு உலர்ந்த புல் அல்ல, ஒரு டன் எடையுள்ள உலர்ந்த புல் (அதாவது 4480 ராத்தல் எடை - தமிழாக்கியோன்). ஒரு மாட்டிற்கு இரண்டு டன் என்று நினைக்கின்றேன். உங்கள் வகையுடன் அங்கே நீங்கள் செல்ல செல்ல வணிகத்துறை உங்களுக்கு அனுமதி அளிப்ப தைப் பொறுத்து இருக்கின்றது. ஏனென்றால் இந்த வகையைச் சார்ந்த, இந்த அமெரிக்க கால்நடை வளர்ப்புப் பண்ணை குறிப்பிட்ட அளவு உலர்ந்த புல்லை உற்பத்தி செய்கின்றது. ஆகையால் ஒரு மாட்டை அங்கே காட்டிற்குள் மேயவிடலாம். மிகுதியான மந்தை அங்கு காட் டில் மேய்த்துவிடாமல் அதற்கு போதுமானபடி அமைந்திருக்கும். அராப்போ காட்டிலே ஒரு பகுதியில் ஹெரிப்போர்ட் சங்கத்தின் மாடுகள் மேய்வதை நான் கவனித்திருக்கிறேன். அந்த காட்டிலாக்கா அதி காரியையும் நான் கவனித்திருக்கின்றேன். எங்களுடைய நிறுவனத்தின் பெயர் பழைய டர்கி டிராக். டிரிபாட் என்னும் நிறுவனம், அவர்கள் எங்களுக்கு மேல் புறம் இருப் பார்கள். திரு.கிரிம்ஸ் என்பவருக்கு அநேக நூறு மந்தைகள் இருந்தன. அதை மேய்க்க அவருக்கு 15 ஆட்கள் இருந்தனர். நான் பணிபுரிந்த நிறுவனத்திற்கு 400 அல்லது 500 மாடுகள் இருந்தன. ஆனால் திரு. கிரிம்ஸ் அவர்களின் மேய்ச்சலில் 1800 மாடுகள் இருந்தன. அந் நிறுவனத்தின் பெயர் டயமண்ட் பார் என்பதாகும். 10நான் அந்த காட்டிலாக்கா அதிகாரியை கவனித்தேன். அவன் அங்கு நின்று கொண்டு மாடுகள் அதன் வழியாக போகும்போது எண்ணுவான். அவன் அவைகள் எந்த நிறுவனத்தின் வகையைச் சேர்ந் தவைகள் என்ற காரியத்தில் ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை. மாறாக மாட்டின் காதில் தொங்கும் இரத்த வகையைக் குறிப்பிடுகின்ற குறிப்பை உடைய சீட்டை மட்டுமே கவனித்தான். ஏனெனில் மாடுகள் புல்மேயப் போகும் முன்பு ஹெரிபோரிட் நிறுவனத்தினால் பதிவு செய் யப்படவேண்டும். இக்காரியம் விலங்கின் மரபுக்கால் வழி குறிப்புகளை நீங்கள் வைத்திருப்பதாகும். பாருங்கள்? உங்கள் மாடு குருதி மரபு வழியைச் சார்ந்ததாக இருக்க வேண்டும். உங்கள் கன்று ஒரு மரபு வழி யாக வந்திருக்கின்ற ஒரு காளையிலிருந்து வரவேண்டும். அவ்விதம் வந்த பலவித மாடுகள் அங்கு ஒன்றோடு ஒன்று கலந்திருக்கும். ஒவ் வொரு அமைப்பின் மாடுகளும் அதின் இரத்த ஊற்று வழி சரியாக அமைந்திருக்க வேண்டும். அதுதான் ஹெரிபோர்ட் நிறுவனத்தின் காரியம். 11நியாயத்தீர்ப்பின் நாளில் அது அவ்விதமாகத்தான் இருக்கப் போகிறது 'நாம் எந்தப் பிரிவை, வகையைச் சேர்ந்தவர்கள் என்று குறிக்கப்பட்டு நாம் அணிந்து கொண்டிருக்கின்ற அடையாள குறியீட்டு சீட்டை அவர் கவனிக்க மாட்டார். ஆனால் இயேசுகிறிஸ்துவாகிய, அந்த இரத்த குறியீட்டு சீட்டு இருக்கின்றதா என்று மாத்திரமே அவர் பார்ப்பார்'' என்று நான் அநேக தடவைகள் சிந்தித்ததுண்டு. அவர். இக்காலை நேரத்தில் நாம் நம்மை தேவ கூட்டு சபையாக மட்டுமோ, பரிசுத்த பெந்தெகொஸ்தேயினராக மட்டுமோ, அல்லது ஒன்றுபட்ட சபைகளாக மட்டுமோ கூடியிருக்க முயற்சிக்கக் கூடாது. அவ்விதமாக நாம் ஒருபோதும் செய்ய முடியாது. ஆனால் விசுவாசிகளாகிய நாமெல்லாரும் கூடத்தக்கதாக ஒரே ஒரு இடம் தான் உண்டு; அது இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் கீழே யாகும். ஆகவே தேவன் மனிதனை சந்தித்த அல்லது சந்திக்கப் போகின்ற இடம் ஒன்று மாத்திரமே இருக்கின்றது. அது இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் கீழேயாகும். அங்கேதான் நாம் பொதுவான காரியங்களை உடையவர்களாக இருக்கின்றோம். 12சமீபத்தில் ஒரு இளம் தம்பதியினரின் விவாகரத்து காரியத்தைக் குறித்து நான் படித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு பரிதாபத்துக்குரிய காரியமாக இருந்தது. அவர்கள் அநேக வருடங்கள் ஒன்றாக வாழ்ந் திருந்தனர். அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டதினால் அவர்கள் விவாகரத்து செய்துக்கொள்ள தீர்மானித்தார்கள். அப்பொழுது அவர்கள். வழக்கறிஞர் அவர்களுடைய நண்பராய் இருந்தார். அவர், “இப்பொழுது, நீங்கள் விவாகரத்தைப் பெற்றுக் கொண்டால், இந்த பொருட்களை விற்க யாராவது ஒருவரைத் தேட வேண்டியதாய் இருக்கும். ஆதலால் உங்களுக்கு எது தேவையாய் இருக்கின்றதோ அதை உங்களுக்குள் பகிர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினார். அதைச் செய்வதாக அவர்கள் கூறினர். ஆகவே அவர்கள் சம்பாஷிக்கும் அறைக்குச் சென்றனர். பரபரப்பாய் இருந்தனர். அங்குள்ள ஒவ்வொரு பொருள்களின் மேலும் அவர்கள் உரிமைக் கொண்டாடி சண்டைப் போட்டனர். பின்பு அவர்கள் வாழும் அறைக்கும், சாப்பிடும் அறைக் கும் சமையலரைக்கும் சென்றனர். எல்லா இடத்திலேயும் அதே காரியத்தைதான் செய்தனர். 13கடைசியாக மேல் மாடத்தில் சில பொருட்களை சேமித்து வைத் திருப்பதை ஞாபகம் கொண்டனர். ஆகவே அவர்கள் இருவரும் அந்த இடத்திற்கு சென்று உச்சி மேல் மாடி அறைக்கு (garret) சென்றனர். இங்கே இதை இவ்விதமாகக் கூறுகின்றீர்கள் என்று நான் யூகிக் கின்றேன் (காரட் - garret - தமிழாக்கியோன்) கிழக்கில் நாங்கள் அதை அட்டிக் (Attic) என்று அழைப்போம். ஆகவே அவர்கள் அந்த இடத் திற்குச் சென்று அங்கிருந்த ஒரு பழைய பெட்டியை எடுத்தனர். அதில் சில துணிகளையும், பொருட்களையும் அவர்கள் வைத்திருந்தனர். ஆகவே அவர்கள் இதைக் குறித்தும் அதைக் குறித்தும் பரபரப்பாய் கை நீட்டி இழுத்துக் கொண்டிருந்தனர். ஆகவே சிறிது நேரம் கழித்து, ஏதோ ஒன்றை இருவரும் கைகளை நீட்டி எடுக்க முயற்சித்தனர். அப்பொழுது அதை இருவரும் பிடுங்கிக் கொள்ள முயற்சித்தபோது இருவருடைய கரங்களும் பிணைந்து கொண் டன. அவர்கள் எடுத்த பொருள் ஒரு ஜோடு சிறிய வெள்ளைக் காலணி கள். அந்த வெள்ளைக் காலணிகள் அவர்களுடைய இணைப்பிற்கு கொடுக்கப்பட்ட, ஆனால் மரித்துப் போன குழந்தையின் காலணிகளாக இருந்தன. அங்கே அவர்கள் ஒருவருடைய கரங்களை ஒருவர் பிடித்துக் கொண்டு, ஒருவர் “இது என்னுடையது'' என்று கூறமுடியவில்லை. மற்றொருவரும் 'இது என்னுடையது'' என்று கூறமுடியவில்லை. ஏனெனில் அவர்கள் இருவருமே கொண்டிருந்த ஒன்றாக அது இருந்தது. ஒரு சில நிமிடங்கள் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர். ஏனெனில் அவர்கள் இருவரும் தனித்தனியே அதை உரிமை கூற முடியவில்லை. ஆகவே அவர்கள் இருவரும் ஒருவர் கரங்களில் ஒருவர் என அணைப்பிற்குள்ளாகினர். விவாகரத்து என்னும் காரியத் திற்கு அங்கு இடமில்லாமல் தள்ளுபடியாயிற்று. நீங்கள் இதைக் காண வேண்டுமென்று விரும்புகிறேன். நாம் பாப்திஸ்துகளாகவோ, மெத்தோடிஸ்டுகளாகவோ, தேவகூட்டுசபை யாகவோ, தேவ சபை என்று எவ்விதமாகவோ இருக்கலாம். நாம் வித்தி யாசப்பட்ட காரியங்களை உடையவராயிருக்கலாம். ஆனால், நம்முடைய பாரம்பரியங்கள் நம்மை அவைகளுக்குட்படுத்திவிட்டன. ஆனால் நமக்கு ஒரு காரியம் பொதுவாயிருக்கின்றது. சகோதரர்களே, அது கிறிஸ்துவாகும். அவரே வார்த்தையாயிருக்கிறார். அதைத்தான் நாம் இங்கு செய்ய வேண்டியவர்களாய் இருக்கின்றோம். நம்முடைய வித்தியாசப்பட்ட கருத்துக்களைப் பற்றி பேச அல்ல, மாறாக இயேசு கிறிஸ்து என்னும் பொதுவானவரைக் குறித்தே நாம் பேச வேண்டும். நாம் இப்பொழுது ஜெபம் செய்வோம். 14பரலோக பிதாவே, நீரே தகப்பனாயிருக்கிறீர். இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வதிக்கப்பட்ட உயிர்த்தெழுதலின் மூலம் இன்று நாங்கள் நித்திய ஜீவனுக்கான நம்பிக்கையை உடையவர்களாயிருப்பதற்காக உம்மை துதிக்கிறோம். சாயங்கால வெளிச்சமானது பிரகாசித்துக் கொண் டிருக்கிறதை நாங்கள் காண்கிறோம். முசுக்கொட்டை பூச்சி விட்டதை பச்சைப் புழுக்கள் தின்றன. பச்சைப் புழுக்கள் விட்டதை வெட்டுக் கிளிகள் தின்றன. இந்த பூச்சிகள் ஒரே பூச்சியினுடைய பல தோற்றங்கள் என்பதையும் அதன் ஜீவியத்தின் அடுத்த கட்டம் என்பதையும் நாங்கள் உணருகிறோம். சபை வித்தியாசங்கள் என்பது அன்று நிசாயாவில் ஆரம்பித்த அதே பழைய ரோமன் பூச்சி என்பதை நாங்கள் உணரு கின்றோம். ஆகவே ஒன்று எதை விட்டதோ அதை மற்றொன்று தின்றது. இன்று நாங்கள் பெரிய குழப்பத்திற்குள்ளாகி மகத்தான உலக மகா சபை, உலக சபைகளின் ஐக்கியம் ஆகியவற்றுக்குள் சென்று கொண் டிருக்கினறோம். நம்பிக்கை எல்லாம் அற்றுப்போய் ஒன்றும் மீதமாயில் லாதது போன்று காரியங்கள் காணப்படுகின்றன. ஆனால் இந்த மூட நம்பிக்கையான காரியங்களை வெளிக் காண் பிக்கத்தக்கதாக சூரியனானது மேலே எழும்புகையில் பிழையே இல்லாத தேவனுடைய வார்த்தையை நாங்கள் நினைவு கூறுகிறோம். ஆகவே கர்த்தர் உரைக்கிறதாவது: “வெட்டுகிளிகளும் பச்சைப் புழுக்களும் பட்சித்த எல்லா வருஷங்களையும் நான் திரும்ப அளிப்பேன்'' என்று நீர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர். அவை எவ்வாறு திரும்ப அளிக்கப் படும், எப்பொழுது அந்த மரமானது மறுபடியுமாக ஜீவிக்கும். பிதாவே, கிருபையையும் கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையையும் நீர் அனுப்பத்தக்கதாகவும், நீர் திரும்ப அளித்து, இந்நாளுக்குரிய ஜீவிக் கின்ற வார்த்தையினுள் இருக்கின்ற ஜீவிக்கின்ற விசுவாசத்திற்கு எங்களை உயிர்த்தெழச் செய்யுமாறு நாங்கள் ஜெபிக்கிறோம். அதை நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 15சகோதரர்களே, எனக்கு தொண்டை சற்று கரகரப்பாயுள்ளது. நான் ஒரு பேச்சாளனாக இல்லாதபடியால், இது நாம் சற்று ஒன்றுகூடும் நேரமாக உள்ளது. நான் என்ன கூற விழைகிறேன் என்பது உங்க ளுக்குப் புரியும். நான் இங்கிருக்கிறேன். உங்கள் மத்தியில் நான் இருக் கிறேன். இன்றைக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட வார்த்தைக்கு வெளியே நான் ஏதாகிலும் பேச நீங்கள் கண்டு பிடிப்பீர்களானால், அதை என்னிடம் வந்து கூறுவது உங்களது கடமையாயிருக்கின்றது. ஆனால் நான் கூறின பிரகாரமாக நாம் இசைந்து போகின்ற ஒரு காரியம் உள்ளது; அது கிறிஸ்து. அது நமக்கு பொதுவான ஒன்றாக இருக்கின்றது. ஏனெனில் அவர் நம்மெல்லோருக்காகவும் மரித்தார். நாம் அவரின் இரத் தத்தின் கீழிருக்கிறோம். இப்பொழுது, மனிதர்களாகிய உங்களுக்கு உதவ முயற்சிக் கின்றேன். ஆதலால் இந்த பொது கூடுதலானது, எழுப்புதலுக்குப் பிறகு ஒரு சிறந்த இடமாக திகழ உங்களுக்கு உதவ நான் இங்கிருக் கின்றேனே தவிர வேறொன்றிக்கும் அல்ல. ஏனெனில் அந்த நோக்கத் திற்காகத்தான் நாம் ஒன்று கூடியிருக்கின்றோம். நாம் ஒருவரோடு ஒரு வர் ஐக்கியப்படவும் ஒருவரையொருவர் அறிந்துக்கொள்ளவும், இங்கு கூடி வந்திருக்கிறோம். அதற்காகத்தான் இந்த காலை வேளையில் நான் இங்கு உள்ளேன். இங்கே இந்த கூட்டத்தை வைத்தற்கான நம்முடைய நோக்கமும் அதுவேயாகும். ஆதலால் நாம் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள இயலும். 16இப்பொழுது, எல்லாக் காலங்களிலும் அது அவ்விதமாகத்தான் இருந்தது என்பதை உணருகின்றோம். குறிப்பிடத்தக்க, தனி சிறப்பிற் குரிய ஏதாவது ஒரு காரியமோ அல்லது வித்தியாசமான ஏதாவது ஒன்று நடக்குமாயின், அநேக மாம்சீக போலியான காரியங்கள் அதைப் பின் தொடருவதை நீங்கள் உடையவர்களாய் இருக்கிறீர்கள். பிறகு எல்லா விதமான மூட நம்பிக்கைகளும், கட்டுக்கதைகளையும் நீங்கள் உடை யவர்களாய் ஆகின்றீர்கள். அது அவ்விதமாகவும், அப்படியாகவும்தான் இருக்க வேண்டும். ஆகவே அதைக் குறித்து கூறப்படும் காரியங்கள் உண்மையானது அல்ல. அது எப்பொழுதும் அவ்விதமாகத்தான் இருந்து வருகின்றது என்பதை நாம் அறிவோம். இயேசு தவறாகப் பிறந்த குழந்தை என்று கருதப்பட்டார். ஆனால் அவர் அவ்விதமாயில்லை. வேதம் எப்படி கூறினதோ அவ்விதமே அவர் சரியாக இருந்தார். அந்த மனிதர்கள் அவரை அழைத்தவிதம்.... ஆனால் அவர் தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாடாயிருந்தார். அது தெளி வாயிருக்கின்றது. “அவருடைய சீஷர்கள் ரோம சேவகருக்கு காசுக் கொடுத்து அவ ருடைய சரீரத்தை திருடிச் சென்று விட்டனர்” என்று அவர்கள் கூறினதை நீங்கள் கவனியுங்கள். அவர்கள் இன்னும் அதை நம்புகின்றனர். ஆனால் அவரின் ஜீவிக்கிற பிரசன்னத்தின் மூலம் அவர் மரித்தோரிலி ருந்து உயிர்த்தெழுந்தார் என்றும், நம்முடன் இங்கு இப்பொழுது இருக் கிறார் என்றும் நாம் அறிந்து விசுவாசிக்கின்றோம். நாம் நிச்சயமாக அதை அறிந்திருக்கிறோம். நீங்கள் இதை கவனிப்பீர்களானால், அவரால் உரைக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும், காலங்களினூடே அவரால் செய்யப்பட்ட வாக்குத்தத்தமும் நிறைவேறியுள்ளன. தேவனைத் தவிர அதை வேறொன்றினாலும் செய்ய இயலாது. நாம் அவருடைய ஊழியக் காரராயிருக்கின்றோம். 17சகோதர சகோதரிகளே, நாம் இங்கு ஒரு சிறிய ஐக்கியம் கொண் டுள்ள இந்தக் காலை நேரத்திலே வேத வசனத்திலிருந்து ஒரு மூல வாக் கியத்தை வாசித்து பேச நான் இப்பொழுது எண்ணங்கொண்டேன். நான்... சகோ. ராய் அவர்களே, வீசுகின்ற அந்தக் காற்று எனக்கு அதிக இதமளிக்கவில்லை. அது பரவாயில்லை, தற்பொழுது அதை அவ்விதமே விட்டுவிடுங்கள். ஏனெனில் நான் சில நிமிடங்கள் மட்டுமே இங்கு தங்கியிருக்கப் போகிறேன். 18சில வருடங்களுக்கு முன்பு, சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு சவரன் தொழில் செய்யும் ஒரு மனிதனுடன் நான் வேட்டை யாடுவது வழக்கம், அவர் கால் காய்ப்பு மருத்துவ விற்பன்னரும் ஆவார் (chiropodist). அதாவது, பாதங்களில் மரத்துப்போன சதைகளை வெட்டியெடுப்பவரும்கூட. அக்காலமானது கடினமான ஒரு கால மாயும், பணம் இல்லாத ஓர் காலமாயும் இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆகவே என்னுடைய சவரத் தொழில் செய்யும் நண்பனான இவர்... நான் என்னுடைய தலை மயிரை சீவிக்கொண்டிருந்தேன். அப்பொழுது... அவர் என்னுடைய தலை மயிரை கத்தரித்துக் கொண்டி ருந்தார். தோளின் மீது பொடுகு இருப்பதை அவர் கண்டார். அவர், “பில்லி, நீங்கள்... உம்முடைய மேற்சட்டையின் மேல் அதிக பொடுகு விழுந்துள்ளது. ஆதலால் உமக்கு, மயிரை தூய்மையாக்கும் நுரைக் கின்ற திரவத்தை (shampoo - ஷாம்பூ) சிறிது தடவி சுத்தமாக்க வேண்டும்'' என்று கூறினார். ஆகவே நான் “சரி ஜிம்மி'' என்று கூறினேன். ஆகவே அவர் அமெரிக்க கரடி இன வகை (Coon) வேட்டை யைக் குறித்து பேசிக் கொண்டேயிருந்து, சற்று திரும்பி, என் தலையில் தடவவேண்டிய ''லக்கி டைகர் ஷாம்பூ“ (Lucky Tiger Shampoo) என்று நினைத்து கார்பாலிக் ஆசிட் திரவத்தை (Carbolic acid) (நச்சரி நீர்ம வகை -தமிழாக்கியோன்) என் தலையிலே கொட்டிவிட்டார். (நான் அவருடைய போதகராக இருந்தேன்; அவர் ஞாயிறு பள்ளி பாடங்கள் கற்றுக் கொடுப்பவராக இருந்தார்; அவர் ஒரு அருமையான மனிதன் ஆவார்.) அநேக வாரங்கள் நான் என் தலையின் மேல் ஒரு சிறிய தொப்பியை அணிந்திருந்தேன் (காலில் போடும் காலுரை செய்யப்படும் துணியினால் நெய்யப்பட்டது - தமிழாக்கியோன்). இன்றுவரை அது என்னை தொந்தரவு செய்கின்றது. பாருங்கள்? அந்த சிறிய... என் தலை யோடு இன்னும் மிருதுவாயிருக்கின்றது. ஆகவே, இல்லை. அது -அது- அது- இப்பொழுது பரவாயில்லை ஏனெனில் கடந்த இரவு நான் சற்று பாதிக்கப்பட்டேன். ஒரு சிறிய முடிபாகத்தை நான் அணிந்துக்கொள்ள என் மனைவி வாங்கி வந்திருந்தாள். பிரசங்கப் பீடத்தில் என்னால் தொப்பியை அணிந்து கொள்ள முடியாது. ஏனெனில் அது கிறிஸ்துவுக்கு மரியாதை குறைவைக் கொண்டு வரும். ஒரு சிறியத் தொப்பியை அணிவே னென்றால், ஜனங்கள் ''நீ ஒரு அத்தியட்ஷ குருவாக விரும்புகிறாயா'' (பிஷப்) என்று கூறுவர். அது ஒரு பிரச்சனையான காரியம். என் மனைவி அதை எனக்கு வாங்கி வந்தாள். ஆனால் அதை அணிந்து கொள்ள போதுமான துணிவு எனக்கில்லை. அதை அணிய வேண்டு மென்று விரும்பினேன். ஆனால் அதைச் செய்யவில்லை. ஏனெனில் அது ஏதோ ஒன்றை பிரதிபலித்துவிடுமோ என்று பயந்தேன். உங்களுக்கு தெரியுமா? ஆகவே அதை அவ்விதமாகவே விட்டுவிட வேண்டியதா யிற்று. அவ்வாறு நான் யூகிக்கின்றேன். 19இப்பொழுது நான் சில வேத வசனங்களை படிக்க விரும்புகிறேன். என்னுடைய வார்த்தைகள் தவறும். ஆனால் தேவனுடைய வார்த்தையோ ஒரு போதும் தவறுவதில்லை. ஒவ்வொரு காலங்களிலும் அது அப்படித் தான் என்பதை நீங்கள் நினைவுக்கூற நான் விரும்புகிறேன். “தேவன் ஆதியிலே வார்த்தையாயிருந்தார். அவர் எப்பொழு தும் வார்த்தையாயிருந்தார். வார்த்தை என்பது ''எண்ணங்கள் வெளிச் சொல்லப்படுதலே” என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது, தம்முடைய சிந்தையில், முழுத் திட்டத்தையும் கொண்டவராய், துவக்கம் முதல் முடிவு வரை அறிந்திருந்து, அதை வார்த்தைகளிலே வெளிப்படுத்தினார். ஆகவே அந்த வார்த்தைகள் வெளிப்படையாக பிரசன்னமாயிற்று. சூரியனைப் போன்று, அது வெளிப்படையான, வெளியாக்கப் பட்ட தேவனுடைய வார்த்தையாகும். “வெளிச்சம் உண்டாகக்கட வது'' என்று கூறினார். அங்கு வெளிச்சம் உண்டாயிற்று. அங்கு பிரித்தலின் நேரம் உண்டாயிருந்தது. தேவன் இரவினின்று வெளிச்சத்தைப் பிரித்த நேரமாய் அது இருந்தது. அவ்விதமான பிரித்தலை அவர் எப்பொழுதும் செய்கின்றார். தேவன் ஜலத்தையும் பூமியையும் வெவ்வேறாக பிரித்த ஓர் நேரம் உண்டாயிருந்தது. அங்கே ஒரு வேறு... பவுலையும் பர்னபாவையும் அவர் வேறு பிரித்தார். எகிப்தி னின்று மோசேயை வேறு பிரித்தார். பாருங்கள், அவர் எப்போதும் வேறு பிரிக்கிறவராயிருக்கிறார். இப்படிப்பட்ட ஊழியங்களை சுமந்து செல்லும் மனிதன், மக்கள், அவ்வாறு செய்ய விரும்புவதில்லை. ஆனால் அது அவ்வாறே செய்யப்பட்டாக வேண்டும். பாருங்கள்? 20சீஷர்கள் தங்கள் சொந்த ஜனங்களிடமிருந்து தங்களை வேறு பிரித்துக்கொள்ள வேண்டிய ஓர் நேரம் உண்டாயிருந்தது. தேவனுடைய காணியாட்சியான யூதர்களிடமாக பிரிந்து பவுல் புறஜாதிகளிடமிருந்து திரும்பினான். அவன் அவ்விதமாக செய்யவேண்டிய ஒரு நேரம் வந்தது. அவர்கள் அவனுக்கு விரோதமாக பேசினார்கள். ஆனால் அவனோ, நான் அந்த பரமதரிசனத்திற்கு கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை'' (அப். 26:19) என்ற மகத்தான வார்த்தையை பேசினான். நானும் கூட அதே காரியத்தை உங்களுக்கு கூறட்டும் என் சகோ தரனே, பாருங்கள்? இன்றைக்குரிய தரிசனம், இன்றைய தினத்திற்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தரிசனமாகிய பரிசுத்த ஆவி இன்று தேசத் திலிருக்கிறார். நம்மீது இந்நாளில் தேவன் தமது பரிசுத்த ஆவியை ஊற்றுவார் என்று வாக்குத்தத்தம் அளித்திருக்கிறார். இப்பொழுது நான் இந்த தேசத்தில் முன்னும் பின்னுமாக பிரயாணம் செய்து வருகின்றேன். இயற்கைக்கு மேம்பட்ட அடையாளங்கள் தோன்றினதை நீங்கள் கண் டிருக்கிறீர்கள். ஒரு தடவைகூட அந்த அடையாளங்கள் தவறவே யில்லை. அவைகள் முற்றிலும் உண்மையானவைகளே. ஏனெனில், அது தேவனாகும். அவைகள் பரிபூரணமாக உண்மையாய் இருந்தது. ஆயிரம் பத்தாயிரம் தடவைகளும் அதற்கு பன் மடங்கு மேலாகவும் அவ்வடை யாளங்கள் காட்டப்பட்டன. அவைகளில் ஒன்றாகிலும் தவறாக இருக்க முடியாது. 21அவர்கள் அதை ஒரு பிசாசு'' என்று அழைக்கின்றார்கள். எல்லா வித சொற்களாலும் அதை அவர்கள் அழைக்கின்றனர். சிலர் ஒன்றையும், பிறகு மற்றொன்றையும் பேசுகின்றனர். ஆனால் இயேசு, 'வீட்டெஜ மானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால் அவருடைய சீஷர் களை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா'' (மத்.10:25) என்றார். ஆகவே இயேசு மேலும், ''வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணு கிறீர்களே, என்னைக்குறித்து சாட்சிக் கொடுக்கிறவைகளும் அவைகளே'' என்று கூறினார் (யோவான். 5:39). இப்பொழுது கவனியுங்கள். அவைகள் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கப்போவதில்லை. ஏனெனில் நான் ஒரு மனிதன். ஆனால் புறப் பட்டு போகும் செய்தியானது அதைக் குறித்து சாட்சிக் கொடுக்கிறது. 45. இப்பொழுது, தேவன் தாம் தேவன் என்று காண்பிக்க இயற் கைக்கு மேலான அடையாளத்தை அனுப்புவதில்லை. மாறாக ஏதோ வொன்றை அறிவிக்க அதை அனுப்புகின்றார். இயற்கைக்கு மேம்பட்ட அடையாளத்தோடு ஒரு ஊழியம் புறப்பட்டுச் செல்லுகின்றது. அதை தொடர்ந்து மாம்சீகமும் போலியும் தொடர்கின்றன. 22அன்றொரு நாள் மார்டீன் லூத்தரைக் குறித்து ஒரு காரியம் படித் தேன். அதில், 'லூத்தர் கத்தோலிக்கச் சபையை எதிர்த்தும், அதினால் பாதிக்கப்படாமலிருந்தது ஒரு மர்மமானக் காரியமல்ல. மார்டீன் லூத் தரின் இயற்கைக்கு மேம்பட்ட காரியம் என்னவென்றால், சீர்த்திருத்தல் செய்தியை தொடர்ந்த எல்லா மூட பக்திக்கும் மேலாக தன் தலையை அவர் நிமிர்த்தியிருந்ததே' என்று எழுதப்பட்டிருந்தது. அதைத்தான் நாமும் செய்யவேண்டும். எல்லாக் காரியங்களும் அதனுடன் செல்கின்றது. சகோதரர்களே, அது உங்களுக்கு முன்பாக பேய்த்தனங்களை வைக்கிறதாயிருக்கின்றது. சகோதரர்களே, ஆனால் ஞாபகங் கொள்ளுங்கள். அந்த உண்மையான வெளிச்சம் எழும்புகை யில் எல்லா பேய்த்தனமான காரியங்களையெல்லாம் அப்புறப்படுத்து கின்றது. பாருங்கள்? அது பேய்த்தனமான காரியங்களை வெட்கத்திற் குள்ளாக்கிவிடுகின்றது. அத்தகைய காரியங்களை அது வெளிப்படுத்தி விடுகின்றது. ஆகவே எங்கே இயற்கைக்கு மேம்பட்ட காரியம் நடந்து விடுகின்தோ , அங்கே அதனுடன் கலப்படமானதொரு கூட்டம் எப்பொழுதும் செல்கின்றது. 23மோசே இயற்கைக்கு மேம்பட்ட புதுமையைச் செய்தான். அப் பொழுது வனாந்தரத்தில் சென்று கொண்டிருக்கையில், கோரா “நல்லது, இப்பொழுது, நீ ஒருவன் மாத்திரமே இதைச் செய்ய முடியும் என்று கூற முயற்சிக்கின்றாயா? உம்மைவிட மேலும் அநேக பரிசுத்த மனிதர்கள் உள்ளனர்'' என்று கூற விழைந்தான். (எண்.16:3). அப்பொழுது அங்கே என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரி யுமா? அப்பொழுது தேவன் அவர்களிடமிருந்து உங்களை பிரித்துக் கொள்ளுங்கள்'' என்றார் (எண்.16:21). பாருங்கள்? கவனியுங்கள், எப்பொழுதும் அக்காரியம் நமக்கு உண்டாயி ருக்கின்றது. இயற்கைக்கு மேம்பட்டகாரியம் நடந்தபின்பு போலிகள் அதை பின்தொடர்கின்றன. அது அவ்விதம் தான் இருக்க வேண்டும். ஆகவே, அத்தகைய போலிகள் உள்ளே எதைக் கொண்டு வருகின்றன, என். அரசாங்க சபையின் அலுவலரான உப்ஷாவின் காரியம் போன்று. கடந்த இரவு அவரின் விதவை இங்கு கூட்டத்தில் கலந்துகொள்ள விமானத்தின் மூலம் வந்தாள். அவர் ஆராதனையில் சுகமாக்கப்பட்டிருந்தார். நீங்கள் அதை அறிந்திருக்கிறீர்கள். “நீ ஒன்றைப் பெற்றிருக்கும் போது வெறுமையாயிருக்கமாட்டாய்'' என்று உப்ஷா எப்பொழுதும் கூறுவார். அது சரியான வார்த்தையிருக்கின்றது. நீ இல்லாத ஒன்றாய், உன்னால் இருக்க முடியாது. 24நாம் ஒரு மகத்தான இன்னிசைக் குழு போன்றிருந்து இசை அமைப்பாளர் தாளமிடுவதைப் போன்றே, நாமும் அத் தாளங்களைப் பின்பற்றுவோமானால் காரியத்தைப் பார்க்கலாம். இப்பொழுது நாம், இந்த கருத்திற்கு வருவோம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நேரம், நாம் இப்பொழுது இருக்கின்ற காலம், நாம் தேவனையே உற்று கவனித் துக் கொண்டிருக்க வேண்டும் என்ற இடத்திற்கு நம்மை கொண்டு வந்துள்ளது. அநேக வருடங்களுக்கு முன்பு சகோதரர்களாகிய நீங்கள், உங் கள் சீர்திருத்தக்காரர்களால் பெந்தெகொஸ்தே அசைவு ஆரம்பிக்கப்பட் போது - வரங்கள் திரும்ப அளிக்கப்பட்டபோது, அந்நிய பாஷைகள் பேசுதல் - மற்றயை காரியங்கள் சபைக்குள் வந்தபோது - தேவன் வரங்களை சபைக்கு திரும்ப கொண்டு வருதல்... நீங்கள் எல்லோரும் கூட சீர்திருத்தங்களை அடைந்தீர்கள் என்பது உங்களுக்கு ஞாபகமிருக் கின்றதா? உங்கள் பிதாக்கள் அதைச் செய்தனர். அந்த சீர்திருத்தலில் பிரஸ்பிட்டேரியன், லூத்தரன், பாப்திஸ்து என்பவைகளின்று பிரிந்து வர மிகக் கடினமாயிருந்தது. நசரீன்கள் குழுவினர் அவர்களுடைய காலங்களில், ஒரு முழு நிறைவில் இருந்தனர். அவ்வாறே பரிசுத்த யாத் ரீகர் குழுவும் இருந்தனர். அவர்கள் உங்கள் செய்தியை புறக்கணித்தனர். அவர்களுக்கு என்ன ஆயிற்று? இப்பொழுது அவர்கள் எவ்வாறு எங்கே இருக்கின்றனர் என்பதை நீங்கள் காண்கிறீர்களா? இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள். நாமும் அதே காரியத்தை செய்யமுடியும். ஓ, ஆம். ஒரு சபையானது ஸ்தாபனமாக ஆகுமானால், ஒரு செய்தியானது ஸ்தாபித்துக்கொள்ள விழையுமானால், அது பரணிற்கு சென்று விடும். அது மறுபடியுமாக எழும்பாது. இப்பொழுது, இங்கிருக்கும் சரித்திரக் காரர்களாகிய உங்களில் ஒருவரை நான் அறிவேன். பாருங்கள்? அது ஸ்தாபித்துக் கொள்ளுமானால் மறுபடியுமாக அது எழும்பவே எழும் பாது. அது உண்மையாயிருக்கிறது. 25வேதாகமத்தில், ''ஒரு வேசி'' என்று அழைக்கப்படுகின்ற கத் தோலிக்க மார்க்கம்தான் முதல் ஸ்தாபனமாக இருந்தது. அவள் ''வேசிகளுக்கெல்லாம் தாய்“ ஆக இருந்தாள். அதே விதமாகத் தான் ஸ்தாபனங்களும் இருக்கின்றன. அவைகளெல்லாம் எங்கே சென்று முடிவடைகின்றன என்பதை நீங்கள் பாருங்கள், இங்கே உலக மகா சபைகளின் சங்கத்தில். இப்பொழுது, அதன் காரணமாகத்தான் அந்த ஸ்தாபனங்களின் மத்தியிலிருந்து நான் வெளியே தள்ளப்பட்டுள்ளேன். அந்த சகோதரர் கள் தாங்கள் செய்வது இன்னதென்று உணராமலிருக்கின்றனர். அது நான் அல்ல; நான் வெளியே தள்ளப்படவில்லை. அவர்கள் வார்த்தை யைத்தான் வெளியே தள்ளுகின்றனர். இந்த லவோதிக்கேயா காலத்தில் கிறிஸ்துவானவர் சபையை விட்டு புறம்பாக்கப்பட்டு, அதற்குள் திரும்பி வருவதற்காக தட்டிக் கொண்டிருக்கிறார் என்று வேதாகமம் கூறுகின்றது. இந்தக் காலத்தில் கிறிஸ்துவானவர் புறம்பே தள்ளப்பட் டதைப் போன்று வேறு எந்தக் காலத்திலும் இவ்வாறு இருந்ததில்லை. ஏனெனில் இதற்குப் பிறகு சபைக் காலங்கள் என்பது இருக்கப் போவதில்லை. இது தான் அதன் (சபைக் காலங்கள் - தமிழாக்கியோன்) முடிவு ஆகும். லவோதிக்கேயா தான் கடைசி காலமாகும். அந்த லவோதிக்கேயா காலம் தான் பெந்தெகொஸ்தேயாகும். பெந்தெகொஸ் தேவிற்கு மேலாக வேறொன்றும் இருக்கப் போவதில்லை. அவ்வளவு தான். 26இது மனிதனைப் போன்றிருக்கின்றது. தன் பரிணாம வளர்ச்சி யினூடாக வருகின்ற எந்த ஒரு சிருஷ்டியும் மனிதனை விட ஒரு உயர்ந்த ரக சிருஷ்டியாக ஒருபோதும் வர முடியாது. ஏனெனில் மனிதனை தேவன் தமது சாயலாக சிருஷ்டித்தார். இதை விட மேலானது ஒரு போதும் இருக்கமுடியாது. அதுபோன்று அது இன்னுமாக செல்ல இந்த வார்த்தையானது அனுமதிக்காது. ஏனெனில் அவர் வார்த்தையாயிருக் கின்றார். எந்த ஒரு லவோதிக்கேயா சபை காலத்தின் மேலும் வார்த்தையால் ஏற முடியாது. ஆகவே அங்கே ஒவ்வொருவரும் இருப்பதை நாம் காண்கின்றோம். இயேசு சபைக்கு வெளியில் இருந்துகொண்டு, திரும்ப வுமாக உள்ளே வர முயற்சித்துக் கொண்டிருக்கின்றார். (பாருங்கள்?) இயேசு கிறிஸ்து முதன் முறையாக இங்கு வந்தபோது அதைத்தான் அவருக்குச் செய்தார்கள். அவர்தான் அந்த வார்த்தை. ஆகவே அந்த வார்த்தையானது... அவரே வார்த்தையாயிருந்தார். 27“நாங்கள் வார்த்தையை உடையவர்களாயிருக்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள். பரிசேயர், ''எங்களிடத்தில் வார்த்தை உள்ளது'' என்றார்கள். ஆனால் அந்த உண்மையான, சத்தியமான வார்த்தையான அதை அவர்கள் புறக்கணித்துக் கொண்டிருந்தனர். அதன் காரணமாகத்தான் இயேசு, ''வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள், அவைகள் என்னைக் குறித்து சாட்சியிடுகின்றன'' என்றார். இன்றைய தினம், நாம் பின்னோக்கிப் பார்த்து “அவர்கள் எவ்வ ளவாய் குருடாயிருந்தனர்?'' என்று கூறலாம். சிறிது காலம் கழித்து நாம், ''நாம் ஏன் அவ்வளவு குருடராயிருந்தோம்'' என்று கூறாமலிருப் போமோ என்று அதிசயிக்கிறேன். பாருங்கள்? பாருங்கள்? அது அவ் விதம்தான் இருக்கவேண்டும். சகோதரர்களே, அது மிகவும் மோசமான ஒன்று, ஆனால் அது அவ்விதமாகதான் இருக்க வேண்டும். ''மிகவும் மோசமான'' என்று கூறாதீர் எனலாம். அவ்வாறு கூற நான் விழைய வில்லை. தேவன் தாம் என்ன செய்கிறார் என்பதை அறிந்திருக்கிறார். பாருங்கள்? அவர்கள். அறியாமல்... அவர்கள் வார்த்தையைத் தான் புறக்கணிக்கின்றனர். இந்த நாளிற்கென்று வாக்குத்தத்தம் செய்யப் பட்டு, வெளிப்படுத்தப்பட்டு உறுதியாக்கப்பட்ட வார்த்தையே. இவ் வாறு நடைபெறுவதன் காரணம் என்னவெனில், ஜனங்கள் வேறொரு வெளிச்சத்தின் மினுமினுப்பில் வாழ்வதேயாகும். அநேக காலத்திற்கு முன்பாக இங்கிலாந்து தேசத்தில் எப்பொழுதும் நிகழ்ந்திராத ஓரு மகத்தான திருட்டு நடந்தது. அந்த திருட்டு ஒரு பொய்யான வெளிச்சத்தின் கீழ் நடந்தது. 70 லட்சம் டாலர்கள் கொள்ளைப் போயிற்று. உலகமானது அத்தகைய திருட்டை அதுவரை அறிந்ததில்லை. ஸ்காட்லாந்து யார்டு (இங்கிலாந்து நாட்டின் துப்பறி யும் நிறுவனம் - தமிழாக்கியோன்). அத்திருட்டைக் கண்டுபிடிக்க இயல வில்லை. உலகத்திலேயே முன்பு ஒருபோதும் நடைபெறாத ஒரு மகத்தான கொள்ளையாகும். அது ஒரு பொய்யான வெளிச்சத்தைக் கொண்டு செய்யப்பட்ட ஒன்றாகும். சகோதரர்களே, மனிதனுக்காக என் இருதயத்தில் கொண்டுள்ள அன்பின் பேரில் இதை நான் கூறலாமா? தேவன் அதை அறிவார். சபையில் முன்பு எப்பொழுதும் நடந்திராத ஒரு மகத்தான திருட்டு பொய்யான வெளிச்சத்தைக் கொண்டு தான் நடைபெற்றது. லூத்தர், மார்ட்டீன், வெஸ்லி, அல்லது முழு பெந்தெகொஸ்தே பிதாக்களில் சிலர் என்ன கூறினார்கள்? பாருங்கள். வேறொரு காலத்திற்குரிய மினு மினுப்பில், பிம்பத்தில் வாழ்வதாகும். அது இன்றைக்கு உரியது அல்ல. இந்நாளிற்கென்று வாக்குரைக்கப்பட்ட வாக்குத்தத்தம்; வார்த்தை இங்கிருக்கின்றது. ஆகவே நீங்கள் “நல்லது, நீர் அதை தவறாக வியாக் கியானப்படுத்தியிருக்கிறீர்” என்று கூறுகிறீர்கள். தேவன் அதை வெளிப் படுத்திக் காண்பிக்கையில், அவரே தமது வார்த்தையின் சொந்த வியாக்கி யானியாயிருக்கிறார். 28இங்கே ஐம்பது வருடங்களுக்கு முன்பு பெந்தெகொஸ்தே பிதாக்களிடம் ''அந்நிய பாஷைகளில் பேசுவது என்கின்ற காரியமே இல்லை'' என்றும் அவர்கள் (பெந்தெகொஸ்தே பிதாக்கள்-தமிழாக்கி யோன்) வார்த்தையை தவறாக வியாக்கியானப்படுத்தியிருக்கின்றனர் என்றும் அவர்களிடம் கூறப்பட்டிருந்தால் எப்படியிருக்கும்? அதற்காக அவர்கள் உறுதியாக நிற்கவில்லை. தேவன் தம்முடைய சொந்த வார்த் தையை வியாக்கியானப்படுத்தினார். பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு, ''நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக் கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர் கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம் முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்று கூறினான் (அப்:2:38,39). அவர்கள் இதை விட்டு எப்படி புறம்பே செல்லமுடியும்? அது தானாகவே வியாக்கியா னித்துக் கொள்கின்றது. பாருங்கள்? அதற்கு வேறு வியாக்கியானம் தேவையில்லை. 29ஆகவே, இன்றைக்கு நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக் கின்ற இந்த காலத்தில் ஒரு மணவாட்டியின் மரமானது வந்து கொண் டிருக்கின்றதாய் இருக்கிறது. பாருங்கள்? உண்மையாக, அந்த மரமானது வந்திருக்கின்றது. 67. அவர்கள் தங்களை ஸ்தாபித்துக் கொண்டவுடன் அதற்கு மேல் ஒரு அடி கூட அவர்களால் எடுத்துவைக்க முடியவில்லை. என்ன நிகழ்ந் தது? அவர்கள் ஸ்தாபித்துக் கொண்டு அந்த கிளையில் செல்கின்றனர். பிறகு அந்த கிளையானது வெட்டி எறியப்படுகின்றது. யோவான் 15-ம் அதிகாரத்தின்படி அவர் அவர்களை களை எடுக்கின்றார். அதன் பின்பு அவைகள் ஒருபோதும் உபயோகப்படுத்தப்படுவதில்லை. ஆனால் மரத்தின் உச்சி பாகத்தில் அதன் இருதய பாகத்தில் பழம் தோன்றுகிறது. மர மானது முழு வதும் முதிர்ச்சியடையும் போது இன்னுமாக அதினால் வளர முடியாது. சரியாக உச்சியில் இருக்கின்றது. கடைசி சபையின் காலம் இங்கே இருக்கிறது. அவள் முழு முதிர்ச்சிக்கு வந்து விட்டாள். அது மணவாட்டி மரமாயிருக்கின்றது. ஏதேன் தோட்டத் திலிருந்து வந்த ஜீவ விருட்சம் இயேசுவாகும். அதை நீங்கள் விசுவா சிக்கிறீர்களா? ஆம், அவரே ஜீவ விருட்சம் ஆவார். 30ஏதேன் தோட்டத்தில் ஒரு மரம் இருந்தது, அவைகளில் ஒன்று, நீ அதைத் தொட்டால்... இப்பொழுது அதைக்குறித்து நமக்கு கருத்து வேற்றுமைகள் உண்டு. ஆகவே அதற்குள்ளாக நான் செல்லப்போவ தில்லை. ஆனால் அது கீழ்ப்படியாமையின் மரம் என்று நாம் கூறலாம். அந்த மரத்தை அவர்கள் தொட்ட போது, எல்லா ஜனங்களும் மரிக்க வேண்டியவர்களாய் இருந்தனர். ஆகவே, இந்த மரத்தினின்று அவர்கள் புறம்பாக்கப்படவேண்டும். ஏனெனில் இந்த ஜீவவிருட்சத்தின் கனியைப் புசித்தால் அவர்கள் எல்லோரும் தீமையினின்று நன்மையை அறிந்து ஜீவிக்கலாம். அது உண்மை . ஊழியக்காரராகிய நீங்கள் அதை அறிந் திருக்கிறீர்கள். அதைக் குறித்து நம்முடைய கருத்துக்கள் உண்டாகி இருக்கின்றன. ஒருவேளை அந்த மரத்தைக் குறித்து நாம் கருத்து வேற்று மையுடையவர்களாக இருக்கலாம். ஆனால் கிறிஸ்துவே அந்த ஜீவவிருட்சம் என்று நாம் யாவரும் அறிந்திருக்கிறோம். அன்று ஒரு யூபிலி நாளில் அவர்களெல்லாரும் குடித்து களித்துக் கொண்டிருந்தபோது, இயேசு தண்ணீரைக் குறித்துப் பேசி, ''வனாந்திரத்திலிருந்த கன்மலை நானே'' என்று கூறினார். அவர்கள், ''எங்கள் பிதாக்கள் வனாந்திரத்திலே மன்னாவைப் புசித் தார்கள்'' என்றார்கள் (யோவ 6:31). ஆகவே, அவர், “ உங்கள் பிதாக்கள் ஒவ்வொருவரும் மரித் தார்கள். ஆனால் நானே ஜீவ அப்பம். ஆமென். வானத்திலிருந்து இறங்கி வந்த ஜீவ விருட்சம், இந்த அப்பத்தில் புசிக்கிறவன் ஒருக் காலும் மரிக்கமாட்டான்'' என்றார். அதுவே ஜீவ அப்பமாயிருக்கிறது. 31இப்பொழுது, அவரை கேலி பரியாசம் செய்வதற்காக ரோமர்கள் அவரை மரத்திலே தொங்க வைத்தனர். ''மரத்திலே தூக்கப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன்'' (கலா.3:13) என்ற விதமாக தேவகுமாரனை அவர்கள் பரியாசத்திற்குள்ளாக்கினார்கள். அவர் அசட்டைப் பண்ணப் பட்டு புறம்பாக்கப்பட்டார். உயர்ந்த ஸ்தலமாகிய வானத்திலிருந்து இறங்கி பூமிக்கு வந்து தாழ்மையின் கோலமானார். அவர் இங்கு இருந்த போது மிகவும் கீழ்த்தரமானப் பட்டிணத்திற்குச் சென்று, பட்டிணத் திலேயே மிகவும் குள்ளமான மனிதனான சகேயுவினால் தாழ பார்க்கப் பட்டார். மிகக் கேவலமான பெயர் அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் மிகவும் கேவலமாக நடத்தப்பட்டு மரத்திலே தொங்க விடப்பட்டு இருப்பதிலேயே கொடூரமான மரணத்தினாலே மரித்தார். அவ்விதம்தான் ஜனங்கள் அவரைக் குறித்து எண்ணினார்கள். அவ்விதமாகத்தான் உலகம் அவரைக் குறித்து எண்ணிற்று. ஆனால் தேவன், பரலோகத்தை அவர் கீழ் நோக்கிப் பார்க்கும் அளவிற்கு அவரை மிகவும் உயரத்தில் உயர்த்தி எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தைக் கொடுத்து, பரலோகத்திலும், பூலோகத்திலும் உள்ள எல்லா காரியங்களும் அவருடைய நாமத்தை சூட்டிக் கொள்ள செய்தார். அவ்விதமாகத்தான் தேவன் அவரைக் குறித்து எண்ணங்கொண்டார். பாருங்கள்? உலகத் தோற்றத்திற்கு முன்பு நாம் தேவனுடைய குமாரர் களாயிருந்து அவருடைய தன்மைகளைப் பெற்றிருப்போமென்றால் நாமும் அவரைக் குறித்து அதே எண்ணங்கொள்வோம். ஆகவே சகோதரர்களே, அவரே வார்த்தை என்று நினைவு கொள்ளுங்கள். இயற்கைக்கு மேம்பட்ட ஒரு புதுமையான காரியத்தைத் தொடர்ந்து செய்தி வருகின்றதாயிருக்கின்றது. இயேசு ஒரு வாலிப போதகராக பிரசங்கிக்க ஆரம்பித்து, வியாதியை சொஸ்தப்படுத்தின போது எல்லோரும் அவரை தங்கள் சபைக்கு வரவேண்டும் என்று விரும்பினர். அதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். ஆனால் ஜனங்களுடைய கண்களைக் கவரத்தக்கதாக, அவர் உண்டாக்கி முன்னிலைப்படுத்தின இயற்கைக்கு மேம்பட்ட புதுமையான ஒரு காரியமாக அது இருந்தது. ஆனால் ஒரு நாளிலே அவர் உட்கார்ந்து அவர்களுக்கு போதிக்க ஆரம் பித்தார்; அது இயற்கைக்கு மேம்பட்ட புதுமையான காரியத்தைத் தொடர வந்த ஊழியமாகும்; அப்பொழுது, அதற்குப் பிறகு யாருக்குமே அவர் தேவைபடுகிறவராக இல்லாமற் போனார். அது மிகவும் மோசமான ஒன்று. ஆனால் அது மறுபடியுமாக நடந்து கொண்டிருக்கின்றது. அதி லிருந்து நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள். 32கர்த்தருக்குச் சித்தமானால் இந்தக் காலை நேரத்தில் ஒரு சிறிய பிர சங்கத்தைச் செய்ய ஆசீர்வதிக்கப்பட்ட இந்த பழைய வேதாகமத் தினின்று, யோசுவா புத்தகம் 10-ம் அதிகாரம் 12-ம் வசனத்தினின்று நாம் வாசிப்போம். இங்கிருந்து நாம் எத்தனை மணிக்கு வெளியேற வேண்டும்? ('குறிப்பிட்ட நேரம் என்று அமைக்கப்படவில்லை'' என்று யாரோ கூறு கின்றார் -ஆசி) நல்லது, பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் போது மா? அது உங்களுக்கு சரியாயிருக்குமா? சரி, ஒரு நிமிடம்... (குறிப் பிட்ட நேரம் என்று அமைக்கப்படவில்லை) “கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற நாளிலே யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக, சூரியனே, நீ கிபியோன் மேலும் சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும் தரித்து நில்லுங்கள் என்றான். அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டு மட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா. அப்படியே சூரியன் அஸ்தமிக்க தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒரு பகல் முழுவதும் நடுவானத்தில் நின்றது“ (யோசுவா 10:12-13) 33இப்பொழுது நான் அதிலிருந்து ஒரு சிறு மூலப் பொருளை எடுத் துக் கொள்ளப் போகிறேன், ஏனெனில் நான் உங்களிடம் கூறின பிரகாரமாக ஒரு சொற்பொழிவை என்னால் செய்ய இயலாது, ஆனால் இப்பொழுது நான் கூற விழைவதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நினைக்கின்றேன். கிறிஸ்துவை ஆணித்தரமாக காண்பித்து உங்களுக்கு தோள் கொடுத்து உதவ நான் இங்கிருக்கிறேன். எந்த ஒரு ஸ்தாபனத்தையோ அல்லது. பூமிக்குரிய மனிதர்களையோ காண்பிக்க அல்ல. மாறாக இயேசு கிறிஸ்துவை காண்பிக்க உதவுவேன். ஏனெனில் அவரே வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தை ஆவார். வெளிப் படுத்தப்பட்ட தேவன். யாரோ ஒருவர் வியாக்கியானப்படுத்துவதல்ல இது. தேவன் தாமே தம்முடைய சொந்த வியாக்கியானத்தைச் செய்து கொண்டிருக்கிறார், தேவன்... நிரூபிக்கின்றார், தாம் யார் என்பதை நிரூபிக்கிறார். பரிசேயர்கள் மாத்திரம் அதை பார்த்திருப்பார்கள் என்றால் இந்தக் காரியங்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ள வேத வசனங்களை அவர்கள் மாத்திரம் படித்திருப்பார்களானால், தேவன் தம்முடைய வார்த்தையை இயேசு கிறிஸ்துவின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டி ருப்பதை அவர்கள் கண்டு கொண்டிருப்பார்கள். அவர் வார்த்தையாய் இருந்தார். அவர் இன்னுமாக வார்த்தையாயிருக்கிறார். 34இப்பொழுது, இந்தப் பொருளைக் குறித்து நான் ஏறத்தாழ 15 நிமிடங்களுக்கு பேச முயற்சிக்கிறேன். நான் ஒரு குறிப்பிட்ட பொருளின் பேரில் மூன்று அல்லது நான்கு மணிநேரம் பேசி அதை ஒலிநாடாக்களில் பதிவு செய்வேன். பாருங்கள்? உங்களுடைய சபைகளில் ஜனங்கள் களைத்துப் போய்விடாமலிருக்க, இரவு நேரத்தில் ஏறத்தாழ முப்பது நிமிடங்களுக்குப் பேசி பின்பு ஜெபவரிசையை ஏற்படுத்த முயற்சிப்பேன். அதை நீங்கள் விரும்புவீர்களென நான் நிச்சயித்திருக்கிறேன். நான் வழக்கமாக அநேக மணி நேரங்கள் பிரசங்கித்து, ஏறத்தாழ பன்னி ரெண்டு மணி வரை கூட ஆகிவிடும். ஆனால் இப்பொழுது ஏறத்தாழ நாற்பத்து ஐந்து நிமிடங்கள் பிரசங்கத்தை நிகழ்த்த முயற்சிக்கிறேன். நான் இப்பொழுது, “நம்ப முடியாதது, ஆனாலும் உண்மை (Paradox)” என்ற பொருளை எடுத்துக்கொள்கிறேன். நான் காலை ஆகாரத்திற்காக உங்களோடு இருப்பேன் என்று அறிந்திருக்கவில்லை. ஏனெனில் அது சனிக்கிழமையோ அல்லது வேறு எந்த தினமோ என்று எண்ணியிருந்தேன். சகோதரன் போர்டர்ஸ் இந்நாளின் காலையில் அது அமைக்கப்பட்டிருக்கின்றது என்பதை கடந்த இரவு சற்று தாமதமாக கூறினதினால், நான் சில வேதவசனங்களை குறித் துக்கொண்டு அவைகளைக் குறித்து சில நிமிடங்கள் பேசலாம் என்று வந்திருக்கிறேன். 35இப்பொழுது, பாரடாக்ஸ் (Paradox) என்கின்ற வார்த்தைக்கு வெப்ஸ்ட ர் அகராதி (Webster Dictionary) “நம்பமுடியாத ஏதோ ஒன்று ஆனால் அது உண்மை ” என்று அர்த்தம் உரைக்கின்றது. யாருமே அதை விவரித்துக் கூற முடியாத ஏதோ ஒன்றாக அது (பாரடாக்ஸ் என்ற வார்த்தை -தமிழாக்கியோன்) இருக்கின்றது. மனித இனத்தின் அறி விற்கு அப்பாற்பட்ட பரிமாணத்தில் அது இருக்கின்றது. ஆனால் இன்னு மாக அது உண்மையான ஒன்றாய் இருக்கின்றது. நம்பமுடியாத ஏதோ ஒன்று ஆனாலும் அது உண்மை , (Paradox - பாரடாக்ஸ்) ஆகவே நீங்கள் எபிரேயர் 11-ம் அதிகாரம் 3-ம் வசனத்தைப் படிப்பீர்களென்றால், இந்த உலகமே நம்பமுடியாத ஒன்று ஆனாலும், உண்மையாய் இருக்கின்றது. 36சில வாரங்களுக்கு முன்பு நானும் என் மகனும் எங்களுடைய கூட்டங்கள் நடந்த நியூயார்க் பட்டிணத்திலுள்ள மாரீஸ் அரங்கத்தி லிருந்து வெளிவந்து வீதியிலே நடந்துக் கொண்டிருந்தோம். நாங்கள் ஜனங்களை நோக்கிப் பார்த்தோம். அங்கே அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தனர். ஆண்கள் ஸ்திரீகளைப்போல நீளமாய் மயிரை வளர்த்துக் கொண்டு... நீங்கள் அறிவீர்கள், அவர்கள் காதணிகளையும் அணிந்தவர் களாக, அவர்கள் தங்களை வேறு பிரித்துக் கொண்டவர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். அங்கே வெண் நிறக்குழந்தைகளும், கருப்பு நிறக்குழந்தைகளும் கலந்திருந்தனர். நான் எதைக் குறிப்பிடு கிறேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், ஆண்களும் பெண்களும் கூடியிருந்தனர் அங்கு... அப்பொழுது வயதான ஒரு ஏழைத் தாய் வீதியிலே விழுந்துக் கிடந்தார்கள். ஆனால் அவளை தூக்கியெடுக்க யாரும் இல்லை. எல்லோரும் அவளை வெறுமனே கடந்து சென்றனர். ஆகவே, அந்த 70 வயது மதிக்கத்தக்கதான தாயை நான் தூக்கிவிட்டு, சிதறிப்போன ஆரஞ்சு பழங்களையெல்லாம் பொறுக்கிக் கொடுத்து அவளுக்கு உதவினேன். அப்பொழுது அந்த தாயார் என்னை வினோதமாகப் பார்த்துவிட்டு வீதியிலே நடந்துச் சென்று விட்டார்கள். அக்காரியத்தைக் குறித்து ஒரு கார் ஓட்டுநரிடம் பேசினேன். அதற்கு அவர், ''ஐயா, யாராவது ஒருவர் நியூயார்க்கிற்கு வந்து, அவ் விதம் நடந்து கொள்வானானால் அவன் சரியான மனநிலைமை உடையவனாயிருக்கின்றான் என்று அர்த்தமாகும். அவன் இப்பட்டிணத்தைச் சார்ந்திராத ஒரு அந்நியன் என்று நாங்கள் அறிந்து கொள்வோம்'' என்று கூறினார். பாருங்கள்? அவன் மேலும், 'அவர்களெல்லோரும் நல்ல ஜனங்கள் தாம். ஆனால் எல்லோரும் அப்படிப்பட்டதொரு சூழ்நிலையின் இழுப்பிலிருக்கின்றனர். யாராவது ஒரு நபர் இங்கு வந்து வாழ்ந்திருப்பாரென்றால், அவரும் கூட அதே இழுப்பிற்குள் துரிதமாக வந்துவிடுவார்'' என்றான். அவன் மேலும், ''நீங்கள் மாரடைப்பினால் இங்கு விழுந்து இறந்து வீதியில் கிடப்பீர்களானால், யாரும் உங்களை தொடமாட்டார்கள். நீங்கள் அங்கேயே கிடந்து மரிக்கவிட்டு விடுவர். ஏனெனில் நீங்கள் நிறைய குடித்துவிட்டு அவ்விதமிருக்கின்றீர்கள் என்று அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்“ என்றான். பாருங்கள்? அவர் கள் அவ்விதம் நடந்துகொள்ள வேண்டும் என்று எண்ணம் கொள்வ தில்லை. மாறாக அந்த சூழ்நிலையின் இழுப்பிற்குள்ளாக காணப்படுவதே யாகும். 37சகோதரரே, நம்முடைய சபை ஜீவியத்தில் நாமும்கூட அவ்வித மாகவே நடந்து கொள்கின்றவர்களாய் இருக்கின்றோம். ஒரு குறிப்பிட்ட கொள்கை அல்லது ஒரு குறிப்பிட்ட காரியத்தின் இழுப்பிற்குள் சென்று அதனுடன் நிலை கொண்டு விடுகின்றோம். பாருங்கள்? நாம் மற்றவர் களுடன் சேர்ந்து ஆட்டுவிக்கப்பட்டு இழுக்கப்படுகின்றோம். நம்மு டைய ஸ்தாபனத்துடன் சேர்ந்து நாம் முன்னும் பின்னுமாக அசைந் தாடுகின்றோம். நம்முடைய சமுதாயத்துடன் சேர்ந்து ஆட்டுவிக்கப்படு கின்றோம். அது ஓர் இயற்கையான காரியம்தான். உன் வீட்டின் படிகளை சிகப்பு வர்ணத்தால் பூசி விட்டு உன் அயலான் என்ன செய்கிறான் என்பதைக் கவனி. அவனும் அதையே செய்வான். ஆ... ஆ.... சகோதரிமார்களாகிய உங்களில் ஒருவர் ஒரு விதமான உடையுடுத்தி ஒரு தொப்பியை அணிவீர்களானால் உங்கள் அயலகத்தார் என்ன செய்கின்றார்கள் என்பதைக் கவனியுங்கள். அது ஒரு போலி வேஷமாயிருக்கின்றது. ஒருவர் மற்றொருவரைப் போன்று நடிக்கும் காலம் இது. 38நம்முடைய கால்சட்டைகள் நம்முடைய மேலாடைகளுக்கு தகுந்தவாறு இருக்கின்றதா என்பதைப் பற்றி நமக்கு கவலையில்லை. நம்முடைய அனுபவம் தேவனுடனும், தேவனுடைய வார்த்தையுடனும் ஈடு கொடுத்து இணைய வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். (பாருங்கள்?) அந்த வீதியில் நடந்துக் கொண்டிருக்கும்போது, பில்லி என்னிடம், “தகப்பனே, அவர்களெல்லோரும் யார் என்று தேவன் எப்படி அறிகின்றார்'' என்றான். அதற்கு நான், “மகனே, அது சரிதான், நீ ஆகாயத்தை நோக்கிப் பார், அங்கே இரண்டு சிறிய நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந் திருப்பதைப் போன்று இருக்கிறதல்லவா?'' என்று கேட்டேன். அதற்கு பில்லி, “ஆம் என்றான்''. அப்பொழுது நான், 'விஞ்ஞானம் நமக்கு கூறுகிறது, அவை களில் (நட்சத்திரங்கள்-தமிழாக்கியோன்) ஒன்று பூமியை நோக்கி ஒரு மணி நேரத்திற்கு பத்து லட்சம் மைல் வேகத்தில் வரத் துவங்குமானால், இங்கு வந்து சேர லட்சக்கணக்கான வருடங்கள் ஆகும். பாருங்கள்? அவ்வளவு தூரமாக அது இருக்கின்றது. (பூமிக்கும் நட்சத்திரத்திற்கும்தமிழாக்கியோன்) ஆனாலும் இன்னுமாக அந்த இரண்டு நட்சத்திரங்களும், நமக்கும் அந்த நட்சத்திரத்திற்கும் இருக்கின்ற நெருக்கத்தை விட, இன்னும் நெருக்கமாக இருக்கின்றன. அல்லது அவைகள் (நட்சத் திரங்கள்-தமிழாக்கியோன்) நமக்கு நெருக்கமாய் இருப்பது தென்படுவதற்கு மேலாக நாமும் அவைகளும் ஒருவேளை நெருக்கமாக இருப்பது போன்று தென்படலாம் என்று கூறினேன். அதற்கு அவன், “அதை தேவன் எவ்வாறு செய்கிறார்?'' என்றான். அதற்கு நான், 'அவர் முடிவில்லாதவர், பார்“ என்றேன். 39ஐன்ஸ்டீன் என்னும் விஞ்ஞானியின் நட்சத்திர மண்டலத்தைக் குறித்த அவரின் கடைசி சொற்பொழிவுகளில் ஒன்றை நாம் கேட்க நேர்ந்தது. அவருடைய மகத்தான சொற்பொழிவுகளில் ஒன்று, கடைசி யாக பேசப்பட்டவைகளில் ஒன்று, அதில் அவர், ''வெளிச்சமானது பரவுகின்ற வேகவீதத்தில், அதாவது ஒரு வினாடிக்கு 1,86,000 மைல்கள் வேகத்தில் ஒரு மனிதன் பூமியை விட்டு பிரயாணம் செய்வானானால் அவன் நட்சத்திரத்தையடைய நூற்று ஐம்பது மில்லியன் வெளிச்ச வருடங்கள் பிடிக்கும். மேலும் அவன் திரும்பி வரவும் நூற்று ஐம்பது மில்லியன் வெளிச்ச வருடங்கள் பிடிக்கும், வருடங்களைக் குறித்து பேசும் விஷயத்தில் பூமியைச் சுற்றிலும் வரிசையாக சங்கிலியைப் போன்று '9' என்ற எண்ணை எழுதிக் கொண்டே போனால் எப்படி யிருக்குமோ அதுபோன்று பல லட்ச வருடங்களாயிருக்கும்'' என்றார். ஆனால் அவன் பூமியை விட்டுச்சென்று எவ்வளவு காலம் ஆகியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? நம்முடைய கால அளவின்படி 50 வருடங்கள் மட்டுமே. 40நாம் மிகவும் அவசரம் உடையவர்களாய் இருக்கின்றோம். ஒரு சிறு எறும்பு டூசானிலிருந்து புறப்பட்டு இங்கு பேக்கர்ஸ்பீல்டு இடத்திற்கு பிரயாணம் செய்யுமானால், அது நாற்பது வருடத்தில் எவ்வளவு தூரம் கடந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒருவேளை அரை மைல் தூரமாயிருக்கலாம். பாருங்கள்? அதற்கு அது ஒரு அதிகமான காரியமாகும். நமக்கோ , வாகனம் ஓட்டி வந்தால் பன்னிரண்டு மணி நேரமாகும்; ஒரு ஜெட் விமானத்திற்கோ, சில விநாடிகள் மாத்திரமே; ஆனால் தேவனுக்கோ அது ஒன்றுமேயில்லை. இயேசு சிலுவையில் அறையப்பட்டு நேற்று மதியம் இறந்து போனார். பவுல் நேற்றைய தினம் இறந்து போனார். நேரத்தைக் கணக் கிடுவீர்களானால், ''தேவனுடைய பார்வைக்கு ஆயிரம் வருடங்கள் ஒரு நாளைப் போன்றிருக்கின்றது.'' அதுபோன்றுதான். ஆனால் அவ்விதம் கூட இல்லை. ஆகவே, அந்த அப்போஸ்தலர்கள், மற்றவர்கள் நேற்றைய தினம் தான் இறந்து போனார்கள். நாம் மிகவுமாக அவசரத்தில் இருக் கின்றோம். இங்கே தங்குவதற்காக, சிறு துளி நேரம் மாத்திரமே நமக்கு இருக்கின்றது. மற்றபடி நமக்கு ஒன்றுமே இல்லை. பிறகு நீங்கள் யோசிக்கலாம். நீங்கள் நித்தியத்தை நோக்கிப் பார்க்கும் பொழுது... 41ஐன்ஸ்டீ ன் என்னும் ஒரு மகத்தான் தத்துவ ஞானி அல்லது ஒரு மகத்தான விஞ்ஞானி, “இப்பூமியின் தோற்றத்தைக் குறித்து விவரிக்க ஒரேயொரு புத்தியுள்ள வழிதான் உண்டு. அது, எபிரேயருக்கு எழுதின நிரூபம் 11-ம் அதிகாரம் 3-ம் வசனத்தில் காணப்படுகின்றது. ''விசுவாசத்தினால் தேவன் பூமியை தமது உரைக்கப்பட்ட வார்த்தை யினால் உண்டாக்கினார் என்பதை புரிந்துகொள்ளுதலே'' என்றார். அது எப்படி வானத்தில், அந்தரத்தில் நிற்கின்றது. அது எவ்வாறு தன்னுடைய கோளப்பாதையை (orbit) விட்டு வெளியேறாமல் இருக் கின்றது? எப்படி வானத்தில் உள்ள ஒவ்வொன்றும், அந்த நட்சத்திரக் கூட்டமும், அவைகளிலிருந்து ஒரு நட்சத்திரம் கூட அசையுமானால்... நீங்கள் இரவு நேரத்தில் வெளியே சென்று ஒரு நட்சத்திரம் விழுவதைப் பார்த்தேன்“ என்று கூறுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். இல்லை ஐயா, நீங்கள் பார்த்தது கால வேற்றுமையின் வெளிச்சம். அல்லது சீதோஷ்ண வெளிச்சம் (weather light) ஒரு நட்சத்திரம் ஒரு போதும் அசையாது. அப்படி அது நகரும் என்றால், நாமும் அதனுடன் சேர்ந்து நகருவோம். வானத்தில் உள்ள ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைந்து இணக்கத்துடனிருக்கின்றன. மனித வர்க்கமாகிய நாம் ஏன் அவ்வாறே இருக்கக் கூடாது, சபையை ஒருங்கிணைத்து நாம் எல்லாருமாக வார்த்தையோடு இணக்க மாக இருந்தால் என்ன? பாருங்கள்? அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது தேவனை தன்னுடைய சொந்த வியாக்கியானியாக இருக்க விடுவதேயாகும். அப்பொழுதுதான் நாம் அவ்விதம் இருப்போம். தேவனே அதைக் குறித்த, அவருடைய வியாக்கியானியாய் இருக் கின்றார். 42இப்பொழுது, இது ஒரு பாரடாக்ஸ், (Paradox) நம்ப முடியாத ஏதோ ஒன்று ஆனால் உண்மையான ஒரு காரியம் மாத்திரமே என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். இப்பொழுது, நம்ப முடியாத, ஆனால், உண்மையான அநேக காரியங்கள் இருந்து கொண்டிருக்கின்றது என்று நாம் பார்க்கின்றோம். உண்மையென நம்பமுடியாத காரியங்கள், ஆனாலும் இன்னுமாக அது உண்மையாக இருக்கின்றது. நோவாவின் நாட்களில் பூமியின்மேல் மழை ஒருபோதும் பெய்தது கிடையாது என்பதை நினைவுகூறுங்கள். மழை என்கின்ற ஒரு காரியமே இல்லாதிருந்தது. சூரியனுடன் பூமியானது ஒரே நேர்கோட்டில் இருந்தது. மனிதவர்க்கத்தின் அவிசுவாசமும், கீழ்ப்படியாமையும் பூமியை அதின் நிலையிலிருந்து அகற்றி, சற்று சாயச் செய்து, சாய்வு கோணத்தில் தள்ளி அதினால் உஷ்ணமும், குளிர் காற்றும் கடலிலிருந்து நீராவியைப் புறப்படப் பண்ணினதினால் மழையுண்டாயிற்று. மழை என்பது அப்பொழுது பூமியின் மேல் பெய்யாமல் இருந்தது. ஆனால் இங்கே ஒரு மனிதன் புறப்பட்டு வந்து மழை வரப்போகின்றது என்கின்றான். விநோதமான காரியம். ஆனாலும் அது கர்த்தரின் வார்த்தையாயிருந்தது. எப்படி... 43விஞ்ஞானமானது அன்று கூப்பாடு போட்டதை நான்... நீங்கள், ''நல்லது ஐயா, அவர்களுக்கு விஞ்ஞானம் இருந்தது என்று நீர் எப்படி கூறுகிறீர்“ என்று கேட்கலாம். அவர்கள் அக்காலத்தில் கூர் நுனி கோபுரங்களைக் கட்டியிருந்தனர். அவ்விதக் கட்டிடத்தை நாம் இன்று கட்ட முடியவில்லை. அதற்குத் தேவையான கருவிகள் பொருட்கள் நம் மிடம் இல்லை. அதைக் கட்டக் கூடிய ஞானம் நமக்கு கிடையாது. மிகப் பெரிய அக்கற்களை உயரே தூக்கக்கூடிய கருவிகள் இன்று நம்மிடையேயில்லை. அவர்கள் அதைக் கட்டினார்கள். இன்னுமாக அது நமக்கு, உலகத்திற்கு ஒரு புதிராகவே இருக்கின்றது. அவர்கள் அதை கட்டினார்கள். “நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனின் நாட்களிலும் நடக்கும்'' என்று இயேசு கூறினார் (லூக். 17:26). அந்த நாட்களில் இருந்தது போலவே, மனுஷகுமாரன் வருகின்ற நாட் களிலும் அவ்வாறே இருக்கும். 44சகோதரர்களே, சிறிது நேரம் இங்கு நான் ஒரு சிறிய காரியத்தை உள்ளே திணிக்க விரும்புகிறேன். “அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுபேர் மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்'' என்று பேதுரு சுட்டிக்காட்டினார். எட்டு ஆத்துமாக்கள்! உலக மகா சபைகளின் சங்கத்தின் மூலம் சேர்க்கும் 10 லட்சம் ஆத்து மாக்களைப் பற்றிய காரியம் என்ன? கவனியுங்கள். அது காப்பாற்றாது, இரட்சிக்காது. அது அந்த வார்த்தையாகும். தேவன் இரட்சிக்கின்றார். ''நோவாவின் நாட்களில் எட்டு ஆத்துமாக்கள் ஜலத்தினாலே இரட்சிக்கப்பட்டனர்.'' லோத்தின் நாட்களிலே என்ன இரட்சிக்கப்பட்டது. வனாந்தரத் தின் வழியாக வந்த பிரயாணத்தின் முடிவில் நின்றது யார்? இரண்டு பேர். காலேபும், யோசுவாவும். பாருங்கள்? “நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரன் வரு கின்ற நாட்களிலும் நடக்கும்''. அந்தக் காலம் மகத்தான விஞ்ஞான காலமாயிருந்தது. (பாருங்கள்?), அவர்கள் ஆற்றல் வாய்ந்த மின் காந்த அலைகளின் மூலம் வானத்தை ஆராய்கின்ற ராடார் (radar) கருவியைக் கொண்டும், வானத்தில் ஏவுகணைகளையும் அனுப்பி ”அங்கே மேலே தண்ணீர் என்பதே கிடையாது. அப்படியானால் அது எங்கிருந்து வரும்?'' என்று கூறியிருப்பார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் தேவன், “அது அங்கு வரும்'' என்று கூறினார். அது போதுமானதாயிருக்கின்றது. நோவா அதை விசுவாசித்தான். அதன் மூலம் தன் குடும்பத்தைக் காப்பாற்றினான். 45தேவன் தம்முடைய வார்த்தையை விசுவாசிக்கிற தம்முடைய ஜனங்களை சோதித்தறிகிறார் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். எங்கே தேவன் உண்டோ அங்கே எப்பொழுதுமே, நம்புவதற்கு அப்பாற் பட்ட காரியங்கள் உண்டாயிருக்கும். ஏனெனில் அவர் மனித எண்ணங் களுக்குப் புலப்படாத, நடக்கக்கூடாத காரியங்களைச் செய்கின்றார். அதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? நாம் எல்லோரும் அதை அறிந் திருக்கிறோம். மனித சிந்தைக்கு நம்புவதற்கரிய காரியமாயிருக்கின் றது. இந்த நம்ப முடியாத ஆனாலும் உண்மையாய் இருக்கின்ற காரியத்தை முன்னறிந்து முன்னுரைக்கின்ற மனிதர்களை அவர் எப்பொழுதுமே சோதித்தறிகிறார். அவர்களுக்கு அவர் சோதனைகளை அளிக்கின்றார். அவர் ஒருபோதும் தம்முடைய வழியை விட்டு விடவோ அல்லது மாற்றுவதோ கிடையாது. தேவன் தம்முடைய முறைமையை ஒரு போதும் மாற்றுவதில்லை. அதைக் குறித்து நீங்கள் அறிந்திருக்கிறீர்களா சகோதரர்களே? ஆம், நிச்சயமாக நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அவர் தம்முடைய முறைமையை ஒருபோதும் மாற்றுவது கிடையாது. அவர் எவ்விதம் துவங்கினாரோ அவ்வாறே எப்போதும் தமது வழிமுறைகளை தொடர்ந்து இயங்கச் செய்கின்றார். நோவா என்னும் ஒரு மனிதனைக் கொண்டு பிரசங்கம் செய்வதின் வழியாகத்தான் இந்த உலகத்துடன் தொடர்பு கொண்டாரே தவிர வேறு எந்த வழியிலும் இல்லை. மோசேயின் நாட்களில் அவர்களை மீட்க நான்கு பேரை கீழே அனுப்பியோ அல்லது ஒரு ஸ்தாபனத்தையோ அவர் கொண்டிருக்கவில்லை. ஒரே சமயத்தில் இரண்டு பேரை அவர் பூமியின்மேல் கொண்டிருக்கவில்லை. நாம் ஒவ்வொருவரும், ஒருவரி லிருந்து மற்றவர் உருவத்திலும், தோற்றத்திலும் வித்தியாசப்பட்டவர் களாயிருக்கிறோம். தேவன் ஆட்கொள்கிறார். அவருடைய கட்டுப்பாட் டிற்குள் வருகின்ற ஒரு மனிதன் மாத்திரமே அவருக்குத் தேவையா யிருக்கின்றது. அதுவே அவரின் உதாரணமாயிருக்கின்றது. அவர் மோசேயின் மூலமாய் அதைச் செய்தார். எப்பொழுதும் அவ்விதமே செய்தார். எலியாவும், எலிசாவும் பூமியின் மேல் இருந்தபோது அவர்கள் இருவரும் ஒரே சமயத்தில் இருக்கமுடியாமலிருந்தபடியால், ஒருவன் எடுத்துக்கொள்ளப்பட்டான். மற்றவனோ அவனுடைய சால்வையைப் பெற்றுக்கொண்டான். 46யோவான் பூமியின் மேல் வந்தபோது, அவன் அந்த மணி நேரத்தின் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய வார்த்தையாய் இருந்தான். அதை நாம் அறிந்திருக்கிறோம். அவன் தேவனுடைய வெளிப் படுத்தப்பட்ட வார்த்தையாவான். ஏன்? ஏனெனில் ''வனாந்திரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாகும்“ என்று ஏசாயா முன்னுரைத்திருந்தான். மேலும் கடைசி தீர்க்கதரிசியான மல்கியா, ”இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன். அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்'' என்று முன்னுரைத்திருந்தான். இப்பொழுது கவனியுங்கள், அது மல்கியா 4 அல்ல; அது மல்கியா 3 ஆகும். மல்கியா 3-ல் உள்ள எலியா யோவான் ஆகும். மல்கியா 4 அல்ல. ஏனெனில் இந்த மல்கியா 4-ம் அதிகாரத்தில் குறிப் பிட்ட அந்த தீர்க்கதரிசனமானது வரும்பொழுது பூமியானது அக்கினி யினால் அழிக்கப்பட்டு 1000 வருட அரசாட்சியில் நீதிமான்கள் துன்மார்க் கரின் சாம்பலின் மேல் நடப்பார்கள். அத்தகைய காரியம் யோவானின் நாட்களில் நடைபெறவில்லை. 47மத்தேயு 11-ல், நாம் பார்க்கிறோம், யோவான் தன்னுடைய சீஷர்களை அங்கே அனுப்பினபோது... யோவான் இயேசுவிற்கு தன்னால் இயன்ற மிகமிக குறைந்த கனத்தை (least respect) அளித்தான். அவர் மேல் இருந்த அடையாளத்தை ஏற்கனவே அவன் கண்டிருந்தான். அவன் “அவர் இவர்தான், வனாந்திரத்தில் தேவன் என்னிடம் தண்ணீரினால் ஞானஸ்நானம் கொடுக்க அனுப்பி, ஆவியானவர் இறங்கி யார் மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் என்று கூறினார்” என்றான். அதைக் குறித்து தான் நிச்சயமுடையவனாய் இருப்பதாக அவன் கூறினான். அவன் அந்த அடையாளத்தைக் கண்டான். அதன் பிறகு அங்கே சிறைச்சாலையில் அவனுடைய கழுகின் கண்கள் சற்று மங்கலானபோது, தன் சீஷர்களை அனுப்பி, “வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக் காத்திருக்க வேண்டுமா?'' (மத்.11:3) என்று கேட்டான். அது வார்த்தையை மரியாதைக் குறைவாக, அசட்டை செய்வதாக இருந்தது. ஆனால், இயேசு இதை அறிந்திருந்தார். அவர் யோவானிற்கு ஒரு மகத்தான கனத்தை (a great respect) அளித்தார். அவர் “எதைப் பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரம் தரித்த மனி தனையா? அத்தகையோர் பட்டயத்தைக் கையாளாதவர்கள் ஆவர். அவர்கள் குழந்தைகளை முத்தமிட்டு, மரித்தோரை அடக்கம் பண்ணுகிறவர்கள் ஆவர். அவர்கள் இராஜாக்களின் அரமனைகளில் இருக்கின்றனர்'' என்றார். மேலும் 'எதைப் பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? ஒரு ஸ்தாபனமோ அல்லது ஏதோ ஒரு சமுதாயமோ? ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று இன்னும் சிறிது அதிகமானவைகளை அளித்தால் அவன் அந்த சமுதாயத்தினிடம் சென்று விடுவான். ஏனெனில்... யோவான் அப்படிப்பட்டவன் அல்ல'' என்று கூறினார். இயேசு மேலும், ''நீங்கள் எதைப் பார்க்கச் சென்றீர்கள்? தீர்க் தரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியை பார்க்கிலும் மகத்தான ஒருவனையே (greater) என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.'' அவன் அப்படிப் பட்டவன் தான். அவன் அந்த உடன்படிக்கையின் தூதன் ஆவான். அவன் அந்த பிளவு (the breach) ஆவான். அவன் நியாயப் பிரமாணத் துக்கும், கிருபைக்கும் இடையே உள்ள முக்கியக்கல் (keystone) ஆவான். ''நீங்கள் எதைப்பார்க்கச் சென்றீர்கள்? தீர்க்கதரிசியையோ? தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்க ளுக்குச் சொல்லுகிறேன்' இயேசு மேலும், “அவன் சிறிது காலம் எரிந்து பிரகாசிக்கின்ற விளக்காயிருந்தான்'' என்றார். ஏன்? வார்த்தை உண்டாக்கின வெளிச்ச மாக அவன் இருந்தான். வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக அவன் இருந்தான். பின்பு இயேசு காட்சிக்கு வந்தபோது யோவான், ''நான் சிறுகவும் அவர் பெருகவும் வேண்டும்'' என்று கூறினான். அவர்கள் இருவரும் ஒரு சமயத்தில் இருக்க முடியாதிருந்தது. யோவான் கடந்து செல்ல வேண்டி யதாய் இருந்தது; இயேசு தங்கியிருந்தார். பாருங்கள்? எப்பொழுதுமே அவ்விதமாகத் தான் இருக்கின்றது. 48நோவாவின் நாட்களில் தேவன் அதைச் செய்தார். அது இயற் கைக்கு மேம்பட்ட ஓர் புதுமையாயிருந்தது என்பதை நாம் காண் கிறோம். அது ஏதோ ஒன்றாய் இருந்தது. என்ன? அது நம்பமுடியாத ஏதோ ஒன்று ஆனாலும் உண்மையாய் இருந்தது. அதாவது இன்றைக்கு இருப்பதை விட, அநேகமான மலைகளை விட உயரமான அலைகள் எழும்பினபோது, முழு உலகமானது அசைந்து கொண்டிருந்தபோது, தேவன் அந்தப் பேழையை மிதக்கவிட்டார். அது அதனிடத்தினின்று அசைந்தபோது... அந்த நட்சத்திரங்கள் பின்னாகச் சென்ற போது அல்லது ஏதோ ஒன்று நடந்த போது, அந்த உலகமானது தன்னுடைய கோளப்பாதையை (orbit) விட்டு அங்கே வெளியே அசைந்து சென்றது, அப்போது அந்த மகத்தான அலைகள் எழும்பின. அந்தச் சிறிய பழைய மரக் கப்பலானது நாற்பது நாட்கள் இரவும் பகலுமாக அந்த ஜலத்தின் மேல்—அந்த ஜலத்தில் அசைவாடியது என்றால், நிச்சயமாக அது நம்ப முடியாத ஏதோ ஒன்று ஆனாலும் உண்மையே ஆகும். அது நம்பமுடியாத ஏதோ ஒன்று ஆனாலும் உண்மையான ஒன்று ஆகும். அங்கே மேலே வானத்தில் கொண்டுவரப்படுவ தற்கென்று தண்ணீர் என்பதே இல்லாதிருக்கையில், வானங்களிலிருந்து தேவனால் தண்ணீரைக்கொண்டு வர முடிகிற தென்றால், அது நம்ப முடியாத ஏதோ ஒன்று, ஆனால் உண்மையே. அவர் தமது வார்த்தைக்குப் பொருந்தத்தக்கதாக சூழ்நிலையை அமைக்க அவரால் கூடும். ஆதியாகமம் 22-ம் அதிகாரத்தில் அவர், “யெகோவாயீரே'' ஆக இருந்தது போல, இன்றும் அவ்வாறே இருக் கின்றார். ”தேவன் தாமே தமக்காக ஒரு பலிப்பொருளைப் பற்றிய காரி யத்தைப் பார்த்துக் கொள்வார் பாருங்கள்? அவர் அவ்விதமே இன்றும் இருக்கின்றார். யெகோவாயீரே என்பது அவரின் மீட்கும் கூட்டு நாமங் களில் ஒரு நாமமாகும். 49எபிரெய பிள்ளைகள் அந்த அனல் கக்குகின்ற (fiery) அக்கினிச் சூளையில் தூக்கியெறியப்பட்டபோது, அது நம்ப முடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் உண்மையாய் இருந்தது. அதற்குள் போடத்தக்கதாக அவர்களை தூக்கிச் சென்ற மனிதர்களைக் கொல்லும் அளவிற்கு அந்தச் சூளையானது அவ்வளவு வெப்பம் கொண்டதாயிருக்கையில், அவர் களால் அந்த அக்கினிச் சூளைக்குள் எவ்வாறு நடந்து செல்ல முடிந்தது. இன்னுமாக அதில் தங்கியிருந்தாலும்கூட, அவர்களை அது விடுவிக் கத்தான் செய்தது. அந்த ஒரு காரியத்தை மாத்திரமே அது செய்தது. பாருங்கள்? அவர்கள் எந்தக் கட்டுகளினாலே கட்டப்பட்டிருந்தனரோ, அந்த கட்டிலிருந்து அவர்களை அது விடுவித்தது. அது நம்ப முடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் உண்மையாகும். சில சமயங்களில், நம்முடைய சொந்த வாழ்க்கையில் நம்ப முடியாத ஆனாலும் உண்மையான அதே காரியம் மறுபடியும் மறுபடி யுமாக நடைபெறுகின்றதாய் இருக்கின்றது. சில சமயங்களில், ஒரு தீர்மானத்தை எடுக்கத்தக்கதாக ஒரு பலப்பரீட்சைக்கு நீங்கள் கொண்டு வரப்படுகிறீர்கள். அவர்கள் செய்தவிதமாகவே அந்த தீர்மானத்தில் நீங்கள் நிலைத்து நிற்க வேண்டும். அப்போது சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கின்றது. அது என்ன செய்தது? அது அவர்களுக்கு ஒரு தீங்கையும் செய்யவில்லை. அது அவர்களை விடுவித்தது. சில சமயங் களில் நாம் அவ்விதமான நிலையில் அகப்பட்டுக் கொள்கிறோம். நாம் அச்சமயம் முதலில் என்ன செய்யவேண்டும் தெரியுமா? ஒரு மனிதன் ஆற்றில் மூழ்குகிறான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது, அம்மனிதனிலிருந்து ஆற்றுத்தண்ணீரை எடுக்கும் முன்பு அவனை ஆற்றினின்று வெளியே எடுக்கவேண்டும். ஆகவே சில சமயங்களில் ஒரு மனிதன் அதைத்தான் செய்ய வேண்டியவனாய் இருக்கின்றான். அதாவது, வெளியே வந்து, பின்னர் தன்னுடைய தீர்மானத்தை நிர்ணயித்து உறுதி கொண்டு நின்று, காரியத்தை வெளியேற்றுவதாகும். காரியத்திலிருந்து அவனை வெளியே எடுத்துப் போடுவதாகும். ஆதலால் காரியத்தை அவனிலிருந்து வெளியே எடுத்து விட அவனுக்கு ஏதுவாயிருக்கும். அதைத்தான் எபிரெய பிள்ளைகள் செய்ய வேண்டியதாய் இருந்தது. அவர்கள் நெருப்பிலிருந்து வெளியேற வேண்டியதாயிருந்தது. ஆதலால் நம்பமுடியாத ஏதோ ஒன்று, ஆனால் உண்மையான ஒரு காரியம் தேவனால் நடப்பிக்கப்பட்டது. 50தாவீது, நாம் தாவீதை, ஒரு சிறு பையனாக, ஒரு ஈட்டியையோ, பட்டயத்தையோ கொண்டிராமல் ஒரு கவண் கல்லை மாத்திரமே வைத்திருந்தான் என்று நாம் பார்க்கிறோம். சில ஆடுகளை கண்காணிக்க, பார்த்துக்கொள்ள அவன் வைக்கப்பட்டிருந்தான். அந்த ஆடுகளை அவன் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதே அவனுடைய தகப்பனின் வார்த்தையாக இருந்தது. அவன் ஓர் மேய்ப்பனாக இருந்தான். சகோதரர்களே, அதே விதமாகத்தான் நாமும் இக்காலையில் நின்று கொண்டிருக்கின்றோம். நாம் மேய்ப்பர்கள் (Shepherds) நமக்கு ஒரு கல்லூரி படிப்பு தேவையில்லை. நமக்கு ஒரு கூட்ட வேத சாஸ்திரங்கள் தேவையில்லை. பிதாவின் வார்த்தைதான் நமக்கு தேவையாயிருக்கின்றது. அது ஒருக்கால் எளிமையாயிருக்கலாம். ஆகவே ஒரு கரடியோ அல்லது வஞ்சகமாக கவர்கின்ற ஒன்று வந்து பிதாவின் ஆடுகளில் ஒன்றைப் பிடித்து ஏதோ ஒருவிதக் கொள்கையினால் அதைச் சுற்றி எடுத்துச் செல்கையில், நம்மிடம் இருப்பது ஒருக்கால் ஒரு சிறிய காரியம் போன்று இருக்கலாம். அது ஒருவேளை கேலி செய்யப்படலாம். ஆனால் அது, ஓ, தேவன் அதன் பின்னால் நிற்கும்போது மிகவும் வல்லமையுள்ளதாக இருக்கும். அதைத் தொடர்ந்து செல்; அதை திரும்பக் கொண்டு வா. அந்த கவண் கல்லை எடுத்து ஒரு சிங்கத்தை தாவீது எவ்வாறு வீழ்த்தியிருப்பான்! நானும் சிங்கத்தை வேட்டையாடியிருக்கின்றேன். என்னே! ஒரு சமயம் ஒரு குன்றின் மேல் நான் உட்கார்ந்து கொண் டிருந்தேன். நான் நினைக்கிறேன். அது இங்கிருந்து அரை மைல் தூரம்... இந்த மிருகங்களை வைத்து வேடிக்கை காட்டும் வட்டாரங்களில் (சர்க் கஸ்) அவை கெர்ச்சிப்பதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் காட்டில் உள்ள துஷ்ட சிங்கம் கெர்ச்சிப்பதை ஒரு விசை நீங்கள் கேட்க வேண்டும். அது கெர்ச்சிக்கும்போது குன்றின் மேலுள்ள பாறைகள் உருண்டு ஓடும். 51ஆகவே, அப்படிப்பட்ட கொடூரமான மிருகமாக அது இருக்கை யில், இந்தச் சிறிய பையன், சரிந்த தோள்களை உடையவன், செவ்வண்ண நிறத்தைக் கொண்ட சிறுவனான இவன் (ruddy fellow) சென்று ஒரு கவண் கல்லைக் கொண்டு அந்த சிங்கத்தைக் கொல்கின்றான். அது நம்பமுடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் உண்மையான ஒன்றே. கோலியாத் என்னும் பெயரைக் கொண்ட, பதினான்கு அங்குல விரல்களையுடைய, தன் வாலிபப் பிராயத்திலிருந்தே ஒரு போர் வீரனாக இருந்து வந்த, கவசத்தால் முழுவதுமாக மூடப்பட்டிருந்த ஒரு மனிதன், அந்த இராட்சதனை இந்த சாதாரண சிறிய கவண் கல்லைக் கொண்டு எப்படி தேவன் வீழ்த்தினார் என்பது நம்பமுடியாத ஏதோ ஒன்று. ஆனாலும் உண்மையான ஒன்றாகும். ஏனெனில் அவன் சேனைகளின் தேவனை நிந்தித்துக் கொண்டிருந்தான். அது நம்ப முடியாத ஏதோ ஒன்று ஆனாலும் உண்மையாய் இருந்தது. ஆகவே, இன்று நாம் ஒரு நிலையை எடுக்கையில், மனிதர்கள் வந்து இக்காரியங்கள் நடக்கவே நடக்காது என்று கூறுவார்களாயின் அவர்களோடு வாதமோ, தர்க்கமோ செய்ய வேண்டாம். அது தவறு. அவர்களோடு தர்க்கம் செய்ய வேண்டாம். அதற்கு மாறாக பட்டயத்தை (வார்த்தையை-தமிழாக்கியோன்) எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எடுக்க வேண்டியதாவது... இந்நாளிற்குரிய தம்முடைய வாக்குத்தத் தத்தை தேவன் அளித்திருக்கையில், இந்த நாளிலே அது என்னவா யிருக்க வேண்டும் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அதை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்; எல்லா கோலியாத்துக்களும் அதன் கீழே விழுந்து போவார்கள். அது நம்பமுடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் உண்மையான ஒன்றாகும். நம்ப முடியாத, ஆனாலும் உண்மையாய் இருக்கின்ற ஒன்றைத்தான் தேவன் இன்றைக்குச் செய்து கொண்டிருக் கின்றார். எப்படி அவரால் முடியும். தேவனால் தான் அதை செய்ய இயலும். அது சரி. அந்த கவண்... 52மோசே என்பவன் எகிப்தியரின் எல்லா ஞானத்தினாலும் பயிற்று விக்கப்பட்டிருந்தான். எகிப்தியருக்கு அவனால் விஞ்ஞானத்தையும், இன்னும் மற்ற காரியங்களையும் கற்றுக் கொடுக்க முடிந்தது. ஆனால் தேவன் அவனை உருவாக்கின விதமானது நிச்சயமாக நம்பமுடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் உண்மையான ஒரு காரியமாக இருக்கின்றது. இப்பொழுது கவனியுங்கள். அவன் கொண்டிருந்த எல்லாக் காரியங் களையும், எல்லா கல்வி அறிவும் பெறுவதற்கு நாற்பது ஆண்டுகள் ஆயின. பிறகு அந்த எல்லாக் காரியங்களையும் அவனிலிருந்து எடுத்துப் போட தேவனுக்கு நாற்பது ஆண்டுகள் பிடித்தது. பாருங்கள், பாருங்கள்? மனிதனுக்குள்ளே இருக்கும் தண்ணீரை வெளியே எடுப்பதற்கு முன் தண்ணீருக்குள் இருக்கும் மனிதனை வெளியே எடு. பாருங்கள்? அவன் கற்றதையெல்லாம் அவனை விட்டு வெளியே எடுக்க அவருக்கு நாற்பது ஆண்டுகள் பிடித்தன. பாருங்கள்? எந்த இஸ்ர வேலரை விடுவிக்க தன்னால் இயலாது என்று அவன் கண்டானோ அதற்கென்றே அவன் பிறந்தவனாயிருக்கிறான் என்பதை அவன் கண்டுகொண்டான். அந்த தெரிந்துக்கொள்ளுதலைத் தவிர அவனுக்கு வேறு வழி எதுவும் அவனுக்கு காணப்படவில்லை; ஏனெனில் தேவன் அந்த நோக்கத்திற்காகவே அவனை அழைத்திருந்தார். ஆகவே அவனி லிருந்து அதை வெளியே எடுத்துப்போட நாற்பது ஆண்டுகள் பிடித்தது என்று நாம் பார்க்கின்றோம். ஆகவே சில நேரங்களில் தேவனுடைய கற்பனைகளை மெய்யா கவே ஒரு மனிதன் பின்பற்றும்போது, அவன் செய்யும் கிரியைகள் மற்றவர் பார்வைக்கு பைத்தியம்'' என்று தோன்றும் என யூகிக்கிறேன். இயேசு, “ஒரு பையித்தியக்காரன்'' என்று கருதப்பட்டார். ஆனால் தாம் என்ன செய்யவேண்டும் என்று பிதாவானவர் கூறியிருந்தாரோ அதை அவர் சரியாகச் செய்து கொண்டிருந்தார். வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாக அவர் இருந்தார். ஆனாலும், ”பையித்தியக்காரன் '' என்று அழைக்கப்பட்டார். 53கவனியுங்கள், மோசே தன் மனைவியாகிய சிப்போராளை கழுதை யின் மேல் உட்காரவைத்து, தன் மகனாகிய கெர்சோமை இடுப்பில் வைத்துக்கொண்டு எண்பது வயது கிழவனாக, வெண்தாடி முகத்தி லிருந்து இடுப்பு வரை தொங்கிக் கொண்டிருக்க வழுக்கை தலையானது வானத்தை நோக்கி பளிச்சென்று பளபளக்க ஒரு வளைந்த கோலை தன் கையில் பிடித்தவனாக எகிப்தை ஜெயிக்கத்தக்கதாக சென்று கொண்டி ருக்கின்றான். இதை உங்களால் கற்பனை செய்து பார்க்கக் கூடுமா? அவர்கள் ''மோசே நீ எங்கே சென்று கொன்டிருக்கிறாய்?'' என்றனர். “எகிப்தை கைப்பற்றத்தக்கதாக சென்று கொண்டிருக்கின்றேன்'' ''நீ தான் என்று எப்படி உனக்குத் தெரியும்?'' “அதை செய்'' என்று கர்த்தர் என்னிடம் கூறினார். காரியம் என்னவென்றால் அவன் அதைச் செய்தான். ஒரு சேனையை மேற்கொள்ளவேண்டும், ஒரு சேனையை மாத்திரம் அல்ல, ஆனால் ஒரு நாட்டையே... ஒரு சேனையையோ அல்லது ஒரு பட்டயத்தைக் கொண்டோ செய்யாமல், ஒரு வளைந்த கோலைக் கொண்டு இஸ்ரவேலை மீட்டு தேவனுடைய நியாயத்தீர்ப்புகளை எகிப்தின் மேல் அவன் கொண்டு வந்தது நம்பமுடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் உண்மையான ஒன்றாய் இருந்தது. நம்பமுடியாத ஏதோ ஒன்று ஆனாலும் உண்மையேயாகும். யாராகிலும் உண்மையென நம்ப முடியாத, ஆனாலும் உண்மை யாயிருக்கின்ற காரியங்களைக் காண்பார்களானால், அவர்களால் செய்யக் கூடுமானால்- உங்களால் அதை செய்யக் கூடுமானால் அது நம்பமுடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் உண்மை . 54இப்பொழுது, நாம் பேசிக்கொண்டிருக்கும், இங்கே யோசுவா 10:12 லும் நாம் காண்பதென்னவெனில், யோசுவா... நாம் கூறுகிறோம், அவர்கள் இன்று நமக்கு கூறும் காரியம், ''சூரியன், அப்படியே நிற்கின்றது. பூமியானது சுழன்று கொண்டி ருக்கின்றது. பூமியின் சுழற்சி நின்றுபோகுமானால், அது கீழே விழுந்து விடும். நிலவுலக புவிஈர்ப்பு தன்மை அதை (பூமியை -தமிழாக்கியோன்) அதன் ஸ்தானத்திலே நிற்கச் செய்து கொண்டிருக்கின்றது என்பதேயாகும். சகோதரர்களே, அங்கு என்ன நடந்தது? அவன் அங்கு, “சூரியனே நில் என்றான்.'' இப்பொழுது, சகோதரரே, என்ன சம்பவித்தது? சூரியனை தரித்து நிற்கும்படி கூறினான். 55பள்ளியில், வேதத்தை எனக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியர், “அவர்... தேவன் அவனுடைய (யோசுவா-தமிழாக்கியோன்) அறியா மையைக் கண்டு அதைப் பார்க்காமலிருக்க கண்களை மூடிக்கொண் டார்'' என்று கூறினார். ஆனால் எப்படியாயினும், அது தரித்து நின்றது. அதுவேயாகும். அது நின்றது. ஆகவே ஒரு நாள் முழுவதுமாக அது நின்றது என்று அவன் இங்கே கூறுகிறான். சந்திரன் ஆயிலோன் மீது நின்றது. அந்த சூரியனானது தரித்து நின்றது... அவர் நிறுத்தியதெல்லாம், அவர் எதை நிறுத்தினார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் “தரித்து நில்'' என்று ஒரு மனிதன் கூறினபடியால், சூரியன் தரித்து நின்றது என்று இங்கு எழுதப்பட்டிருக்கிறது. விஞ்ஞானம் அதை நிரூபிக்கின்றது. அது உண்மையென வானத்தில் உள்ள ஒரு அடையாளம் நிரூபிக்கின்றது. இன்று வானங் களில் உள்ள அடையாளம் அது நடந்தேறியது என உறுதிப் படுத்துகிறது. பாருங்கள்? அது சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு அல்லது அதைப்போன்ற ஏதோ ஒன்று ஒரு வேளை இரண்டாயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் அது நடந்தது. அது... அந்த அடையாளத்தினால் கடந்து நட்சத்திரங்களுக் குள்ளாக கடந்து செல்ல அதற்கு நேரம் இருக்கவில்லை. அது சுமார்.... தேவனுடைய கால அளவின்படி அது சுமார் இரண்டு நாட்களுக்கு முன் னர் நடந்த ஒன்றாகும். (பாருங்கள்?), ஆனால் இன்னுமாக அந்த அடை யாளம் இருக்கின்றது. ''அது தரித்து நின்றது.'' அது நம்பமுடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் அது உண்மை அதை யாராலும் ஆராய்ந்து விட முடியாது. அந்த சூரியனானது..... 56பூமியானது சுற்றிக்கொண்டிருப்பதினால், நீங்கள் “அவர் பூமியை நிறுத்தினார்'' என்றுக் கூறலாம். சரி, அவர் பூமியை நிறுத்தியிருப்பா ரென்றால் விஞ்ஞானமானது, ”புவிஈர்ப்புத்தானமானது சுழற்சியைக் கட் டுப்படுத்துகின்றது, ஆகவே நின்றுவிடுமானால் அது கீழே விழுந்து விடும்“ என்று கூறுகின்றது. ஆனால் அது தேவனுடைய கரத்தினால் சரியாக சுழன்று கொண்டேதான் இருந்தது. என்ன? அது நம்பமுடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் அது உண்மை . ''ஓ, அது அநேக காலங்களுக்கு முன்பாக நிகழ்ந்த ஒன்று'' என்று நீங்கள் கூறலாம். அதே தேவன் இன்றைக்கும் அதே விதமாகத்தான் இருக்கின்றார். இயேசு மத்தேயுவில் கூறினார், மத்தேயு இல்லை, அது பரி. மாற்கு 11:22-ல் “ நீ இந்த மலையைப் பார்த்து, இடம் பெயர்ந்து செல் என்று கூறி, பிறகு உன் இருதயத்தில் சந்தேகம் கொள்ளாமல், நீ கூறினது அப்படியே நடந்தேறும் என்று விசுவாசிப்பாயானால், நீ கூறினபடியே சம்பவிக்கும்'' என்று கூறினார். அது இயற்கைக்கும் எதிரான ஒன்றாகும். ஆனால் அதனுடன் இணைந்த ஒரு செயல் நோக்கமும், குறிக்கோளும் உடையவனாக நீ இருத்தல் அவசியம். அவ்வாறே நடப்பிக்கப் பட்டுள்ளதா என்று வார்த்தையில் கண்டறியுங்கள், அப்படியானால் நீங்கள் அதைச் செய்ய தேவன் உங்களை அழைக்கிறார். அது அவ்வித மாகவே நிறைவேறும். அவ்வாறே செய்யவேண்டும் என்று வார்த் தையில் உரைக்கப்பட்டிருக்கின்றது என்று நீங்கள் அறிவீர்களானால், நீங்கள் அதைச் செய்ய தேவன் உங்களை அழைக்கின்றார். அப்பொழுது அது நிறைவேறும்; உங்கள் நோக்கமும் குறிக்கோளும் தேவனோடு சரியாக அமையுமென்றால், ஆகவே தான் தரிசனங்கள் வருகின்றன. ஏன் காரியங்கள் அவ்விதமாக ஆகின்றன..... நீங்கள் அதை அறிந்தாக வேண்டும். தேவன் அதை இந்த மணி நேரத்திற்கென்று வாக்குத்தத்தம் செய்திருக்கின்றார் என்பதை நீங்கள் அறியவேண்டும். ''லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவும் நடக்கும்'' கடைசி நாட்களுக்கென்று அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். ஆகவே அது நடந்தேறத்தக்கதாக அவர் அதை அழைக்கின்றார். அவர் அதை அழைக்கின்றார். அது நிறைவேறுவதைக் குறித்து யாதொரு பிரச்சனையும் இல்லை. தேவன் அவ்வாறே கூறினார். அது முடிந்துபோன ஒன்றாகும். நிச்சயமாக, அது, அது நம்பமுடியாத ஏதோ ஒன்று, ஆனால் அது உண்மை . நீ அதை விவரிக்க முடியாது. சில குறிப்பிட்ட காரி யங்கள் முன்னறிவிக்கப்பட்டு ஒரு முறைக்கூட நடந்தேற தவறின தில்லை என்பதை ஒரு மனிதனாலும் விவரிக்கமுடியாது. அது நம்ப முடியாத ஏதோ ஒன்று, ஆனால் அது உண்மை . ஆனால் தேவன் அதைச் செய் என்று கூறினார். அது அந்த நாளாகும். அந்த நாளில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். “சூரியன் தரித்து நின்றது” 57சிம்சோன், சிறிய சுருட்டை மயிரை உடைய தலையைக் கொண்ட ஒரு குள்ளன், எவ்வாறு வெறும் கையினாலே, ஒரு சிங்கத்தைக் கொல்ல முடியும், அது நம்பமுடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் உண்மை தேவனிடத்திலிருந்து பிரிந்த, தேவனுடைய வார்த்தையினால் வேறு பிரிக்கப்பட்ட நகரேசயனாயிமிருந்தான். அவன் ஒரு நசரேயனாயிருந் தான். ஆதலால் அவன் வார்த்தைக்காக தன்னைத் தானே வேறு பிரித்துக் கொண்டான். அங்கே இருந்த கதவின் அளவின்படியான தோள்கள் அவனுக்கு இருக்கவில்லை. அப்படிப்பட்ட தோள்களையுடைய எந்த ஒரு மனிதனாலும் ஒரு சிங்கத்தைக் கொல்ல முடியும். விஞ்ஞானம், அல்லது இன்றைய வேத சாஸ்திரங்கள் அப்படிப்பட்ட ஒரு தோற்றத்தை உடையவனாக படம் பிடித்துக் காட்ட முயற்சிக்கின்றது. ஓவியர்களும் அவனுடைய தோற்றத்தை அவ்விதமாக வரைய முயற்சிக்கின்றனர், அப்படியென்றால் அது ஒரு பெரிய புதிரல்ல. ஆனால் அவன் ஒரு சாதாரண சிறிய குள்ள மனிதனாயிருந்தான். (பாருங்கள்?). ஆகவே முற்றிலுமாக அவனால் அதைச் செய்யக் கூடாமற்போயிற்று. ஆனால் கர்த்தருடைய ஆவி அவன் மேல் வந்த போது, அவனால் அதைச் செய்ய முடிந்தது. ஒரு வேளை நாம் தனியாக நின்று கொண்டிருப்போமானால்; ஒருவராக அல்லது இருவராக நின்று கொண்டிருப்போமென்றால், எதுவா யிருந்தாலும் பரவாயில்லை, அவர் வாக்குத்தத்தத்த செய்து, நீ செய்ய வேண்டும் என்று கூறின ஒரு வார்த்தையை உறுதிப்படுத்த கர்த்தருடைய ஆவியானவர் முயற்சி செய்கிறாறென்றால், அது நடந்தேறும். அது மறுபடியுமாக நம்பமுடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் உண்மை யான ஒரு காரியமாகும். நிச்சயமாக. 58இந்த மனிதன் அங்கே நிலத்தில் கிடந்த ஒரு கழுதையின் தாடை எலும்பை எடுத்தபோது, அது நம்ப முடியாத ஆனாலும் உண்மையான ஒரு காரியமாயிருந்தது. இப்பொழுது, அந்த வெண்கலத்தாலான பெலிஸ்தியரின் தலைக் கவசங்கள் ஒரு கன அங்குலம் தடிப்பானதாக இருந்தன. அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். அங்கே வனாந்திரத்தில் கிடந்த ஒரு கழுதையின் தாடை எலும்பை அவன் எடுத்துக் கொண்டான். அத்தகைய எலும்பை நீங்கள் எப்பொழுதாகிலும் கையிலெடுத்த துண்டா? அதை உங்கள் காலினால் உதைப்பீர்களென்றால் அது சுக்கல் சுக்கலாகிவிடும். ஒருகல்லின் மேல் மோதுவீர்களானால் அது ஏறத்தாழ தூளாகிவிடும். ஆனால் அவன் அந்த தாடை எலும்பை எடுத்துக் கொண்டு அதினால் அந்த வெண்கல தலைச்சீராக்களின் மேல் அடித்து 1000 பெலிஸ் தியரை விழத்தள்ளினான். அந்த தாடை எலும்பு எவ்விதம் நொறுங்காமல் இருந்தது? அந்த பயிற்சிப் பெற்ற ஆயுத மனிதர்களுக்கு எதிராக அவனு டைய புயங்கள் சளைக்காமல் எவ்விதம் இருந்தன? நம்ப முடியாத ஒன்று, ஆனாலும் உண்மை . ஏனெனில் தேவன் வாக்குத்தத்தம் செய்தார். தேவன் எங்கிருக்கிறாரோ அங்கே நம்பமுடியாத ஆனாலும் உண்மை யான காரியங்கள் எப்போதும் நடக்கும். ஆம் ஐயா? 59இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப். அரசனும், யூதேயாவின், யூதாவின் இராஜவாகிய யோசபாத் என்னும் நீதிமானும் ஒரு உடன் படிக்கைக்குள், கூட்டணிக்குள் வந்தது அந்த நாட்களில் விநோதமான காரியமல்லவா. ஒரு விசுவாசி எவ்விதம் பாவனை விசுவாசியோடு ஐக்கியம் கொள்ளமுடியும்...... இன்றைக்கும் மனிதர்கள் அவ்விதமான ஒரு குழப்ப நிலைக்கு வந்து விடுகின்றனர். வார்த்தையை விசுவாசிக்காத மனிதரோடு கலந்து விடுகின்றனர். மீண்டுமாக வெளியே வர முடியாதபடிக்கு அவர்கள் இவ்வித நட்புக்களின் மூலமாக பிணைக்கப்பட்டுவிடுகின்றனர். அதை ஏற்றுக்கொள்ள அவர்கள் பயப்படுகின்றனர். இந்த உங்கள் சகோதரனைக் குறித்து நான் மெச்சுகிறேன். இப்பொழுது இதை நீங்கள் வியாக்கியானம் செய்யவேண்டாம். பாருங் கள்? மற்றவர்கள் “அதனுடன் நமக்கு சம்பந்தமில்லை அதை விட்டு வெளியே நடவுங்கள்'' என்று கூறியபோதும், நீங்கள் முன்வந்து இக் கூட்டத்தை ஒழுங்கு செய்தீர்கள். அத்தகைய மனிதனைக் குறித்து நான் மெச்சுகிறேன். ராயர்களுடைய கட்டளைகளுக்கு நீர் பயப்படவில்லை, பாரும்! ஆம், ஐயா. 60பாவனை விசுவாசிகளோடு தங்களைத் தாங்களே கொக்கிப் மாட்டி சிக்கிக் கொள்கின்ற விசுவசிகள், தேவனுக்கு சேவை செய்யாமல் உலகப்பிரகாரமான சமுதாயக் காரியங்களைக் குறித்தே அதிகமாக சிந்தித்து, மனைவிக்கு ஒரு அருமையான பணியாளனாக இருந்த அந்த வெது வெதுப்பான, எல்லைக் கோட்டு விசுவாசியான ஆகாபினிடம் யோசபாத் சென்ற போது அதைத்தான் செய்தான். அவளுக்கு செவிசாய்த்தல்... இந்த நாட்டிற்கு (அமெரிக்கா - தமிழாக்கியோன்) இஸ்ரவேல் ஒரு நிழலாயிருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அவர்கள் எப்படி அங்கு சென்று அங்கு குடியிருந்தவர்களை விரட்டி வேளியேற்றி அங்கு குடியேறி, மகத்தான மனிதர்களாகிய தாவீது, சாலமோன் போன்றவர்களைக் கொண்டிருந்தனர். ஆனால் கடைசியில் ஆகாபைக் போன்ற ஒருவன் எழும்பினான். ஆனால் ஆகாபின் நாளிலே அந்த தீர்க்கதரிசியானவன் (மிகாயா -தமிழாக்கியோன்) காட்சியில் வந்தான். தேவன் எப்பொழுதுமே தம் முடைய வார்த்தையை உறுதிப்படுத்துகின்றார். ஆகவே அதே விதமான காரியத்தைத் தான் இந்த தேசமானது செய்திருக்கின்றது என்பதை நாம் பார்த்தோம். நாம் உள்ளே வந்து இந்தியர்களை விரட்டி, ஆக்கரமித்துக் கொண்டோம். பிறகு வாஷிங்டன், லிங்கன் போன்றவர்களை நாம் உடையவர்களாக இருந்தோம். ஆனால் இப்பொழுது நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்? நல்லது... ஆனால் தேவன் இன்னுமாக தீர்க்கதரிசிகளை எழுப்பக் கூடியவராக இருக்கின்றார். அவருடைய வார்த்தை விரும்பும்போது, இந்த கல்லுகளினால் ஆபிரகா முக்குப் பிள்ளைகளை உண்டாக்க அவர் வல்லவராயிருக்கிறார். நாம் அதைப் பெற்றுக் கொள்வோம் என்று மல்கியா கூறியுள்ளது. ஆகவே நாம் அதைப் பெற்றுக்கொள்வோம். அது இங்கிருக்கும். நீங்கள் கவலைக் கொள்ள வேண்டாம். ஏனெனில் அவருடைய வார்த்தையானது நிறை வேறும். கவனியுங்கள், அங்கே அந்த தேசத்தில் மிகாயா என்னும் தீர்க்க தரிசி இருந்தான். ஆகவே, ஆகாப் தேசத்திற்கு ஒரு பளிச்சிடும் பொலிவை உண்டாக்கத்தக்கதாக அங்கே நானூறு எபிரெயத் தீர்க்கதரி சிகளைக் கொண்டிருந்தான். அவர்களைக் கொண்ட ஒரு மகத்தான அமைப்பு, ஸ்தாபனம். அவர்கள் நன்றாக, மிடுக்காக உடையுடுத்தி, கல்வியறிவு பெற்ற மேதாவிகள் ஆவர். இப்பொழுது, அவர்கள் அஞ்ஞானிகள் அல்ல; எபிரெய தீர்க்கதரிசிகள். யோசபாத் அவர் களோடே இந்த உடனப்படிக்கையை -கூட்டணியை ஏற்படுத்தினான். 61எல்லாம் நன்மைக்கு ஏதுவாக அங்கு நடக்கிறது என்று நான் நினைக்கிறேன். இன்னிசையானது தன் தாளத்தை சரியான தாளமாக வாசித்துக்கொண்டிருந்தது. பாருங்கள்? ஆகவே அங்கே சென்று ஏதோமின் இராஜவின் மேல் யுத்தம் செய்து பிறகு தேசத்தினுள் சென்று சீரியரின் மேல் போர் தொடுக்க யோசபாத் உடன்படிக்கையை, கூட்டணியை அமைத்தான். ஏனென் றால் மிகவும் சரியான ஒன்றாக அது காணப்பட்டது. ஆகவே யோசபாத் தேவனுடைய மனிதனாக இருந்தபடியால் ''என்ன, நாம் கர்த்தரிடத்தில் விசாரிப்பது நலமாயிருக்குமல்லவா?' என்ற ஒரு யோசனையைத் தெரிவித்தான். அதற்கு அவன் (ஆகாப் தமிழாக்கியோன்) “அது சரியானதே. சற்று பொறும். அதைக் குறித்து நான் சிந்தித்திருக்கவேண்டும். ஆம், அங்கே ஓர் வேதசாஸ்திர கல்லூரி எனக்கு உண்டு. இந்த தேசத்திலேயே மிகச் சிறந்தவர்கள், பெரிய மேதாவிகள் என்னிடம் உண்டு. நீ எப்பொழு துமே கேட்டிராத வண்ணமாக மிகவும் அழகாக ” ஆமென்'' என்று அவர்களால் கூற முடியும்'' என்று கூறினான். பாருங்கள். 62நல்லது, அவன் அங்கு சென்று அவர்களை வரச் செய்தான். ''அவர்களை இங்கு கொண்டு வாருங்கள். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைக்கட்டும்“ இங்கே எல்லாத் தீர்க்கதரிசிகளும் வருகின்றனர், நன்றாக உடையுடுத்தியுள்ள மனிதர், நவ நாகரீக மனிதர், கல்வியின் ஒவ்வொரு அணுவையும் கற்றறிந்தவர்கள். அவர்கள் கிரேக்க எபிரெய பாஷைகள் மற்றும் எல்லாவற்றையும் அறிந்திருந்தனர். பாருங்கள்? அவர்கள் எல்லோரும் வந்து தீர்க்கதரிசனம் உரைத்தனர். தீர்க்கதரிசனம் உரைக்க அவர்களுக்கு உரிமை இருந்தது. அவர்கள் ஆகாபைப் பார்த்து, ''காரியம் என்ன? அந்த தேசம் இஸ்ரவேலை சேர்ந்தது, நீர் போம்''ஆகவே அது உண்மையானதாகும். ''யோசுவா அதை நமக்குத் கொடுத்தார். தேவன் அதை நமக்குக் கொடுத்தார். யோசுவா பங்கிட்ட நிலம் அது. அந்த தேசத்தில் விளையும் கோதுமை யினால் பெலியஸ்தியரின் வயிறு நிரம்புகிறது, நமது பிள்ளைகளோ பசியாயிருக்கின்றனர்'' என்றனர். சரியாகப் பார்க்கப் போனால் அவர்கள் (400 தீர்க்கதரிசிகள் தமிழாக்கியோன்) முற்றிலுமாக வார்த்தை யின்படியே தான் இருந்தனர். ஆனால் அவர்களோ (இஸ்ரவேலர்- தமிழாக்கியோன்) பாவம் செய்து அந்த தேசத்தை இழந்துவிட்டிருந்தனர். அவர்கள் அதை இழந்திருந்தனர். அது ( அந்த தேசம் - தமிழாக்கியோன்) அவர்களுடையது (சீரியர் - தமி ழாக்கியோன்) அல்ல பாருங்கள்? நீங்கள் ஆரம்ப நிலைக்குச் சென்று பார்ப்பீர்களானால் அது ஆகவே அவர்களுக்கு சொந்தமானதாக இருந்தது. ஆகவே அந்த தீர்க்கதரிசிகள் சரியாகத்தான் அதைக் கூறினார்கள். அவர்கள், “போங்கள். ஆண்டவர் உங்களோடு இருக்கின்றார்'' என்று கூறினர். 63நேற்று இரவு நான் யோசேப்பைக் குறித்து கூறினபடி... அவன் ஒரு நீதிமானாயிருந்தான். இங்கு யோசாபாத்திற்கு ஏதோ ஒன்று சரியான தொனியைக் கொடுக்கவில்லை. அவன் ஒரு நீதிமானாயிருந்தான். ஆகவே அவன், இவர்களையல்லாமல் வேறே யாராகிலும் ஒருவன் உம்மிடத்தில் இல்லையா? என்றான். அப்பொழுது ஆகாப், “இன்னும் ஒருவனா, முழு வேத சாஸ்திரி கல்லூரியையே, நாம் கொண்டிருக்கிறோமே? (பாருங்கள்? பாருங்கள்?) தேசத்திலேயே மிகவும் சிறந்தவர்களை நாம் கொண்டிருக்கிறோம், எபிரெயத் தீர்க்கதரிசிகள், அவர்கள் சரியாகத்தானே கூறுகின்றனர்? அவர்கள் கூறுவது வார்த்தையோடு எவ்வளவு நெருக்கமாகக் காணப்படு கின்றது. அந்த தேசம் நமக்கு சொந்தமானது என்று வார்த்தையானது கூறியிருக்கின்றது. ஆகவே நாம் சென்று அதைப் பெற்றுக் கொள்ள எல்லா உரிமையையும் பெற்றிருக்கிறோம்'' என்றான். ஆனால் இயேசுவும் பிசாசைப் பார்த்து அதே காரியத்தைத் தான் கூறினார், “இதுவும் கூட எழுதியிருக்கிறதே'' என்றார். அதைத்தான் அவர்கள் காணத் தவறினர். அது தான் அவர்கள் இயேசுவை அவிசுவா சிக்கும்படிக்குச் செய்தது, ”ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்றும் கூட எழுதப்பட்டிருந்தது. பாருங்கள், அவர்கள் அதைக் காணத் தவறினர். 64ஆகவே, அவர்களெல்லாரும் “நீர் போம். ஆண்டவர் உம்மோடு இருக்கிறார். அவர் உமக்கு ஜெயத்தைக் கொடுப்பார். ஏனெனில் அந்த தேசம் நமக்குச் சொந்தமானது. அது- அது ஆண்டவருடைய நாமத்தில் என்ற விதமாக உள்ளது. இங்கே அது இருக்கின்றது'' என்று கூறினர். ஆனால் அது யோசபாத்திற்கு சரியாகத் தொனிக்கவில்லை. அவன், “மேலும் விசாரித்து அறிகிறதற்கு இன்னுமாக வேறே யாராகிலும் ஒருவன் உமக்கு இருக்கின்றானா?'' என்றான். அப்பொழுது ஆகாப், “ஆம் இன்னும் ஒருவன் இருக்கின்றான். ஆனால் நான் அவனைப் பகைக்கிறேன். சபையின் சங்கம் அவனை வரவேற்பதில்லை, ஏற்றுக் கொள்வதில்லை (ஒலி நாடாவில் காலி யிடம்-ஆசி)...? அவனோடு நமக்கு ஒரு காரியமும் இல்லை. அவன் இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்பவன்'' என்றான். அப்பொழுது யோசாபாத், “ராஜாவே அப்படிச் சொல்ல வேண் டாம்'' என்றான். அப்பொழுது ஆகாப், ”அவனை அழைத்துவா“ என்றான். 65ஆகவே அவர்கள் ஒரு பிரதானியை அனுப்பினர், அவன் மிகாயாவைப் பார்த்து “மிகாயா, நீ திரும்பவும் ஐக்கியத்திற்குள் வரவிரும்புகிறாயா? பார், மற்ற எல்லோரும் கூறுகின்ற அதே காரியத்தை மாத்திரமே கூறு. இப்பொழுது உனக்கு கிடைத்திருக்கின்றது அருமை யான ஒரு தருணமாகும். நீ அங்குள்ள ஸ்தாபனத்தோடும், மற்ற எல்லாருடனும் ஒத்துப் போய்விடு. அவர்கள் உன்னை மறுபடியுமாக சேர்த்துக் கொள்வார்கள். பார்? ஆகவே நீ மறுபடியுமாக ஐக்கியத்திற்குள் வந்து விடுவாய். பிறகு தேசம் முழுவதிலும் உன்னுடைய கூட்டங்களை நடத்த லாம்'' என்றான். அதற்கு மிகாயா, 'கர்த்தர் என் வாயில் எதை அருளுகின்றாரோ அதைத்தான் நான் கூறுவேன் என்று தேவனாகிய கத்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்'' என்றான். நமக்கு சில மிகாயாக்கள் தேவை யாயிருக்கின்றது. அவன், ''முதலில் அதைக் குறித்து தேவன் என்ன கூறுகின்றார் என்பதை நான் பார்ப்பேன், நான் மறுபடியுமாக திரும்பிச் செல்லவேண்டும் என்று அவர் விரும்புவாரானால்'' என்றான். ஆகவே அவன் “இந்த இரவு எனக்கு அவகாசம் தாருங்கள். அப்பொழுது கர்த்தர் என்ன கூறுகின்றார் என்பதை நான் பார்க்கட்டும்” என்றான். ஆகவே கர்த்தர் அந்த இரவில் அவனுக்கு ஒரு தரிசனத்தைக் காண்பித்தார். அவன் அந்த தரிசனத்தை வார்த்தையுடன் ஒப்பிட்டுப் பார்த்தான். அதுதான் சரியான காரியம். 66அவன் ஆகாபிடம், 'போம் உமக்கு வாய்க்கும்; ஆனால் இஸ்ர வேலரெல்லாம் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல் சிதறப்பட்டதைக் கண்டேன்'' என்றான் (1 இரா:22:17). அப்பொழுது ஒரு பிரதான ஆசாரியன், அல்லது ஒரு.. அல்லது ஒரு சபை சங்கங்களின் தலைவன் ஒருவன் அங்கு வந்து அவனை (மிகாயாவின் தமிழாக்கியோன்) கன்னத்தில் அடித்து “தேவனுடைய ஆவி எந்த வழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது'' என்றான். அப்பொழுது மிகாயா, ''நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய்'' என்றான். (1இரா. 22:22-25). அவன்,“ அது எங்கே போயிற்று'' என்றான். அதற்கு மிகாயா கூறுகிறான் “கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதையும், பரம சேனையெல்லாம் அவரிடம் கூட்டம் கூடியிருந்ததைக் கண்டேன் அங்கே...'' தேவனுடைய தீர்க்கதரிசி, வார்த்தையானது எப்பொழுமே தீர்க்க தரிசியினிடத்தில்தான் வரும். அது எவ்வளவு புகழற்றதாக காணப்பட் டாலும் பரவாயில்லை. அது எப்பொழுதும் அங்கிருக்கின்றது. அந்த மனிதன் பேசினது நிறைவேறும்போது ஜனங்கள் அதை தேவன் கூறி னது என்று புரிந்து கொள்கின்றனர். ஏனெனில் அது நிரூபிக்கின்றதா யிருக்கின்றது. ஆகவே, ஒரு தீர்க்கதரிசி என்பவன் வார்த்தையை மாத் திரமே பேசுபவன் என்பதல்ல. அவன் வரப்போகும் காரியங்களை முன்னறிவித்தல் செய்பவனும் ஆவான். அவன் எழுதப்பட்ட தெய்வீக வார்த்தையின் தெய்வீக வியாக்கியானியும் ஆவான். “அந்த வார்த்தை தீர்க்கதரிசியிடம் வந்தது. ஆகவே இது இயேசு கிறிஸ்துவைக் குறித்த முழுமையான வெளிப்பாடு ஆகும். இது தான் வெளிப்பாடு, வேதாகமம். அது இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகின்றது. பாருங்கள்? 67ஆகவே இப்பொழுது, தீர்க்கதரிசியானவன் காட்சியில் வந்து காரியங்களை முன்னுரைக்கையில், அது அதேவிதமாக நடந்தது. ''நினைவில் கொள்ளுங்கள், நான் அவனோடு இருக்கின்றேன்“ என்று தேவன் கூறினார். தனக்கு முன்பு இருந்த தீர்க்கதரிசி கூறியுள்ள வார்த்தையை இவன் வெளிப்படுத்துகையில், அது நடந்தேறும்போது, அப்பொழுது அது உண்மை என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். அது தேவன் கைக்கொள்ளும் வழியாக இன்னுமாய் நிலைத்திருக்கின் றது. அவர் தம்முடைய வழியை ஒருபோதும் மாற்றுவது கிடையாது. பாருங்கள்? நினைவில் கொள்ளுங்கள். மிகவும் மகத்தான, மகத்தான குழுக்கள் அதை (தேவனுடைய வழியை-தமிழாக்கியோன்) மாற்ற முயன்றன. ஆனால் அவைகளால் கூடாமற்போயிற்று. இங்கு ஒரு காரியத்தைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு உரிமையிருந்தது. ஆனால் எலியா ஆகாபிடம் வார்த்தை யைக் கூறியிருந்தான். பாருங்கள். உண்மையான வார்த்தையை நிராகரித்து, ஸ்தாபனங்களை உண்டு பண்ணின ஒரு தவறான மனிதனை இஸ்ரவேலர் ஏற்றுக் கொண்டனர். பாருங்கள்? அதற்கு அவன் கூறினான். 'நான் தேவனையும், அங்கு நடை பெற்ற ஒரு கூட்டத்தையும் நான் கண்டேன். அப்பொழுது அவர், 'கீழே சென்று ஆகாபை வஞ்சிக்கத்தக்கதாக யாரை நான் அனுப்பலாம்?' என்றார். அப்பொழுது ஒரு பொய்யின் ஆவி அங்கு வந்தது. ஒரு வேளை அது நரகத்திலிருந்து வந்திருக்கக்கூடும். ஆகவே அது, 'நான் கீழே சென்று அந்த தீர்க்கதரிசிகளுக்குள் சென்று, ஒரு பொய் தீர்க்க தரிசனத்தை உரைக்கச் செய்வேன்' என்றது. வார்த்தையை சரியாக உற்று நோக்கிக் கொண்டிருந்த எபிரெய தீர்க்கதரிசிகள். பாருங்கள்? ஆனால் எலிசா கூறியிருந்த காரியம் அவர் களுக்கு மறைக்கப்பட்டிருந்தது. அவனும் ஒரு பையித்தியக்காரன் என்று எண்ணியிருந்தனர். பாருங்கள்? ஆனால் மிகாயா ஆவியின் கீழ் சென்றபோது அந்த உண்மையான தீர்க்கதரிசி என்ன கூறியிருந்தான் என்பதை துல்லியமாகக் கண்டான். அதைச் செய்வதற்கான சரியான தருணமாக அது இருந்தது. ஆகவே அந்த எபிரெயர்கள் அங்கே சரியாக இருந்தனர். அதேப் போன்றும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துக் கூறிக் கொண்டிருந்த அந்த எபிரெயர்கள் சரியாகத்தான் இருந்தனர் (பாருங்கள்?). ஆனால் அவர்கள் நடந்துக் கொண்டிருந்த அவர்களுடைய உருவ நிழலின் படியாகத்தான் அது இருந்தது. அது வேறொரு நாளின் பளபளப்பு ஒளியாக இருந்தது. அந்த நாளிற்குரிய ஒளி அல்ல. சரித்திரமானது மறுபடியுமாக நிகழுமா? அப்படிச் செய்யும் என்று வேதம் கூறு கின்றது. பாருங்கள்? இப்பொழுது அங்கே நடந்தது என்னவென்றால்... 68படித்த, மகத்தான, புத்திக்கூர்மையுள்ள, நாகரீகம் பொருந்திய அந்த மனிதர்களுக்கு பதிலாக ஒரு சிறிய, கல்வியறிவு பெற்றிராத, அவர்களோடு இணங்காத ஒருவனை எடுத்து அந்த மக்களுக்கு வார்த் தையைக் கொண்டுவந்து காண்பிக்கத்தக்கதாக அவனை தேவன் தெரிந்தெடுத்தது ஒரு விநோதமான காரியமாகும். அவர் மிகாயாவை தெரிந்தெடுத்தார். அது நம்பமுடியாதது. ஆனாலும் உண்மையாகும். நிச்சயமாக. அது எந்தவிதமாக சம்பவிக்கும் என்று மிகாயா கூறியிருந் தானோ, அவ்விதமாகவே அது சம்பவித்தது. ஏனெனில் அவன் கர்த் தருடைய வார்த்தையைக் கொண்டிருந்தான். அது எப்பொழுதும் அவ்விதமாகத்தான் இருக்கின்றது. ஆம், ஐயா. அவ்விதமாக இருந்தவர்களில் யோவான் ஸ்நானகனும் ஒருவன். ஆவிக்குரிய மனிதர்களாகிய தீர்க்கதரிசிகள் எங்கிருந்து வருகின்றனர் என்பதைக் குறித்து நம்மிடம் போதுமான குறிப்புகள் இல்லை. பாருங் கள்? 69யூதாஸின் இடத்திற்கு வேறொரு ஆளை நியமிக்க மத்தியா என்பவனை அவர்கள் நியமித்தது போல், மனிதன் மனிதனை தெரிந்து கொள்கிறான். இந்த மத்தியாவைக் குறித்து நாம் அதன் பின்பு அதிகம் தெரிந்து கொள்ளவில்லை. தேவன் பவுலைத் தெரிந்துகொண்டார். பாருங்கள்? அது தேவனுடைய தெரிந்து கொள்ளுதலாயிருந்தது, சபையின் தெரிந்து கொள்ளுதலும்கூட. பாருங்கள்? ஆகவே அதே காரியம்தான், ஆவியினால் நிரப்பப்பட்ட மனிதர் எப்பொழுதும், அந்த காரியத்தினின்று விலகியோட முயற்சிக்கும் மனிதராய் இருக்கின்றனர். அதைச் செய்ய அவர்களுக்கு விருப்பமிராது. ஆனால் தேவன் அதை எடுத்து, ''நான் உனக்கு காண்பிப்பேன், நான் உன்னை, அதைச் செய்ய வைப்பேன்'' என்கின்றார். 70பவுல் விலகி ஓட முயற்சித்தான். மற்றவர்கள் அதிலிருந்து விலகியோட முயற்சித்தனர். அநேகர் அதைச் செய்ய முயன்றனர். மோசே அதைவிட்டு விலகியோட முயற்சித்தான். இந்த யோவான் ஸ்நானகனைக் குறித்து அதிகமான குறிப்புகள் நம்மிடையேயில்லை. அவனுடைய தகப்பன் ஓர் ஆசாரியனாக இருந்தான். அக்காலத்தில் தகப்பனுடைய தொழிலை மகன் செய்யவேண்டுமென்ற பாரம்பரியம் இருந்தது. இந்த யோவான் அவனுடைய தாயின் கர்ப்பத் தில் வினோதமான முறையில் கருத்தரிக்கப்பட்டு பிறந்தபோது, ஓர் கேலிக்குரிய வினோதமான பிள்ளையாக இருந்தான். சகரியாவின் கதையைக் குறித்து நமக்குத் தெரியும். அந்த தேவ தூதன் அவனிடம் வந்து, அவன் மனைவி கர்ப்பம் தரிப்பாள் என்று கூறினான். அவளுடைய வயிற்றில் இருந்த பிள்ளை 6 மாதங்கள் ஓர் அசைவும் இன்றி இருந்தது என்று பார்க்கிறோம். ஆகவே காபிரியேல் மரியாளை சந்தித்தான். பிறகு அவள் அவளை (எலிசபெத்-தமிழாக்கியோன்) வாழ்த்தத்தக்கதாக யூதேயாவிற்கு சென்றாள். ஏனெனில் அவள் கர்ப்பந்தரித்திருக்கிறாள் என்று காபிரியேல் இவளுக்கு (மரியாளிற்கு - தமிழாக்கியோன்) அறிவித்திருந்தான். ஆகவே அவள் அங்கே சென்று அவளிடம்... அல்லது, அவள் தன்னை மறைத்துக் கொண்டிருந்தாள். ஆகவே அவள் மரியாளை சந்தித்தபோது, அவள் மரியாளை தன் கைகளால் அணைத்துக் கொண்டாள். ஸ்திரீகள் செய்கின்ற விதமாக (உண்மையான கிறிஸ்தவ ஸ்திரீகள், விசுவாசிகள்) அவளை அணைத்துக் கொள்ளத் துவங்கினாள். ஆகவே... அவள் கூறி னாள். “நான் ஒரு தாயாவதற்கு மிகவும் வயது சென்றவளாயிருக் கிறேன் என்றாள். அப்பொழுது மரியாள், ”நானும்கூட ஒரு தாயாகப் போகிறேன் என்று கர்த்தருடைய தூதன் என்னிடம் கூறினார்'' என்றாள். ஆகவே மரியாள், மார்த்தாள். என்னை மன்னிக்கவும். 71அப்பொழுது எலிசபெத், ''நான் மிகவும் கவலைக்குள்ளானேன். ஏனெனில் 6 மாத காலமாகியும் என் கர்ப்பத்திலுள்ள பிள்ளையி னிடத்தில் ஒரு அசைவையும் காணோம்'' என்றாள். அது ஒரு ஒழுங்கற்ற காரியம். பாருங்கள்? அசையாத குழந்தையைக் குறித்து நாம் “கர்ப்பத் திலே மரித்தக் குழந்தை'' என்று அழைப்போம். (பாருங்கள்?) தாயின் வயிற்றிலே மரித்த நிலையில் உள்ள ஒரு குழந்தை. ஆறு மாதங்கள், இக்காரியம். அவளை கவலை கொள்ளும்படிக்குச் செய்தது. யோவான் இயேசுவைவிட 6 மாதம் பெரியவனாயிருந்தான். இயேசு அவனுக்கு பெற்றோர் வழி இரண்டாம் சகோதரனாயிருந்தார். மரியாளும் எலிசபெத்தும் பெற்றோர் வழி முதல் சகோதரிகளாயிருந்தனர். ஆகவே நாம் பார்க்கின்றோம் எலிசா... மரியாள் அவளுடைய இளமையான முகத்தைப் பார்த்து, ''நான் - நானும் கூட ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளப் போகிறேன்'' என்றாள். “ஆக உனக்கும் யோசேப்பிற்கும் விவாகமாகிவிட்டதா?'' ”இல்லை, நாங்கள் இன்னும் விவாகம் செய்து கொள்ளவில்லை'' “அப்படியானால் நீ குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறாயா?'' “ஆம், பரிசுத்த ஆவி என்னை நிழலிடும்''. நம்ப முடியாதது, ஆனாலும் உண்மை . பாருங்கள்? ''பரிசுத்த ஆவி என்னை நிழலிடும், ஆகவே அந்த பரிசுத்தமுள்ள காரியமானது தேவனுடைய குமாரன் என்னப்படும்” மேலும் அவள், ''காபிரியேல் என்னை சந்தித்தான். அப் பொழுது நான் குமாரனைக் கொண்டிருப்பேன் என்றும் அவரை இயேசு என்னும் நாமத்தில் அழைப்பேன் என்றும் கூறினான்'' ஆகவே அவள் 'இயேசு'' என்று கூறின மாத்திரத்தில், இந்த சிறிய யோவான் தன் தாயின் வயிற்றில் துள்ளி குதிக்க ஆரம்பித்தான். அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டான். “யோவான் தன் தாயின் கர்ப்பத்தினின்று வெளிவரும்போதே பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டிருந்தான்'' என்று வேதம் கூறுகின்றது. ஒரு மனித உதட் டின் மூலமாக அந்த நாமமானது முதன் முதலாக உச்சரிக்கப்பட்டபோது, தாயின் வயிற்றில் மரித்துக் கிடந்த ஒரு குழந்தை உயிரடைந்தது. அப்படியானால் மறுபடியும் பிறந்த சபைக்கு என்ன காரியத்தை அது செய்யும்? அந்த நாமம், இயேசு... ''என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்து? நீ வாழ்த்தின சத்தம் என் காதிலே விழுந்தவுடனே,'' (அவள் அவருடைய நாமத்தைக் கேட்டாள்). வயிற்றில் உள்ள என் குழந்தை களிப்பால் துள்ளிற்று“ என்றாள். தனிச்சிறப்பிற்குரிய ஒன்று. நம்ப முடியாதது, ஆனாலும் உண்மை. 72இயேசு கிறிஸ்துவின் நாமம் முதன் முதலாக ஒரு மனித உட்டின் மூலமாக உச்சரிக்கப்பட்டபோது அதன் மூலமாக, தன் தாயின் வயிற்றில் ஆறு மாதங்களாக மரித்துகிடந்த யோவான் உயிரடைந்தான். மரித்த மனிதர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக உயிரடைவர் என்பதை இது காண்பிக்கின்றதாயிருக்கின்றது. இன்னுமாக அது நம்பமுடியாதது, ஆனாலும் உண்மை . ''நாம் இரட்சிக்கப்படுவதற்கு வானத்தின் கீழே மனிதர்களுக்குள்ளே வேறொரு நாமம் கொடுக்கப்படவில்லை'' நம்ப முடியாதது, ஆனாலும் உண்மையாகும். ஆம். யோவான் ஒரு அதிசய பிறவியாயிருந்தான். அவன் லேவியனா யிருந்தபடியால் அவன், தன்னுடைய தகப்பன் எந்த பள்ளியில் பயிற்று விக்கப்பட்டானோ அவன் அங்கே செல்வானென்றும், தன்னுடைய தகப்பனுடைய காரியங்களை தொடர்ந்து செய்வான் என்றும் நம்பப் பட்டது. கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே ஆசாரியத்துவத்தில் இருக்க முடியும். ஆகவே லேவியனாக இருந்த யோவான், தன் தகப்ப னுடைய பள்ளிக்கு செல்லவேண்டும் என்பது பாரம்பரியமான காரிய மாக இருந்தது. ஆனால் தேவன் அவனுக்கு ஒரு- ஒரு பணியை வைத் திருந்தார். அதாவது அவன் மேசியாவை அறிமுகப்படுத்த வேண்டிய வனாக இருந்தான். அவனுடைய பணியானது பாரம்பரியங்களை பின்பற்றுவதற்கு அப்பாற்பட்ட ஒன்றாய் மிகவும் வினோதமானதாக இருந்தது. நீங்கள் இதை சரியாக புரிந்து கொள்கின்றீர்கள் என்று நான் நம்புகிறேன். அவனுடைய பணியானது மிகவும் வினோதமான, அதிசயமான ஒன்றா யிருந்தது. அவன் அவர்களுடைய பாரம்பரியங்களுக்குள் சென்று கிரியைச் செய்ய முடியாதவனாக இருந்தான். 73எல்லோரும், “இப்பொழுது, மேசியாவாக இருக்க வாய்ப்புள்ள ஒரே நபர் இங்கிருக்கின்ற அந்த சகோதரன், ஜோன்ஸ் அவர்கள் தான் என்பதை உன்னால் சிந்தித்தறிய முடியவில்லையா? அவரை நீ தான் அறிமுகப்படுத்தப் போகிறாய் என்பதை நாங்கள் அறிவோம். இவர்தான் அந்த சரியான மனிதன் என்பதை உன்னால் சிந்திக்க இயலவில்லையா?'' என்று கூறிக் கொண்டிருந்தனர். அது மற்றுமொரு மத்தியாவாக இருந்திருக்கும். ஆனால் அவன் என்ன செய்தான்? அவன் வனாந்திரவாசியாயி ருந்தான். அவனுக்கு கல்வியறிவு இல்லை. யோவான் இன்று நம்மிலுள்ள அநேகரைப் போன்று உள்ளத்தில் எழுச்சியை வெளிக்கூறுவதற்கு இலக்கண ரீதியான வார்த்தைகளை அவன் பேச, உபயோகப்படுத்த முடியாதவனாக இருந்தான். அநேகமாக நம்மிடையே இங்கிருக்கும் பெரும்பாலோர் அவ்விதம் செய்ய இயலாது. அவன் என்ன செய்தான்? தன்னுடைய செய்தியின் பொருளை வெளிக்கொணர்வதற்காக, அதற் கான ஒப்புமையை எடுக்க அவன் இயற்கைக்கு செல்லவேண்டியதா யிருந்தது. கவனியுங்கள், அவன் “ஓ விரியன் பாம்புக் குட்டிகளே'' என்று கூறினான். அவன் கண்டவையெல்லாம் வனாந்திரத்திலுள்ள பாம்புகள்தான். அவன் ''விரியன் பாம்புக் குட்டிகளாக” அவர்களைக் கண்டான். இப்பொழுது, ஒரு கல்வியறிவு பெற்ற ஒரு மனிதன் வேறு ஒரு வார்த்தையை கொண்டவனாயிருப்பான் (பாருங்கள்?). வேறோன்றை உபயோகித்திருப்பான். ஆனால் இவனோ ஒரு பாம்பை உதாரணப்படுத்திக் காண்பித்தான். 74''நாங்கள் இதைச் சேர்ந்தவர்கள் என்று உங்களுக்குள் சொல்லி, அது தேவனுக்கு பிரீதியாயிருக்கும் என நினையாதிருங்கள். ஏனெனில் தேவன் இந்தக் கல்லுகளினால் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டாக்க வல்லவராயிருக்கிறார்...'' என்று கூறினான். பாருங்கள், ஏதோ ஒரு வேத சாஸ்திர வார்த்தையை அவன் எடுக்கவில்லை. வேத கலாசாலைப் பள்ளியைக் குறித்து அவனுக்கு ஒன்றுமே தெரிந்திருக்கவில்லை. வனாந் திரத்தில் தேவனுக்கு முன்பாக (பாருங்கள்?) நின்றதே அவனுடைய வேதாகமக் கல்லூரியாக இருந்தது. அன்று இருந்த வேத சாஸ்திரப் பள்ளிக் கூடாரங்களிலிருந்த அருமையான கல்வியறிவு பெற்ற ஆசாரியர்களை தேவன் தெரிந்துக்கொள்ளாமல், யோவானைப் போன்ற மனிதனை தெரிந்துக் கொண்டது நம்பமுடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் உண்மையே. அது நிச்சயமாக நம்பமுடியாதது. ஆனாலும் உண்மை . என்னுடைய கருத்து என்னவென்றால் தேவன் எப்பொழுதுமே நம்ப முடியாத, ஆனாலும் உண்மையாயிருக்கின்ற காரியங்களில் கிரியை செய்கின்றார் என்பதே. அந்த கன்னிப் பிறப்பு, நம்பமுடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் உண்மையான ஒன்றாயிருந்தது. ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு பிள்ளையைப் பெறுவாள், மாம்சமான தேவன். தேவன் ஆவியாயிருந்த தம்முடைய கூட்டினின்று ஒரு மனிதனாயிருக்க மாறினார். மனிதன்... அவர் தம்முடைய கூடாரத்தை, தாம் வாசம் செய்யும் இடத்தை தம் முடைய ஆலயத்தை மாற்றிக்கொண்டார். இயேசு கலிலேயா கடலின் கரையில் நின்றுக் கொண்டிருந்த போது யோவான் அண்ணாந்து பார்த்து தேவ ஆவியானவர் புறாவைப் போன்று கீழிறங்கி வருவதைக் கண்டான். அன்றியும் ஒரு சத்தம், “இவர் என்னுடைய நேசக்குமாரன். இவருக்குள் வாசமாயிருக்க பிரியமா யிருக்கிறேன்.'' ''இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்'' என்றது. வினை புரிச்சொல்லுக்கு முன்பு வினைச்சொல் இருப்பதை பாருங்கள். எல்லாம் ஒரு கருத்தையே தெரிவிக்கின்றது. ''இவருக்குள் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன்'' அதே காரியம் தான் பாருங்கள், பாருங்கள்? ”இவர் என்னுடைய நேசக் குமாரன். இவருக்குள் வாசம் பண்ண பிரியமாயிருக்கிறேன்'' என்றது. தேவனும் மனிதனும் ஒன்றா கின்றனர், மீட்பிற்கென்று இணைகின்றனர். எல்லாக் காலங்களையும் நேரங்களையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கின்ற தேவனானவர் எவ்வாறு கீழே இறங்கி வந்து தம்மைத் தாமே ஒரு குப்பியில் (பாட்டில், Bottle) அடைத்துக் கொள்வது போன்று ஒரு மனிதனிற்குள் வந்துவிடுகிறா ரென்றால் எப்படி, ஆகவே எல்லா மனித குலத்திற்காக அவர் மரணத்தை ருசி பார்த்தார். அந்த சிருஷ்டிகர், தம்முடைய சிருஷ்டியை காப்பாற்ற மரிக்கின்றார். 75பரலோகமும் பூமியும் ஒன்றையொன்று முத்தமிட்டன. மனி தனும் தேவனும் ஒன்றுபட்டனர் (எப்படி ஒரு மனிதன்...) அங்கே, அவர் மனிதனுக்குள் வாசம் செய்து ஐக்கியம் கொள்வதற்காகவே. அது ஒன்று மில்லை, ஆனால் தம்முடைய மனிதனுக்குள் வர முயற்சித்தல், தேவன் எளிமை தோன்ற இறங்கி வந்து இரக்கம் காண்பித்தலே (condescending). ஆதியிலே அவர் பிதாவாயிருந்தார். அவர் எல்லாவற்றிற்கும் மேலாக இருந்தார். அவர் தனிமையாக இருந்தார். அவர் தனிமையாக வாசம் பண்ணினார், ஏலோஹிம். அவர் மலையின் மேல் இறங்கி வந்த போது, ஒரு மிருகம்கூட அந்த மலையைத் தொட்டால், அவை மரித்தாக வேண்டும். ஆனால் அதன் பிறகு அவர் மாம்சமானார். ஆகவே அவரை நாம் தொட்டோம், பிடித்துக் கொண்டிருந்தோம். அவர் தமது இரத்தத்தை, சுத்த இரத்தத்தை சிந்துவதற்காகவே அதைச் செய்தார். ஏனென் றால் நாம் பாலுணர்வின் மூலமாக பிறந்தவர்கள். ஆனால் அவரோ கன்னிகைப் பிறப்பாயிருந்தார். ஒரு யூத இரத்தமாகவோ, அல்லது புறஜாதியானின் இரத்தமாகவோ அவர் இல்லை. ஆனால் அவர் தேவன், புதிது ஆக்கும் ஆற்றலுடைய இரத்தம், சிருஷ்டிக்கப்பட்ட இரத்தம். பாருங்கள்? யூதனின் இரத்தம் நம்மை இரட்சிக்காது. புறஜாதியின் இரத்தம் நம்மை இரட்சிக்காது. “தேவனுடைய இரத்தம்'', வேதம் கூறு கிறது, ''நம்மை இரட்சிக்கின்றது'' அவர் தேவனுடைய இரத்தமாயிருந்தார். 76மரியாள் கர்ப்பந்தரித்தாள், அந்த... அந்த முட்டை மரியாளுடை யது. இரத்த அணுவானது ஒரு ஆணிடமிருந்து வந்தது. அது தேவன் தாமே என்று சிலர் கூறுகின்றனர். அது தவறானதே. இங்கே கவனி யுங்கள். அவ்விதம் ஒரு முட்டையைக் கொண்டு வரவேண்டுமானால் அங்கு ஒருவித உணர்வின் மூலம் கொண்டு வரப்படவேண்டும். அப்படி யென்றால் தேவன் அங்கு மரியாளுக்கு என்ன செய்தார் என்று எண்ணு கிறீர்கள்? அங்கு அவர் முட்டையையும், இரத்தத்தையும் சிருஷ்டித்தார். அவர் தேவனாக இருந்தார். மரியாள் வெறும் கருவை சுமக்கும் கருவியா யிருந்தாள். அவள் கடனுக்காக பெறப்பட்ட ஒரு கர்ப்பப்பையே. புதைப்பதற்காக கடன் வாங்கப்பட்ட ஒரு கல்லறையைப் போன்று. எல்லாவற்றையும் அவரே செய்தார். பாருங்கள். ஆனால் தம்முடைய தலையைச் சாய்க்கக்கூட அவருக்கு இடம் இல்லாதிருந்தது. நாம் எவ் வாறு இருக்கவேண்டும் என்பதற்காக அவர் நமக்கு ஓர் உதாரணமானார். அவர் யார் பக்கமும் சாயவில்லை, ஆனால் அவர் பிதாவிற்கு பிரிய மானதையே எப்பொழுதும் செய்தார். 77அவரின் மரணத்தின் மூலம் இப்பொழுது பிதாவானவர் நமக்குள் வாசமாயிருக்கின்றார். அசுத்தமாயிருந்த சபையை முற்றிலுமாக பரிசுத் தப்படுத்தினார். கீழோரிடத்தில் கருணை காட்டத்தக்கதாக, தேவன் அக்கினி ஸ்தம்பத்திலிருந்து ஒரு மனிதனானார். அதன் பிறகு பரிசுத்த ஆவியாக நமக்குள் வந்தார். அது என்னவென்பதை நீங்கள் பார்க்கின்றீர் களா? அதே தேவன் தான் எல்லாக் காலங்களிலும் இறங்கி வருகிறார். இப்பொழுது, நமக்கு மேலிருக்கின்ற தேவன், நம்மோடு இருக்கின்ற தேவன், நமக்குள் இருக்கிற தேவன். பாருங்கள்? தேவனுடைய சிந்தைகள், தேவனுடைய வார்த்தை, வார்த்தை உறுதிப்படுத்தப்படுதல் என்பது போன்றவையாகும். அதேபோன்று தான், ஆதியிலிருந்து, தேவன் சிந்தித்தல், அவர், ஒரு பிதாவாயிருந்தார் (A Father), அவர், ஒரு குமாரனாயிருந்தார் (A son), அவர், ஒரு இரட்சகராயிருந்தார் (A Saviour), அவர் அந்த சுகமாக்குபவர் (The Healer). அந்த வார்த்தைகள் பேசப்பட்டன. ஆகவே அது உறுதிப்படுத்தப் பட்டு வெளிப்படையானது. ''ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமா ரனைப் பெறுவாள்; அவர் நாமம் இம்மானுவேல், ஆலோசனைக் கர்த்தா; சமாதானப்பிரபு, சர்வ வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா“ அது அவ்விதமேயிருந்தது! ஆகவே அதனின்று, அவர் தேவனிடத்தில் அநேக குமாரர்களை கொண்டு வருவார் என்றவிதமாக வருகின்றது. அந்த முழு காரியமும் தேவன் வெளிப்படுதலேயாகும். நமக்கு மேலிருக்கின்ற தேவன், நம் மோடு இருக்கின்ற தேவன், நமக்குள் இருக்கின்ற தேவன், நம்ப முடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் உண்மை . நிச்சயமாக, அதாவது தேவன் தாமே மனிதனில் வாசம் செய்வார். நிச்சயமாக. 78தம்முடைய சொந்த, நேர்மையான சட்டங்களை திருப்தி செய்யத் தக்கதாக அவர் அதைப்போன்று ஆகி (மனிதனாகி-தமிழாக்கியோன்) மரிக்க வேண்டியதாயிற்று. அவர் ''நீ அதை புசிக்கும் நாளில் சாகவே சாவாய்'' என்று அவர் முன்னறிவித்தார். ஆகவே அவர் அதை நிறை வேற்ற வேண்டியதாய் இருந்தது; அவரைத் தவிர வேறே யாராலும் அதைச் செய்யக்கூடாமற் போயிற்று. அப்படியானால்... அவர்கள்... இன்று ... இன்று இந்த நாளில், இயேசுகிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை, தெய்வீக நிலையை நான் கொண்டுவர விரும்புகிறேன். ஏனெனில் அந்த மனிதர்கள் அவரை ஒரு தீர்க்கதரிசியாக உருவகப்படுத்த முயல்கின் றனர். இங்கு கிறிஸ்தவ விஞ்ஞானத்தைச் சேர்ந்தவர்கள் அமர்ந்திருப்பீர்க ளானால், உங்கள் உணர்வுகளை புண்படுத்த நான் இங்கில்லை. நான் அவ்விதம் இல்லையென்று நம்புகிறேன். ஆனால், நாம் அடையாளங்கள், அத்தாட்சிகளின் பேரிலேயே நம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றோம். பெந்தெகொஸ்தேயினரான நாம் நம்முடைய அடையாளங்களை அந்நிய பாஷைகளின் மேலேயே வைக்கின்றோம். ஆகையால் அதின் பேரிலே நாம் எவ்வளவாக முட்டாள் களாக ஆக்கப்பட்டிருக்கின்றோம். ஆகையால் ஆவியின் கனிகள்தான் அந்த அடையாளம் என்று அவர்களில் எத்தனைப் பேர் கூறுகின்றனர். அதினால் நீங்கள் எப்பேற்பட்ட முட்டாள்களாக ஆக்கப்பட்டுள்ளீர்கள். இல்லை, ஐயா அந்நிய பாஷைகளில் பேசுவதுதான் பரிசுத்த ஆவியை பெற்றதற்கு அடையாளம் என்று நீங்கள் கூறுவீர்களானால்... பரிசுத்த ஆவியானவர் அந்நிய பாஷைகளில் பேசுகின்றார் என்பதை நானும்கூட விசுவாசிக்கின்றேன். என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளவேண்டாம். ஆம், ஆனால் நீங்களோ ஒரு மனிதன் அந்நிய பாஷைகளில் பேசினால் அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளான் என்று கூறுறீர்கள். சிறிது காலமாக அதை நாங்கள் நம்பினோம். ஆனால் அது தவறான ஒன்று என்று நாங்கள் கண்டுக் கொண்டோம். ''தாங்கள் விசுவாசிக்கின்றார்கள் என்று எவர்கள் கூறுகின்ற னரோ...'' என்று லூத்தர் கூறினார். அது தவறு என்று நாங்கள் கண்டு கொண்டோம். ''பரிசுத்தமாக்கப்பட்டு சத்தமிட்டவர்கள் எவர்களோ...'' என்று வெஸ்லி கூறினார். அது தவறு என்று நாங்கள் கண்டு கொண் டோம். ''அந்நிய பாஷைகளில் பேசுகிறவர்கள் எவர்களோ...'' என்று பெந்தெகொஸ்தேயினர் கூறினர். அது தவறு என்று நாங்கள் அறிந்து கொண்டுவிட்டோம். கிறிஸ்தவ விஞ்ஞானம் “ஆவியின் கனிகள் தான் அத்தாட்சி...'' என்று கூறினது. அது தவறானது என்று நாங்கள் கண்டு கொண்டிருக்கின்றோம். பாருங்கள்? 79மந்திரவாதிகளும், சூனியக்காரரும் மனித மண்டையோட்டி னின்று இரத்தத்தைக் குடித்து அந்நியபாஷை பேசி, ஒரு காகித எழுது கோலை (பென்ஸில், Pencil) மேஜை மீது வைத்து அறியாத பாஷையில் அது தானாக எழுதி அதை வியாக்கியானம் செய்வதை நான் கண்டிருக் கிறேன். பாருங்கள்? அதைக் குறித்து என்னிடம் கூறாதீர்கள்; என்னுடைய தாயார் ஒரு பாதி இந்திய மரபுடையவள் (பாருங்கள்?) ஆதலால் நான்-நான் அதை அறிவேன். நான் அதை கண்டிருக்கின்றேன், மேற் கொண்டிருக்கின்றேன். இருந்தாலும், தேவன் அந்நியபாஷைகளில் பேசுகிறார். ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளீர்கள் என்பதற்கான நிச்சயமான, தவறல்லாத அடையாளம் அது அல்ல. நிச்சயமாக இல்லை. இல்லை, கிறிஸ்தவனுடைது அல்ல... நான்... 80இதை செய்யப் போவதற்காக தேவன் என்னை மன்னிப்பாராக. நீங்கள் மன்னிப்பீர்களானால், சில நிமிடங்கள் உங்களுக்காக இயேசுவை வழக்கு விசாரணைக் கென்று (trial) வைக்கப்போகிறேன். அதற்கு எனக்கு நேரம் இருக்கின்றதா? ஒரு சில நிமிடங்கள் அதைப் பார்ப்போம். சுமார்... ஆம், குறித்த நேரத்திற்கு அதிகமாக பத்து நிமிடங்களை நான் எடுத்துக் கொண்டு விட்டேன். ஆகையால் இவை களில் சிலவற்றைக் கடந்து சென்று துரித மாக முடித்துவிடுவேன். பாருங்கள்? ஆகவே சகோதரரே இதை நாம் ஒரு நிமிடத்திற்கு பார்ப்போம். இப்பொழுது, பரலோகப் பிதாவே, இதற்காக என்னை மன்னியும். நான் அதை பேசவிரும்பவில்லை. ஆனால் ஜனங்கள் தெரிந்துக்கொள் வதற்காக அவ்விதம் செய்கிறேன். நான் அதை. இக்காலை நான் இயேசுவிற்கு எதிராக இருக்கப் போகிறேன். உங்களை ஒரு கூட்ட யூத மக்களாக நான் அழைக்கப் போகிறேன். இங்கே பேக்கஸ்ஃபீல்டில் இயேசு வந்திருப்பதுபோல அமைக்கிறேன். “ஆகவே மனிதர்களாகிய உங்களை ஒன்றாகக் கூட்டி ஆவியின் கனிகளைக் குறித்து உங்களிடம் பேசப் போகிறேன்'' அவர்களும் அதை விசுவாசித்தனர். ஆவியின் கனிகள் யாவை? அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம்... அது சரியா? ஆவியின் கனிகள், அதிகமான ஜனங்கள் அதன் பேரில் சார்ந்திருக்கின்றனர். சில சமயங்களில் அது பிசாசாயிருக்கின்றது. அந்த எழுத்தைப் போலவே அவனால் போலியாக்கிக் காண்பிக்க முடியும். அவனால்... அந்த எழுத்தின் பிரகாரமாகவே அந்நிய பாஷைகளை அவனால் போலி யாக்க முடியும். அந்த எழுத்திற்கான வியாக்கியானத்தையும் அளிக்க முடியும். அந்த வரங்களில் எதை வேண்டுமானாலும் அவனால் போலி யாக்கிக் காட்ட முடியும். 81கவனியுங்கள், ''நான் துவங்குகிறேன்'', அந்த ஆசாரியன் அங்கே இருக்கிறான்; உங்கள் எல்லோருடனும் நான் பேசப் போகின்றேன்.'' நான் இப்பொழுது சில நிமிடங்கள் இயேசுவுக்கு எதிராக என் ஸ்தானத்தை எடுத்துக்கொள்ளப் போகிறேன். அவ்விதம் செய்வதற்காக தேவனிடத்தில் நான் மன்னிப்புக் கேட்டுவிட்டேன். ஆகையால் நான் என்ன கூறு விழைகிறேன் என்பதை என்னால் உங்களுக்கு காண்பிக்க இயலும். அதன் மூலமாக ஒரு கூற்றை, சாராம்சத்தை காண்பிப்பதற் காகத்தான். பாருங்கள்? இப்பொழுது நான் இவ்விதமாக... கூறுவேன். ''மதிப்பிற்குரிய வர்களே , உங்கள் சபையின் சார்பாக நான் இங்கே நிற்கிறேன். உங்கள் எல்லோரிடத்திலும் நான் பேசுகிறேன். இப்பொழுது, இந்த பட்டிணத் தில் நாசரேத்தைச் சேர்ந்த இயேசு என்னும் பெயரைக் கொண்ட ஒரு வாலிபன் இருக்கின்றான். அவன் ஒரு வினோதமான உபதேசத்தை யுடையவனாக இருக்கின்றான். நமது ஆசாரியர்களைப் பற்றி நாம் எல்லோரும் அறிவோம். இப்பொழுது நாம் இதை ஆவியின் கனிகளைக் கொண்டு நியாயந்தீர்க்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். இந்த, உங்களுடைய ஆசாரியன், அவருடைய பெரிய பெரிய பெரிய பெரிய -முப்பாட்டனாரும் ஒரு ஆசாரியன் ஆவார். நீங்கள் எல்லோரும் மகிழ்ந்து களிகூறிய, களிகூறின அந்த வாலிப பருவத்தை, ஜீவியத்தை அவர் (ஆசாரியன்- தமிழாக்கியோன்) தியாகம் செய்தார். தேவனுக்கென்று ஒரு ஆசாரியனாய் இருக்கத்தக்கதாக அவர் தன்னுடைய வாலிப ஜீவியத்தை தியாகம் செய்தார். இதனால் அவர் என்ன செய்தார்? அவர் ஆராய்ந்து படித்து; சரியான ஒரு மனிதனாய் இருக்கத்தக்கதாக எல்லாக் காரியங்களையும் கைக்கொண்டார்'' 82“உன் தகப்பனும் தாயும் பிரிந்து போகும் அளவிற்கு விவாதம் செய்து கொண்டிருந்தபோது உன் பக்கத்தில் நின்றவர் யார்? உன்னுடைய தகப்பன், தாய் அருகில் நின்று, இருவருடைய தோள்களின் மீதும் தன்னுடைய கரங்களை போட்டு மறுபடியுமாக அவர்களை ஒன்றாக கொண்டு வந்து இணைத்தவர் யார்? அதோ அங்கே நின்று கொண்டிருக்கும் உன்னுடைய உண்மையுள்ள வயதான ஆசாரியன் அல்லவா? உன்னுடைய அந்த வயது சென்ற ஆசாரியன் யெகோவா வின் பிரமாணங்களை உள்ளும் புறமுமாக, உள்ளும் புறமுமாக, உள்ளும் புறமுமாக அறிந்துகொள்ளும்வரை அதை ஆராய்ந்து படித்தார். ஒவ்வொரு வேதக் கல்லூரிக்கும் அவர் சென்றார். அவர் மேதகு என்ற பட்டம் பெற்றவராயிருக்கிறார். அவர் ஒரு டாக்டர் பட்டத்தை பெற்றிருக்கின்றார். ஒரு கலையியல் (B.A., பி.ஏ.,) பட்டத்தைப் பெற்றிருக் கின்றார். டி.டி., எல்.எல்., பி.ஹெச்.டி. (D.D., L.L., Ph.D.) பட்டங்களைப் பெற்றிருக்கிறார். தான் எதைக் குறித்துப் பேசுகிறோம் என்பதை அறிந்த வராய் இருக்கின்றார். அதற்கென்றே அவர் படித்தவராய் இருந்தார். ஆனால் மனிதர்களே நீங்கள் அவ்வேளையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தீர்கள். அவரோ படித்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அவர் உங்களை வழிநடத்திச் செல்பவராவார் சகோதரர்களே, நீங்கள் அதை மனோ சாஸ்திர வழிப்படி பேசுவீர்களானால் அது ஒரு விவேகமான காரியம். அது அர்த்தமுடையதாயிருக்கின்றது.'' சகோதரர்களே, இதை நீங்கள் உளவியல் பூர்வமாக பேசுவீர்க ளானால் இது ஒரு நல்ல, தெளிவான, நேர்மையான கருத்தாகும். ஒரு தெளிவுபூர்வமான பேச்சாகும். 83''நாசரேத்தூரானாகிய இந்த இயேசு எந்தப் பள்ளியிருந்து வந்தான்? நமக்கு தெரிந்தவரையில், அவன் பள்ளியில் ஒரு நாள் கூட இருந்ததில்லை. இவன் எங்கிருந்து வந்தவன்? யாருக்குமே தெரியாது; இதோ இங்கே வந்து கொண்டிருக்கின்றான். உன்னுடைய வயதான அன்பான ஆசாரியனைப் பார். உன்னுடைய தகப்பன் பணப் பற்றாக் குறையினால் அவதியுற்ற போது யாரிடத்தில் சென்றார்? ஆவியின் கனிகளை அந்த மனிதர் பெற்றிருந்தனர், பயிர் விளையும் வரை தசம பாகம் செலுத்தத்தக்கதாக உன்னுடைய அன்பான வயதான ஆசாரியன் கடனுதவி அளித்தார்.'' “உன் தாய் பிரசவ வேதனையாயிருந்தபோது, உன் பக்கத்தில் இருந்தது யார்?” என்னை மன்னியுங்கள் சகோதரிகளே “அவள் மரிக்கப்போகின்றாள் என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். நீ இந்த உலகத்தில் பிறந்து கொண்டிருந்தபோது அவளின் மீது கைகளை வைத்து ஜெபித்துக்கொண்டிருந்தது யார்? உன்னுடைய அன்பான வயதான ஆசாரியன். உன்னை யெகோவாவிற்கு நேராக உயர்த்தி, உன்னை விருத்த சேதனம் செய்து, உன்னை கரங்களில் ஏந்தி யேகோவாவிற்கென்று பிரதிஷ்டை செய்தது யார்? அந்த அன்பான வயதான ஆசாரியன்தான்'' “ஆகவே முந்தைய நாளிலே இந்த நசரேயனாகிய இயேசு என்ன செய்தான் என்பதை பாருங்கள். ஆவியின் கனிக்காக அவன் எதைச் செய்தவனாயிருக்கிறான்'' 84''இப்பொழுது, உங்களில் அநேகர் வியாபாரிகள் ஆவர், உங்களுக்கு இங்கே வணிகத் தொழில் இருக்கின்றது. நீங்கள் வணிகர் களாகவும் - இன்னும் மற்றவர்களாகவும் இருக்கின்றீர்கள். உங்கள் பாவங்களுக்காக யெகோவாவிற்கு ஒரு ஆட்டுக்குட்டி தேவையாயிருக் கின்றது. நீங்கள் ஆட்டுக்குட்டி வளர்ப்பதில்லை. ஆகவே இந்த அன்பான வயதான ஆசாரியர்கள் என்ன செய்தனர்? ஆகவே உங்களுடைய ஆத்துமா அழிந்து போகாதிருப்பதற்காக, அவர்கள் விற்பனை செய் பவர்கள் சிலரை ஆலயப்பிரகாரத்தில் வைத்து, ஆட்டுக்குட்டிகளை வைக்கத்தக்கதாக சிறு கூண்டுகள் செய் வித்தனர், ஆதலால் நீங்கள் பெற்ற வருமானத்தை வைத்து... இந்த ஆட்டுக்குட்டிகளை வைத்து நம்முடைய பொருளாதாரத்தை சீராக நிர்வகிக்க உங்களால் முடிந்த ஏதோ ஒன்ற செய்தீர்கள். ஆகவே அவை... நீங்கள் பாவ பாரமடைந்து, உங்கள் பாவங்களிலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள வேண்டி யிருக்கிறது, ஆகவே நீங்கள் சென்று ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கத் தக்கதாக இந்த இரக்கமுள்ள வயதான ஆசாரியன் உங்களுக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்தினார். தேவனுக்கு உங்களுடைய பணம் தேவையே இல்லை; ஒரு ஆட்டுக்குட்டி என்று கூறினார். ஆகவே நீங்கள் சென்று ஒரு ஆட்டுக் குட்டியை வாங்கினீர்கள்'' “இந்த நசரேயனாகிய இயேசு என்னச் செய்தான்? அங்கு வந்து பொருட்களையெல்லாம் உதைத்து தள்ளி, அவைகளை வெறுமையாக்கி, அவை கள்ளர்களின் குகை என்று கூறினான். ஆவி கனி என்பது அங்கு சிறிதளவாகிலும் இருக்கின்றதா? உங்கள் இரக்கமுள்ள வயதான ஆசாரியன் நற்குணத்திற்கு அப்பாற்ட்ட ஒன்றை செய்ய எப்பொழுதுமே முனைந்தது இல்லையே. ஆனால் இந்த மனிதனோ கயிறுகளைப் பின்னி, மேஜைகளை உதைத்துத் தள்ளி, அவர்களை வெளியே விரட்டினான், அவர்கள் மீது கோபத்தைக் காட்டினான். அது ஆவியின் கனி அல்ல. உன்னுடைய அன்பான வயதான ஆசாரியன்... உனக்காக கடைசி ஜெபத்தை, வார்த்தைகளை ஏறெடுக்கப் போவது யார்? உன்னுடைய அன்பான வயதான ஆசாரியன்தான். உன்னுடைய ஆத்துமாவை தேவனிடத்தில் சமர்ப்பிக்கவே போவது யார்? உன்னுடைய வயதான அன்பான ஆசாரியன். பாருங்கள்? ஆவியின் கனி அதைச் செய்தது. ஆனால் அந்த அவைகளில் ஒன்றுகூட அந்த ஆளினிடத்தில் இருக்க வில்லை . 85இப்பொழுது நீங்கள், ''சகோ. பிரான்ஹாம்...'' என்று கூறலாம். இதன் பேரில் நான் ஒரு பிரசங்கமே செய்யக்கூடும். ஆனால் நான் அவ் விதம் செய்யப்போவதில்லை. ஆவியின் கனி என்பது என்ன? வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தையானது வெளிப்படுதலேயாகும். அவர்கள் மட்டும் பார்க்க சற்று நின்றிருப்பார்களானால், அவர்கள் கொண்டிருந்த ஆவியின் கனிகள், அல்லது இவைகளைப் போன்ற ஏதோ ஒன்றை அவர் உடைய வராயிருக்கவில்லை. ஆனால் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வார்த்தை யானது தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொண்டிருந்தது, சரியாக அம்மணி நேரத்திற்குரிய வெளிச்சம் அதுவேயாகும். அதுவேதான். பாருங்கள். எவ்விதமான, எப்பேற்பட்ட ஒரு கல்வியாயிருந்தாலும், பரவா யில்லை, நீ எவ்வளவுதான் அந்நிய பாஷையில் பேசினாலும், எவ்வளவு அன்பாய், மிருதுவாய் அல்லது, எல்லாவற்றுமாய் நீ இருந்தாலும் ஒரு பொருட்டல்ல; உனக்கு முன்பாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்ற அம்மணி நேரத்திற்கான வார்த்தையை நீ ஏற்றுக்கொள்வில்லையெனில் நீ இன்னுமாக அதே போன்ற கஷ்ட நிலைமைக்குள்ளாகத்தான் இருக் கின்றாய். 86அவ்விதம் கூறுவது கடினமாக ஒலிக்கலாம். நான் அந்தவிதமாக இருக்கவேண்டும் என நோக்கம் கொள்ளவில்லை-ஆனால் அது சத்திய மாயிருக்கின்றது. அதை அப்படியே- அப்படியே விசுவாசியுங்கள். பாருங்கள்? அது சரி. இப்பொழுது, தேவன் என்னை மன்னிப்பாராக. நான் என்ன கூற விழைகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்கின் றீர்களா? ஆவியின் கனியை பெற்றிருந்தது யார்? இயேசு! அவர் கூறினார், “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் எண்ணுகிறீர்கள் அவைகளில்... அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே. அவைகள் என்னைக் குறித்து சாட்சி கொடுக்கின்றன. நான் யாரென்பதை அவைகள் உங்களுக்குக் கூறும்'' தாம் யார் என் பதை அவர்களுக்கு அவர் வெளிப்படையாக சொல்லவில்லை. அவர்க ளிடம் அவர் கூறவில்லை. அப்படியானால் என் தம்முடைய கூட்டத் திற்கு அவர் அந்த மகத்தான... அவர் கூறினார், ''மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணினா லொழிய,'' நான் கடந்த இரவு கூறினது போல, ”உனக்கு ஜீவன் கிடையாது'' ஓ, என்னே , அந்த சபைக் கூட்டம் ''அந்த ஆள் பைத்தியாமாகி விட்டான். மருத்துவர்களும், விஞ்ஞானமும் இதைக் குறித்து... நல்லது, அந்த மனிதன் நம்மை மனிதர்களை தின்பவர்களாக்க முயல்கின்றான்'' என்றது. அவர் அதை விவரிக்கவேயில்லை. ஆகவே அவரை புறக் கணிக்கும் சமயமாக அவர்களுக்கு இருந்தது. 87அவரைச் சுற்றிலும் தொற்றிக் கொண்டிருந்த ஒரு கூட்ட பிரசங் கிக் குழுவை அவர் கொண்டிருந்தார், எல்லைக் கோட்டு விசுவாசிகள். அவர் கூறினார், நல்லது, ''நான் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகி றதை நீங்கள் காண்பீர்களானால் என்ன சொல்லப்போகிறீர்கள்?'' என்றார். ''முன்னிருந்த இடம்?“ நல்லது. நீர் பிறந்து வைக்கப்பட்ட தொட் டிலை நாங்கள் பார்த்திருக்கிறோம்; நீர் பிறந்த பட்டிணத்தை நாங்கள் கண்டிருக்கிறோம். இங்கேயிருக்கின்ற மலைகளில் நாங்கள் உம்மோடு மீன் பிடித்திருக்கிறோம். உம்மோடு நடந்திருக்கிறோம், உரையாடியிருக் கிறோம், இருந்தும் நீர் எங்கேயிருந்து வந்தீர் என்றா...? ஓ, என்னே , நீ ஒரு பைத்தியக்காரன் என்பதை இப்பொழுது கண்டுகொண்டோம்.'' ஆனால் மெய்யான, உண்மையான விசுவாசம் அசையாது, அந்த சீஷர்களால் அதை விவரிக்கக் கூடாதிருந்தது, ஆனால் அது அங்கே யிருந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். பாருங்கள்? அது தேவன் நாட்டின ஏதோ ஒன்றாக இருக்கவேண்டும். உலகத்தோற்றத்திற்கு முன்பாக இருந்த அவருடைய சிந்தனைகள் முழுவதுமாக மீட்கப்பட்ட ஒன்றை அவர் திட்டம் பண்ணினபோது. எபேசியர் 1:1-5, உலகத் தோற்றத்திற்கு முன்பு அவர் முழு காரியத்தையுமே அவர் திட்டம் பண்ணினார், அவருடைய சிந்தைகள், இதுவே அவருடைய சிந்தை களின் தன்மைகளாகும். 88இங்கிருக்கின்ற சபை ஊழியக்காரனைப் போன்று, அங்கே யூதாஸ் நின்றுக்கொண்டிருப்பதைப் கவனியுங்கள், “ஆம், வெளிச்சத்தில் நடந்து கொண்டிருந்தான்,'' பிணியாளிகளை சொஸ்தப்படுத்தும் வல்லமையை அவன் கொண்டிருந்தான். மத்தேயு 10 அதை நிரூபிக் கின்றது. அவர் அவர்களை அனுப்பினார். அவர்கள் திரும்பி வந்து பிசாசுகளும் அவர்களுக்கு கீழ்ப்படிகிறதைக் குறித்து களிகூர்ந்தார்கள். யூதாசும் அவர்களோடு இருந்தான். அது சரி. அவர், ''பிசாசுகள் உங்களுக்கு கீழ்படிகிறதற்காக சந்தோஷப்படாதீர்கள், ஆனால் ஆட்டுக்குட்டி யானவருடைய ஜீவ புஸ்தகத்தில் உங்களுடைய பெயர்களை எழுதப் பட்டிருப்பதற்காக சந்தோஷப்படுங்கள்'' என்று கூறினார். யூதாஸ் அவர் களோடு இருந்தான். ஆனால் தேவனுடைய முழு வார்த்தையையும் எடுத் துக்கொள்ள வேண்டிய சமயம் வந்தபோது, அவன் அதை புறம்பே தள்ளிப் போட்டான். ஆகவே, இன்றைக்கும் ஜனங்கள் அவ்வாறே செய்கின்றனர்! பாருங்கள்? ''மனுஷன் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்' என்று இயேசு கூறினார். ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளால் அல்ல, ஒவ்வொரு வார்த்தையினாலும் ''நல்லது சகோ. பிரான்ஹாம், ஒரு பகுதியை மட்டும்தான் நான் எடுத்துக்கொள்கிறேன். அதற்கு மேல் என்னால்...'' என்று நீங்கள் கூறலாம். அப்படியென்றால், நீங்கள் ஏவாள் பெற்றுக்கொண்ட வியாக் கியானியை உடையவர்களாயிருக்கிறீர்கள். ஆ... ஆ... அவன் ஒவ்வொரு பாகத்தையும் எடுத்து, ஒரு சிறு சொற்தொடரைத் தவிர மற்ற வற்றையெல்லாம் சரியான முறையில் வியாக்கியானம் செய்தான். அது ஒவ்வொரு சிறிய பாகமும் என்றிருக்கவேண்டும். வேதம் இந்த வழியாகக் கூறுமென்றால் அதற்குத் தனிப்பட்ட வியாக்கியானம் ஏதும் இல்லை. வேதம் என்ன சொல்லுகிறதோ அந்த வழியாகத்தான் இருக்க வேண்டும். எல்லா யுத்தங்களும், அழுகைகளும், சிறுபிள்ளைகள் மரண மும், வருத்தங்களும், மாரடைப்புகளுமாகிய யாவற்றிக்கும் தேவன் காரணமாயிருப்பாரென்றால், அவருடைய வார்த்தையின் ஒரு பாகத்தை ஒரு சொற்றொடரை அவிசுவாசித்ததுதான். முழு வார்த்தையைத் தவிர அதற்கு சற்று குறைவான ஒன்றிற்கு அவர் உன்னை அழைத்துச் செல்வாரா? இதை சிந்தித்துப்பாருங்கள்? அவர் மாறுவதில்லை. அவருடைய முதல் தீர்மானமானது, முடிவா னது. எப்பொழுதுமே அதே விதமானத் தீர்மானமாகத்தான் இருத்தல் வேண்டும். அதன் காரணமாகத்தான் அவர் ஒரு தனிப்பட்ட நபருடன் ஈடுபடுகின்றார், ஒரு குழுவுடன் அல்ல; (group) ஒன்று (one) பாருங்கள்? அதை அவரால் மாற்ற முடியாது. நல்லது, கூறுவதற்கென்று அநேக காரியங்களை நான் வைத்திருக்கிறேன், ஆனால் நான்.... 89இயேசுவின் மரணம் என்பது குறிப்பிடத்தக்க, தனிச்சிறப்பிற் குரிய காரியாமாகும். அது நம்பமுடியாதது ஆனாலும் உண்மையான ஒன்றாகும். உயிர்தெழுந்த காரியமும் நம்பமுடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் உண்மையே. நாம் அதை விசுவாசிக்கின்றோம். தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்கின்ற உயிர்தெழுதல் நம்ப முடியாத ஆனாலும் உண்மையான ஒன்று என்பதை ஒவ்வொருவரும் அறிவர். புதிய பிறப்பு என்பது நம்பமுடியாத ஆனாலும் உண்மையான ஒன்றாகும் (அது சரி) ஒரு மனிதனுடைய இயல்பை மாற்றக்கூடிய ஒன்று. அதைக் குறித்து சிறிது இங்கு பிரசங்கிக்கலாம். (பாருங்கள்) ஒரு அவிசுவாசி, அவனைக் கொண்டு ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் திடீரென்று அவன் கெட்டவன் என்ற நிலையிலிருந்து பரிசுத்தவானாக, எப்படி மாறமுடியும். விபச்சாரம் செய்கின்ற ஸ்திரீ ஒரு சகோதரி என் கின்ற நிலைக்கு எவ்வாறு மாற முடியும். அது நம்பமுடியாதது. ஆனாலும் உண்மை . ஒருவனும் அவனுக்கு ஒரு மருந்தையோ, அல்லது வேறு எதையோ கொடுப்பது அல்ல, மாறாக அவனை மாற்றுவதற்கு சர்வ வல் லமையுள்ள தேவனின் கரம் அவசியமாயிருக்கின்றது. அது மாத்திரமே ஒரு மனிதனை மாற்றமுடியும். நல்லது ஒரு மனிதன் மறுபடியும் பிறப்பதென்பது நம்பமுடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் உண்மையாகும் (அது சரி), புதிதாக்கப்பட்ட நம்பமுடியாத ஆனாலும் உண்மையான காரியமாகும். 90அதற்கான (சுவிசேஷத்தை பரப்புவதற்கென -தமிழாக்கியோன்) நன்றாக பயிற்றுவிக்கப்பட்டு அந்த காரியம் நிகழ வேண்டுமென காத்திருந்த அந்த மகத்தான சனதரீம் சங்கத்தை சேர்ந்த நபர்களுக்கு பதிலாக, பெந்தெகொஸ்தேயில், உலகமெங்கும் சுவிசேஷச் செய்தியை கொண்டு செல்லத்தக்கதாக நூற்று இருபது படிப்பறியாத ஒன்றுமறியாத மீனவர்களை தேவன் தெரிந்து கொண்டது நம்பமுடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் உண்மையே. ஆகவே ஒரு சிறிய காகிதத் துண்டில் தங்கள் பெயர்களைக் கூட எழுதத்தெரியாத ஒரு கூட்ட மீனவர்களுக்கு தேவன் தம்மை வெளிப்படுத்தினார். அதைச் செய்வதற்கென அந்த நாளில் இருந்த உலக மகா சங்கத்திற்கு பதிலாக தேவன் அத்தகைய ஒன்றைத் தெரிந்து கொண்டது நம்பமுடியாதது, ஆனால் உண்மையாகும். 91இன்றைக்கும் அதே காரியத்தைத்தான் அது செய்யும் “இந்தக் கல்லுகளினால் ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டாக்க அவர் வல்ல வராயிருக்கிறார்.'' தீர்க்கதரிசிகளின் தரிசனங்கள் எப்பொழுதுமே நம்பமுடியாதது, ஆனாலும் உண்மையான ஒன்றாய் இருக்கின்றது. எப்படி அந்த மனிதர் களால் ஊக்குவித்தலின் மூலம் தவறாத காரியங்களை முன்னுரைக்க முடிகின்றது. உங்களால் கிரகித்துக் கொள்ள முடியாத, மனித சிந்தைக்கு அப்பாற்பட்ட அந்தக் காரியம் எப்படிப்பட்டது, அது நம்ப முடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் உண்மையாகும். உள்மனம், உபமனம் என்ற இரண்டில் தேவன், இந்த உண்மையானக் காரியமான உப உள்மனதிற்குள் வந்து அம்மனிதனை பலவந்தப்படுத்தி வேறு ஒரு யுகத்தின் காரியங்களை பார்க்கச்செய்து, பின்பு நிகழ் காலத்திற்குக் கொண்டுவந்து, எதிர்காலத்தையும் அறிவிப்பதானது ஒருபோதும் தவறுவதில்லை. நம்பமுடியாவிட்டாலும் உண்மையாயிருக்கின்றது. அது அவ்விதமே சரியாக நடைபெறுகின்றது. கடந்த இரவு அவர் செய்தக் காரியம் மனித எண்ணத்திற்கு அப்பாற்பட்டதாயினும் உண்மையா யிருக்கின்றது. அதை நாம் விவரிக்கமுடியாது. 92என்னுடைய சிறுகுடும்பம் சென்று கொண்டிருந்த ஒரு குறிப் பிட்ட சபையில், அங்கே டூஸ்ஸானிலே ஒரு கூட்டத்தில் இருந்தனர். என் மகளுடன் செல்லும் அந்த பையன் அந்த சபையின் அங்கத்தினன் என்பதை அறியாமல், அந்த சபையின் போதகர் எழுந்து, “உங்களுக்கு தெரியுமா, சகோதரன் பிரான்ஹாமின் தந்தையும் தாயும் ஒரு சாகச குழுவில், சர்க்கஸில் பயணிப்பவர்கள் என்பதை நான் சற்று முன்னர் அறிந்தேன், அவர்கள் மந்திரவாதிகளாய் இருந்தனர், ஆகவே அவர் செய்யும் காரியமானது மந்திர வித்தையாகும்'' என்ற கூறினார். பாருங்கள்? வியாதியை சுகப்படுத்துவது ஒரு மந்திரச் செயலா? என்னு டைய தகப்பனும் தாயும் ஒரு சர்க்கஸிற்கு (circus) எப்பொழுதாகிலும் சென்றிருக்கின்றனரா என்பதை நான் சந்தேகிக்கிறேன். நான் ஒரு வாகனத்தைக் கொள்ளும் வரை அவர்கள் வாகனத்தைக் குறித்து அறிந்ததுமில்லை. அதை பார்த்ததும் இல்லை. ஆனால் நீங்கள் பாருங்கள், பிசாசானவன் எப்பொழுதும் அவ்விதமாகத்தான் கூறுவான். அவர்கள் இயேசுவிடம் ''அவர்கள் இவைகளை பெயல்செபூலினால் செய்கிறார்கள்'' என்று கூறினார்கள். தங்கள் சபையாருக்கு ஏதாகிலும் ஓர் பதிலை அவர்கள் கூறவேண்டிய தாயிருந்தது. இந்நாளுக்கென அது முன்னறிவிக்கப்பட்டிருக்கின்றது என்பதை ஏன் அவர்கள் வேத வசனத்தை ஆராய்ந்து பார்க்கக்கூடாது? அது மாறாத இயேசுகிறிஸ்து, நேற்றும், நேற்றைக்கு எப்படி இருந்தாரோ அவ்விதமாகவே அவர் இன்றைக்கும் இருக்கின்றார். எப்பொழுதும் அப்படியே இருப்பார். ஆனால் அதுதான் (பாருங்கள்?) தீர்க்கதரிசியின் தரிசனங்களைக் குறித்து படிப்பறிவில்லாத பெந்தெகொஸ்தேயினர் அவ்விதமாகத்தான் செய்ய முயற்சிக்கின்றனர். 2000 வருடங்களுக்குப் பின்பு இயேசு இன்னும் உயிரோடிருக்கிறார் என்பது கூட நம்பமுடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் உண்மையான காரியம் ஆகும். இப்பொழுது நான் கட்டாயமாக முடித்துவிடவேண்டும். ஏனெனில் நேரமாகிக்கொண்டிருக்கின்றது. இந்த நம்பமுடியாத ஆனாலும் உண்மையான காரியங்களை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர்- ஆசி) நிச்சயமாக. 93நான் இதைக் கூறலாமா. எனது நண்பரான இரக்கமுள்ள வயதான ஒரு மருந்து வியாபாரி ஒரு சமயம் என்னிடம் வந்து, 'சகோ. பிரன் ஹாமே, உங்களிடம் ஒன்றைக் கூறப்போகிறேன், நான் உங்கள் ஊழி யத்தை அறிந்திருக்கிறேன். நான் கூறப்போவது ஒருவேளை பையித்தியக் காரத்தனமாக இருக்கக்கூடும். இதுவரை நான் இதை ஜனங்களுக்குக் கூறியதில்லை. ஏனெனில் அவர்கள் அதை நம்பமாட்டார்கள்'' என்றார். அதற்கு நான், ''என்னிடம் கூறுங்கள்'' என்றேன். அவர் தொடர்ந்து, 'கடினமான காலமாகிய அன்று நான் இதே மருந்துக் கடையில் அமர்ந்திருந்தேன். என்னுடைய மகன் திருமணமாகி வேறு ஒரு பட்டிணத்தில் மருந்துக்கடை வைத்து இருக்கிறான். அவன் அன்று வாடிக்கையாளர்களுக்காக காத்துக் கொண்டிருந்தான். ஜனங்கள் மருந்து வாங்க வேண்டுமானால் அதற்கான மருந்து சீட்டை வாங்க வேண்டும் என்று உங்களுக்கு ஞாபகமிருக்கும். அந்த நேரத்தில் மருந்துக்கடையின் வாசலில் ஒரு இளம் தம்பதியினர் தள்ளாடிக் கொண்டே வந்தனர். அந்த ஏழை பெண்மணி ஒரு பிள்ளையை பெற்றெ டுக்க எதிர்பார்த்திருந்தாள். அவள் எழுந்து நிற்கவும் பெலனில்லாமல் நடந்து வந்துக் கொண்டிருந்தாள். 94இன்னுமாக அவர் கூறினார், “அந்த வாலிப நபர் என் மகனிடம் வந்து, ''மருத்துவர் எனக்கு மருந்து சீட்டு கொடுத்து, மருந்து வாங்கு வதற்காக இந்த பிரதேச மாகாண பிரதிநிதிக்குப் பதிலாக என்னை இங்கு அவசரமாக அனுப்பினார். என் மனைவிக்கு இந்த மருந்து மிகவும் தேவைப்படுகின்றது. அது இல்லாமல் அவளால் இருக்கமுடியாது, அவள் மிகவும் வியாதியுற்றிருக்கிறாள். இந்த மருந்தை உடனடியாக வாங்கி அவளுக்குக் கொடு என்று மருத்து வர் கூறியிருக்கிறார். நான் அந்த மருந்தைப் பெற்றுக்கொள்ள முடியுமா? அவளை இங்கு சற்று அமரப் பண்ண முடியுமா? இந்த மருந்து சீட்டிற்காக அதிகாரப்பூர்வ படிவத்தைப் பெற நான் மூன்று மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய தாயிருக்கும், ஆகவே அதற்கு முன்னரே இந்த மருந்தை இப்பொழுது எனக்குத் தரமுடியுமா?'' என்றான். அதற்கு என் மகன், “ஐயா நான் அதை உங்களுக்குச் செய்யமுடி யும். ஆனால் என்னால் இயலாது ஏனெனில் இங்கு பணம் கொடுத்து பொருள் வாங்கும் அடிப்படையில் சட்டம் அமைந்திருக்கின்றது'' என் றான். அதற்கு அந்த மனிதன், ''ஐயா, அந்த மருந்தை நாங்கள் அவ சியம் பெற்றுக்கொள்ள வேண்டுமே'' என்றான். தான் அச்சமயம் பின்புறத்தில் அமர்ந்து செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்ததாகக் கூறினார், வயதில் மூத்த அந்த நபர். அவர் கூறினார். “அப்பொழுது நான் என் மகனைப் பார்த்து, ”மகனே ஒரு நிமிடம் பொறு'' என்று கூறி, அந்த ஏழை பெண்மணியைப் பார்த்தேன். பின்பு நான், ''அந்த சீட்டிற்கான அதிகாரப்பூர்வ படிவத்தை பூர்த்திச் செய்து என்னிடம் கொடு'' என்று என் மகனிடம் கூறினேன். அதன் படியே என் மகன் செய்தான். பின்பு நான், அதை எழுதி முடித்து “அவன் இதற்கான பணத்தைக் கொடுக்கமுடியாவிட்டாலும் பரவாயில்லை. அது எந்தவித வித்தி யாசத்தையும் என்னில் உண்டாக்காது'' என்று நினைத்தேன். 95மேலும் அவர் கூறினார், “அவள் இருந்த இடத்திற்கு நான் சென்று, அவள் கையில் வைப்பதற்காக மருந்தை எடுத்தேன். அவள் கையில் வைத்தபோது, நான் உற்றுப் பார்த்தேன். அப்பொழுது நான் கண்டது, சகோ. பிரான்ஹாமே, நீங்கள் இதை நம்புவீர்களோ அல்லது நம்ப மாட்டீர்களோ நான் அறியேன் என்றார். மேலும் அவர், ''அதை கர்த்தராகிய இயேசுவின் கையில் நான் வைத்தேன், அவர் அங்கு நின்று என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன், இரத்தம் அவர் முகத்தில் வழிந்தோடிக் கொண்டிருந்தது, அவருடைய தலையில் காய அடையாளங்கள் இருந்தன. அப்பொழுது நான் என் கண்களை மூடிக் கொண்டு தள்ளாடுபவனைப் போல் காணப்பட்டேன். அந்த மனிதன் என்னிடம், 'ஐயா, உங்கள் உடம்பிற்கு ஒன்றுமில்லையே'' என்றான். அதற்கு நான், 'இல்லை'' என்றேன். நான் திரும்பிப் பார்த்தபோது அந்தப் பெண்மணி அந்த மருந்துசீட்டை தன் கையில் ஏந்திக்கொண்டிருந்தாள்'' என்று கூறினார். “இதை நீங்கள் நம்புகிறீர்களா?'' என்று அவர் கூறினார். அதற்கு நான் ''நிச்சயமாக நம்புகிறேன். மிகச்சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்'' என்று இயேசு கூறினார். நம்பமுடியாத ஒன்று, ஆனாலும் நிச்சயமாக உண்மையானதல்லவா. 96இங்குள்ள சகோதரர்களாகிய அநேகர், ஆதிகாலத்து பரிசுத்த வான்களைக் குறித்து எழுதப்பட்டுள்ள காரியங்களைப் படித்திருப்பீர்கள், எப்படி தேவன் அவர்களோடு இடைப்பட்டார் என்பதும் எப்படி காரியங் கள் நிகழ்ந்தேறியது என்பது நம்பமுடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் உண்மையானதாகும். நாம் நம்பமுடியாத ஆனாலும் உண்மையான காரியங்களில் விசுவாசம் கொள்கிறோம். அவைகள்... அத்தகையோரில், பரிசுத்த மார்டீனைக் குறித்து நான் நினைவு கூறுகிறேன். பாருங்கள், அவர் ஒரு போர் வீரன் ஆவார். தன்னுடைய தகப்பனின் பணியை தொடர வேண்டும் என்று பிரான்ஸ் தேசத்தில் அவர் பணிக்கப்பட்டார். ஆனால் அவர் ஒரு இரக்கமுள்ள விசுவாசியா யிருந்தார். அவருடைய தாய் ஒரு விசுவாசியாயிருந்தாள். ஆகவே ஒரு குளிரான நாளில்..... அவர் மிகவும் தாழ்மையுள்ள ஒரு மனிதன் ஆவார், ஆகவே போர் வீரன் மிகவும் நேர்த்தியாக, ஒழுங்காக காணப்பட வேண்டும் என்பதற்காக அவருடைய காலணிகளை பளபளப்பாய் துடைக்கத்தக்கதாக ஒரு வேலைக்காரனை வைத்தார்கள். மார்டீன் தனது ஊழியக்காரரின் காலணிகளை துடைத்தார். அவர்களுடைய பாரம் பரியங்களுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் அவர் உடன்படவில்லை. எல்லா மனிதர்களும் சரிசமமாகவே உண்டாக்கப்பட்டனர் என்று அவர் நினைத்தார். 97ஆகவே ஒரு குளிரான நாளிலே அவர் டோராஸ் பட்டிணத்து வாசலில் நின்று கொண்டிருந்தார். அவர் உள்ளே சென்று கொண்டிருந்த போது, தெருவில் ஒரு வயதான பிச்சைக்காரன் அங்கே படுத்துக் கிடந்தான் என்று கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் அதை அநேகமுறை படித்திருப்பீர்கள் என்பதில் சந்தேகமேயில்லை. அங்கே அந்த தெருவில் ஒரு பிச்சைக்காரன் படுத்துக்கிடந்தான். மரணத்தருவாயில் உறைந்து கிடந்தான். மிகவும் பயங்கரமான குளிர்க்காலம். அவன் ஜனங்களைப் பார்த்து, ''வாருங்கள்! யாராகிலும் எனக்கு ஒரு போர்வையைத்தர இயலுமா? நான் இந்த இரவில் உரைந்து போய்விடுவேன். இந்தத் தரையில் இவ்விதமாக நான் இருக்கமுடியாது, யாராகிலும் ஓர் போர் வையைக் கொடுக்கமுடியுமா?“ யாரும் அவனுக்கு உதவிச் செய்ய வில்லை. அவன், ''யாராகிலும் தயை கூர்ந்து இரக்கமாயிருங்கள். நான் ஒரு வயதானவன், மரித்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய நாளின் காரியங்களை முடித்துவிட்டேன், எனக்குத் தெரிந்தமட்டும் நலமானதை செய்துவிட்டேன். நான் இவ்விதமாக மரிக்கவிடாதிருங்கள், இப்பொழுது நான் உரைந்து செத்துக்கொண்டிருக்கிறேன், யாராகிலும் என்னை போர்த்த முடியுமா?'' என்றான். அப்பொழுது அங்கு பரி. மார்டீன் நின்றுக்கொண்டு அதைப் பார்த்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் ஒரு கிறிஸ்தவ விசுவாசி யல்ல, இன்னுமாக அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் அங்கு நின்றுக்கொண்டு அதை கவனித்துக்கொண்டிருந்தார். அங்கு ஜனக் கூட்டம் சென்றுக் கொண்டிருந்தது. அவர்களில் அநேகரினால் அவனுக்கு உதவிச் செய்யக் கூடும். ஆனால் யாரும் அதைச் செய்ய வில்லை. அவரிடம் ஒரே ஒரு கோட், அங்கிதான் இருந்தது. அது அவருடைய இராணுவ அங்கியாயிருந்தது. அவர் அப்பொழுது தன் கத்தியை உருவி அந்த அங்கியை இரண்டாக கிழித்து ஒரு பாதியினால் அந்தப் பிச்சைக்காரனைப் போர்த்திவிட்டு சென்று விட்டார். அங்கியின் ஒரு பாதியை அணிந்துகொண்டு அவர் தெருவில் சென்று கொண்டிருந்தபோது ஜனங்கள் எல்லாரும் அவரைப் பார்த்து பரியாசச் சிரிப்பு சிரித்தனர். “என்னே ஒரு வேடிக்கையாகக் காணப் படுகின்ற தமாஷான இராணுவ வீரன்'' என்று அவரை பரியாசம் செய்தனர். அந்த இரவில் அவர் விழித்துப் பார்த்தபோது, அந்த பிச்சைக் காரனை எந்த பாதி அங்கியினால் போர்த்தினாரோ, அதே அங்கி சுற்றப் பட்டவராக இயேசு அவருடைய படுக்கையருகில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது மார்டீன், ''மிகச் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவருக்கு எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்'' என்பதை அறிந்துக்கொண்டார் அவருடைய அழைப்பானது நம்பமுடியாத ஏதோ ஒன்று, ஆனாலும் உண்மையாகும். அவர் அந்த காலத்தின் செய்தியாளனாக இருந்தார். அந்த நாளில் இருந்த கத்தோலிக்க மார்க்கத்தின் எல்லா துன்மார்க்கத்திற்கு எதிர்த்து வார்த்தைக்காக அவர் நின்றார். தேவன் அவரைத் தெரிந்து கொண்டு நம்பமுடியாத ஆனாலும் உண்மையா யிருந்த ஒன்றின் மூலம் கிறிஸ்துவைக் காண வைத்தார். 98நம்பமுடியாத ஆனாலும் உண்மையாயிருக்கின்ற காரியங்களை ஒன்றன்பின் ஒன்றாக நம்மால் காணமுடியும் சகோதரர்களே. நம்ப முடியாத ஆனால் உண்மையான அந்த மிக மகத்தான காரியம் நம்மை எதிர்நோக்கியிருக்கின்றது. தேவ எக்காளமானது தொனிக்கையில் காலம் என்பது இனி இராது; அப்பொழுது நித்தியமானது பிரகாசமான, அழகான விடியற்காலமாக பிறக்கும். உயிர்த்தெழுதல் நிகழும் போது அவரை மத்திய ஆகாயத்தில் சந்திக்கத்தக்கதாக நாம் எடுத்துக் கொள் ளப்பட்டு, அவரோடு இருக்கத்தக்கதாக நாம் செல்கின்ற காரியம் நம்ப முடியாத ஆனாலும் உண்மையாயிருக்கின்றவைகளின் கடைசி காரிய மாக இருக்கும். அதுவரைக்கும் கிறிஸ்துவாகிய தேவனுடைய வார்த் தைக்கு நாம் உண்மையுள்ள ஊழியக்காரர்களாக இருப்போம். நாம் ஜெபிப்போமா? 99பரலோகப் பிதாவே, எங்களை சகோதரர்களாகச் செய்கின்ற அந்த இரத்தத்திற்காக இந்த காலை வேளையில் நாங்கள் உமக்கு நன்றியை ஏறெடுக்கின்றோம். பரலோகத்திலும், பூலோகத்திலும் நிறுவப்படப் போகின்ற அந்த மகத்தான இராஜ்ஜியத்தில் அவரோடு ஒன்றாக நாங்கள் இருக்கத்தக்கதாக எங்களுக்காக தம் ஜீவனைக் கொடுத்த தேவனுடைய குமாரனுக்காக நாங்கள் உமக்கு நன்றியை ஏறெடுக்கின்றோம். ''காத்துக் கொண்டிருக்கின்ற மணவாட்டியை ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தர் வந்து அழைத்துச்சென்று பின்பு ஏற்படும் மகிழ்ச்சியான 1000ம் வருட அர சாட்சிக்காக எதிர்நோக்கியிருக்கிறோம்,'' சிறிய மணவாட்டி மரம். ஏதேன் தோட்டத்தில் இருந்த ஜீவவிருட்சமான ஜீவ அப்பம் அவரே. ஆகவே அவருடைய சிறிய மணவாட்டி ஒரு மரமாகும், கடைசி காலத்திற்குரிய அந்த மணவாட்டி மரமாயிருக்கின்றாள். எல்லாம் பரீட்சிக்கப்பட்டது. ஆனால் கனியானது முதிர்வடைய மகத்தான தேவவல்லமைகள் கிளைகளை களையெடுத்தது. நாங்கள் அதனுள் சேர்க்கப்பட அருளிச் செய்யும் கர்த்தாவே. எங்களுக்கு நித்திய ஜீவனைத் தாரும். நாங்கள் இந்த பட்டிணத்தில் இருக்கையில், ஒரே ஒரு காரியத் தைத் தான் நாங்கள் ஒன்றாகப் பெற்றிருக்கின்றோம். நாங்கள் தேவ னுடைய வார்த்தையை விசுவாசிக்கின்றோம். நாங்கள் இயேசு கிறிஸ்து விற்குள் விசுவாசிக்கின்றோம். அவர் மரித்துப்போனவர் அல்ல, ஆனால் ஜீவிக்கின்றார் என்று நாங்கள் விசுவாசிக்கின்றோம். ஆகவே அவருடைய வார்த்தைகள், இந்த மணி நேரத்திற்குரிய வாக்குத்தத்தம் இப்பொழுது வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதுதான் அந்த கடைசி மணி நேரங்கள். இதுதான் அந்த கடைசி அடையாளம். வாக்குத்தத்தம் பண் ணப்பட்ட அந்த குமாரனுடைய வருகை சமீபமாய் இருக்கின்றது. 100பூகோளவியல்படி இப்பூமியை நாங்கள் காண்கிறோம். அந்த அடையாளங்களை நாங்கள் காண்கின்றோம்; பற்பல இடங்களில் பூமி யதிர்ச்சிகள், இராஜ்ஜியத்திற்கு விரோதமாய் இராஜ்ஜியங்கள் போன்ற வற்றைக் காண்கிறோம். முன்னறிவிக்கப்பட்டக் காரியங்கள் நிகழ்வதை நாங்கள் காண்கிறோம். வானத்தில் பயமுறுத்தும் காரியங்களையும், யாராலும் விவரிக்க இயலாத பறக்கும் தட்டுகள் போன்றவைகளை காண்கிறோம். மனிதருடைய இருதயங்கள் கலங்குகின்றன, பூமியின் மேல் ஆராயும் நியாயத்தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அணு குண்டுகள் எல்லா இடங்களிலும் தொங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு மணி நேரத்தில் முழு அழிவைக் கொண்டு வரக்கூடியதான சக்திவாய்ந்த ஏவுகணைகளை நாங்கள் காண்கிறோம். எங்களுக்கு மேலாக வாயு மண்டலம் பரவியிருந்து வானத்திலிருந்து அக்கினிகளை பொழிந்து இப்பூமியை அழிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறதை காத்திருக் கின்றதை நாங்கள் காண்கிறோம். ) அந்த வாக்குத்தத்தைச் செய்த இயேசுவிற்காகவும் நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம். ''உங்களிடத்தினின்று வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்திற்கு எழுந்தருளிப் போனாரோ அப்படியே மறுபடியும் வருவார்'' என்று கூறப்பட்டிருக்கின்றது. அந்த மகிழ்ச்சிக் குரிய நாள் வரத்தக்கதாக நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம். 101கர்த்தாவே, இங்குள்ள எங்களில் பலர் சிறுவயதிலிருந்தே உமக்கு ஊழியம் செய்ய எங்களால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எவ்விதம் செய்யவேண்டுமோ அவ்வாறு முன்வைத்து இருக்கிறோம். கர்த்தாவே, இந்த மணி நேரத்தைக் காணக்கூடாமல் எங்கள் கண்கள் குருடாயிருக்க விடாதேயும். ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் பார்க்க என் கண்களைத் திறந்திடும் கர்த்தாவே. தேவன் வாக்குத்தத்தம் செய்த ஒவ்வொன் றையும் “ஆமென்'' என்றவிதமாக நான் அழைக்க திறனுள்ளவனாக்கும். அருளிச் செய்யும் கர்த்தாவே, எங்களுக்கு மகத்தான கூடுதலை அளித் தருளும். இங்குள்ள என்னுடைய சகோதர, சகோதரிகளை ஆசீர்வதியும், தங்கள் கணவன்மார்கள் ஊழியத்தில் காணப்பட அவர்களை பராமரிக் கும் வயது சென்ற சில சிறிய சகோதரிகள் இங்கு நின்றுக்கொண்டிருக் கின்றனர். ஆகவே தேவனே நீர் அவர்களுக்கு ஆசீர்வாதத்தை அளிப்பீர். அந்த மனிதர்கள் பயங்கரமான கடல்களினூடே பிரயாணம் செய்து பந்தயப்பொருளைப் பெறத்தக்கதாக போராடுகிறவர்களாயிருக்கின்றனர். இந்த காலை வேளையில், இந்த மேஜையைச் சுற்றி அமர்ந்துகொண்டு, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கையில், எங்களுடைய தலை கள் நரைத்துக் கொண்டிருக்கின்றது. நீண்ட காலமாக நாங்கள் யுத்தம் செய்திருக்கின்றோம். ஒருவேளை மற்றுமொரு காலை உணவு கூடுதலில் நாங்கள் சந்திக்க இயலாமல் போகலாம், எங்களுக்குத் தெரியாது. 102கர்த்தருடைய வருகை ஒருவேளை இன்றோ, நாளையோ, அல்லது அடுத்த வருடமோ இருக்கலாம். அது எப்பொழுது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மாத்திரம் நிச்சயம்; வானங்களில் இருக்கப் போகின்ற ஒரு விருந்தில் நாங்கள் சந்திப்போம் என்று எங்களுக்கு வாக் குரைக்கப்பட்டிருக்கிறது. அப்பொழுது ராஜா வெளியே வந்து எங்கள் கண்களிலுள்ள எல்லாக் கண்ணீரையும் துடைத்து “கவலைப்படாதீர்கள். இப்பொழுது எல்லாம் முடிந்தது. உலகத் தோற்றத்திற்கு முன்பு உங் களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசியுங்கள்'' என்பார். நாங்கள் இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவகுமாரர்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்போது, ஓ, பிதாவே இதை எங்களுக்கு அருளிச்செய்யும். எங்கள் இருதயங்கள் யாவும் ஒரே துடிப்பாயிருக்கட்டும். சற்று நேரத்திற்கு முன்பு, ஒரு தம்பதியினர் பிரிந்து போகயிருந்த சூழ்நிலையில் நான் கூறின விதமாக... தேவனே, நாங்கள் ஒருவரையொருவர் விட்டு பிரிந்து போகும் இத்தருணத்தில் ஒன்றுமட்டும் எங்களுக்கு பொதுவாக இருக்கின்றது. மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, ஒருத்துவம், கூட்டு சபைகள் ஆகிய எங்கள் எல்லாரோடும் ஒன்று பொது வாயுள்ளது. அது இயேசுகிறிஸ்து. நாங்கள் பாரம்பரியங்களையும், கோட்பாடுகளையும் குறித்து சண்டையிடும் ஸ்தாபனங்களாக இங்கு கூடி வரமுடியாது. மாறாக எங்களுக்குப் பொது காரியமான இரட்சகரான இயேசு கிறிஸ்து வின் இரத்தத்தின் கீழ் மட்டுமே நாங்கள் கூடிவர முடியும். இத்தகைய பொதுவான அடிப்படையின் மேல், கர்த்தாவே, இந்த விலையேறப்பெற்ற விசுவாசத்தை பெற்ற இச்சகோதரர்களை நான் சந்திக்க வந்திருக்கிறேன். இந்த வருகின்ற வாரம் நாங்கள் யாவரும் எங்க ளுக்குள் உள்ள எல்லாவற்றாலும் கர்த்தருடைய மகிமையானது திரும் பவும் சபைக்குள் கொண்டு வரப்பட ஊழியம் செய்வோமாக. எங்க ளோடு எல்லாவற்றையும் உமக்கு சமர்ப்பிக்கிறோம். எங்கள் முயற்சி களை இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதியும். ஆமென். 103சகோதரர்களே, உங்களை ஆசீர்வதிக்கிறேன். சகோ. ராய் அவர் களே, நீங்கள் ஏதாகிலும் கூற வேண்டுமா? (ஒலி நாடாவில் காலி யிடம் -ஆசி) வார்த்தையானது எவ்வளவு தவறாததாக இருக்கின்றது! இயேசுவே அந்த வார்த்தையாயிருந்தார். நாம் அதின் பேரில் ஒத்திருக்கிறோம் அல் லவா? இயேசுவின் பெற்றோர் பண்டிகையில் அவரை விட்டு மறந்து, மூன்று நாள் பிரயாணம் செய்து பின்பு அவரைக் காணாமற்தேடினார்கள். அவர்கள் திரும்பிவரவேண்டியதாயிருந்தது. ஆசாரியர்களோடு அவர் விவாதம் செய்துக்கொண்டிருந்ததை நாம் கண்டோம். இந்த சிறுவனை குறித்து அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவர் பள்ளிக்குச் சென்றார் என்பதைக் குறித்து நமக்கு ஒரு குறிப்பும் இல்லை. ஆனால் ஒரு 12 வயது சிறுவனாக இந்த அளவு உயரம் உடையவராக இருந்தார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவருடைய தாயாரின் வாக்குமூலத்தை கவனியுங்கள். இப்பொழுது இங்கு யாராகிலும் கத்தோலிக்கர் இருப்பின் உங் களை மதிப்பிற்குறைய நான் இதைக்கூறவில்லை. அவளை தேவனுடைய தாய் என்று அழைப்பவர்கள் யாராவது இங்கு இருப்பீர்களானால் தேவனுக்கு அவள் எவ்விதம் தாயாராக முடியும்? பாருங்கள்? அவள் தேவன் உபயோகித்த ஒரு அடைகாக்கும் கருவியாயிருந்தாள். அவ ருக்குத் தாயல்ல... அவள் தேவனுக்குத் தாயாயிருப்பின் அவரை விட அதிக ஞானம் படைத்தவளாக இருக்கவேண்டும் பாருங்கள். அவள் தாயாயிருப்பின் அவள் அவருக்கு ஜீவனைக் கொடுத்திருக்க வேண்டும். தேவனுக்கு அவள் ஜீவன் கொடுப்பதா? கவனியுங்கள். 104இங்கே பாருங்கள். அவள் “இதோ உன் தகப்பனும் நானும் இர வும் பகலும் கண்ணீரோடே உன்னைத் தேடினோமே'' என்று கூறினாள். தன்னுடைய முதல் சாட்சியை அவள் குலைத்துப்போட்டாள். யோசேப்பை அவருடைய தகப்பன் என்று அவள் அழைத்தாள். இப்பொழுது இந்த 12 வயது நிரம்பிய பையன் தான் பேசுவது என்னவென்று அறியாமல் கூறினதை கவனியுங்கள். அவர் ஒரு சிறியப் பையனாக இருந்தார். ஆனால் அவர் வார்த்தையாக இருந்தார். பாருங்கள்? அவர் அவர்களைப்பார்த்து, “என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா?'' என்றார். (லூக் 2:49) இங்கு வார்த்தை தவறை திருத்துகிறதை கவனிக்கிறீர்களா? பாருங்கள்? அவர் உயிர்த்தெழுந்த பின்பு அவள் சாட்சிக்கொடுத்தாள். அப்பொழுது எல்லாம் முடிந்தது. ''உன் தகப்பனும் நானும் விசாரத் தோடே உன்னை. தேடினோமே“ பரிசுத்த ஆவியினால் இந்தக் குழந் தையை நான் கர்ப்பம் தரித்தேன் என்று கூறிவிட்டு, பின்பு ”யோசேப்பு“ அவர் தகப்பன் என்று அழைப்பதெப்படி? இந்த 12 வயது சிறுவனுக்கு ஞானம் என்பதே கிடையாது. ஏனென்றால் அவர் ஒரு சிறுவன். பிதாவானவர் அச்சமயத்தில் அவருக்குள் வாசமாயிருக்கவில்லை; ஏனெனில் பிதாவானவர் அவர் ஞானஸ்நானம் பெறும் போதுதான் வந்தார். “தேவ ஆவியானவர் வரு வதையும் அவருக்குள் சென்றதையும் அவர் கண்டார்'' பாருங்கள்? ஆனால் இங்கு கவனியுங்கள்; இந்த 12 வயது சிறுவன், அவர் வார்த்தையாயிருந்து அபிஷேகிக்கப்பட்டவராக (பாருங்கள்?) அபிஷேகிக்கப்பட வேண்டியவராக இருந்தார். ஆகவே இங்கு அவர், ”என் பிதாவுக்கடுத் தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா?'' என்றார். மரியாள், “நானும் உன் தகப்பனாரும் உன்னைத் தேடினோம்” என்றாள். யோசேப்பு அவருடைய தகப்பனாயிருந்திருப்பாரானால், அவர் யோசேப்போடே இருந்து அவனுடைய தொழிலாகிய கதவு செய்தல், போன்றவைகளில் ஈடுபட்டிருந்திருப்பார். ஆனால், அவர் அங்கு தேவாலயத்திலிருந்து ஸ்தாபனங்களை நோக்கிக் கொண்டிருந்தார் பாருங்கள்? “என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா?'' என்றார். தேவ வார்த் தையானவர் அந்த சிறுவனிலிருந்து எவ்விதம் தவறை திருத்தினார் என்பதை கவனியுங்கள்! ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.